தொழுகையில் கண்களை மூடலாமா?

بسم الله الرحمن الرحيم தொழுகையில் கண்களை மூடலாமா? தொழுகையில் கண்களை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மூடிக்கொள்வது குற்றமில்லை. உதாரணமாக ஒருவர் தொழுகையை ஆரம்பித்து தொழும்போது, முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது தொழுகையின் கவனத்தை திருப்பக்கூடிய ஏதாவது ஒன்றை அவர் கண்டு கொண்டால் அவர் அச்சமயத்தில் கண்களை மூடுவது குற்றமாகாது. காரணமின்றி கண்களை மூடுவது, இன்னும் அது இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று கருதுவது ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறு கண்களை மூடுவது வெறுக்கத்தக்கதாகும். ... Read more

ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி: ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள். இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் ... Read more

ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா? பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934) அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் ... Read more

ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது “சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா? பதில்: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் ... Read more

நபியின் கப்ரின் அருகே சப்தத்தை உயர்த்தி பேசுவது தவறா?

நபி صلى الله عليه وسلم அவா்களின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவதற்கு தடை உள்ளது, அவாின் கப்ரின் அருகில் அவ்வாறு செய்வதும் தவறான செயலா? பதில்: நபி صلى الله عليه وسلم அவா்களின் கப்ரின் அருகில் சப்தத்தை உயர்த்தி பேசுவது பின் வரும் குர்ஆனிய ஆயத்தின் சட்டத்தில் நுழையும். Al-Hujurat 49:2 وَلَا تَجْهَرُوا۟ لَهُ بِٱلْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை ... Read more

நோன்பு காலத்தில் கண்ணுக்கு சொட்டு மருந்து இடலாமா

கண்ணிற்கு இடும் சொட்டு மருந்தின் சுவை தொண்டையை அடைந்தால், நோன்பு முறிந்து விடுமா?அவ்வாறு நோன்பு முறிந்து விடுமென்றால் , நான் நோன்பின் பகல் பொழுதில் சொட்டு மருந்து பயன் படுத்தினேன் பின்னர் உறங்கிவிட்டேன், மருந்தை நான் விழுங்கினேனா இல்லையா என்று தெரியவில்லை, இதன் சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. கண்ணிற்கு பயன் படுத்தும் சொட்டு மருந்துகள் நோன்பை முறிக்குமா இல்லையா எனும் விடையத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஷேக் அல் ... Read more

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம். இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் ... Read more

இஸ்ரா மிஃராஜ் நாள் நோன்பு வைப்பது சுன்னத்தா

கேள்வி: இஸ்ரா மிஃராஜ் இரவின் நாளில் நோன்பு நோர்பது, கடமையா, அல்லது விரும்பத்தக்கதா, அல்லது பித்அதான காரியமா? உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய கூலியை கொடுக்கட்டும். பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே, அல்லாஹ்வின் ரஸூலின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் உண்டாகட்டும். நொன்புகளில் ரமதான் மாதத்தை போன்று கடமையான நொன்புகளும் உள்ளன, முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்கள், அரஃபா நாள் போன்ற கடமை அற்ற நோன்புகளும் உள்ளன. இந்த நாட்களில் நோன்பு ... Read more

சோதனைக் காலங்களில் கேட்கும் துஆ

சோதனை ஏற்பட்டால் ஒரு மனிதர், என்ன கூறுவது மிகச் சிறந்தது? பதில்: அல்லாஹ் தெளிவுபடுத்தியது போன்று:  الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, ... Read more

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா?

ரஜப் மாதத்தின் முதல் நாள், பின்வரும் துஆவை கேட்பது சுன்னத்தாகுமா என்று அறிய விரும்புகிறேன் اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ  அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான, வ பல்லிக்னா ரமதான. யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக. தூய்மை மற்றும் கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்விடம், ஆதாரப்பூர்வமான சுன்னத்தின் அடிப்படையில் செயல்படும் பாக்கியத்தை கொடுக்குமாறு ... Read more