ரமழானில் நோன்பு நோற்ற ஒருவர்,பகலில் உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம் என்ன? அதனை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?

பதில்:

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்

ரமழானில் நோன்பு நோற்ற நிலையில், பகல் (நேரத்தில்) உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம்

மேற்கண்ட பாவச்செயலுக்குறிய பரிகாரமானது பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றாக அமையும். நமது விருப்பத்தின் அடிப்படையில் (மூன்றில் ஏதேனும் ஒன்றை) தேர்வு செய்ய முடியாது. (அதாவது, முதல் பரிகாரத்தை செய்ய சக்தியிருந்தும், இரண்டாவது பரிகாரத்தை நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படாது).

அவையாவன :
1. அடிமையை விடுவித்தல்; ஒருவரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால்,…⤵️

2. ஒருவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்;
அவரால் அதைச் செய்ய முடியாவிட்டால்,…⤵️

3. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு அடிமையை விடுவித்தால், இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க தேவையில்லை, அடிமையை விடுவிப்பது அல்லது நோன்பு நோற்பது போன்ற முதல் இரண்டு செயல்களைச் செய்ய முடியாத பட்சத்தில் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பது அவருக்கு அனுமதிக்கப்படும்.

(ஸவூதி நாட்டு) மூத்த அறிஞர்களைக் கொண்ட குழு கூறியதாவது :

“ரமலானில் பகலில் உடலுறவுக்கான பரிகாரம் மேலே குறிப்பிட்டுள்ள 3 விடயங்களில் ஒன்றை செய்வதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

உதாரணமாக,
ஒரு அடிமையை விடுவிக்க முடிந்த ஒருவரால் நோன்பு நோற்க செல்ல முடியாது; மேலும் நோன்பு நோற்க முடிந்த ஒருவரால் ஏழைகளுக்கு உணவளிக்க செல்ல முடியாது. ஒரு அடிமையை விடுவிக்கவோ அல்லது நோன்பு நோற்கவோ முடியாத காரணத்தால் ஏழைகளுக்கு உணவளிக்க ஒருவர் நகர்ந்தால், அவர் (உணவின்பால் தேவையுள்ள) நோன்பு வைக்கும் அறுபது மக்களுக்கோ அல்லது அறுபது ஏழைகளுக்கு இப்தார் வழங்குவதற்கோ அனுமதிக்கப்படுகிறார்.

(அவர் வழங்க வேண்டிய உணவுடைய அளவு என்னவெனில்) உள்ளூரின் முக்கிய உணவானது ஏழைகள் நிரம்ப சாப்பிடுவதற்கு போதுமானது. ஒருமுறை அவரது சொந்தக் கணக்கிலும், ஒருமுறை அவரது மனைவி சார்பாகவும் அல்லது 60 ஏழைகளுக்குத் தன் சார்பாகவும், மனைவி சார்பாகவும் அறுபது ஸாஃ’வை [1] ஒவ்வொருவருக்கும் கொடுக்கலாம், இது தோராயமாக 3 கிலோவுக்குச் சமம்.

[குறிப்பு : [1] ‘ஸாஃ’ என்பது நபிகளார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு முகத்தல் அளவையாகும்.
திறமையான பல ஆய்வாளர்களின் ஆய்வின் படி கிட்டத்தட்ட ஒரு ‘ஸாஃ’ என்பது 2.5 Kg ஆகும்; 3kg ஆக கொடுப்பது இன்னுமே சிறந்தது]

📝 பார்க்க : ஃபதாவா அல்-லஜ்னா அத்-தாயிமாவின் (9/245)

இந்த பரிகாரத்தை வழங்கக் கடமைப்பட்டவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றால் (மேலுள்ள பட்டியலின் முதல் இரண்டு செயல்களில் ஒன்றை அவரால் செய்ய முடியாததால்), அவர் தனது சார்பாக ஏழைகளுக்கு உணவளிக்க நம்பகமான தொண்டு நிறுவனத்தை நியமிப்பதில் தவறில்லை. அல்லது ஏழைகளுக்கு நேரடியாக அவர் சார்பாக இந்த உணவை அவர்கள் விநியோகிக்கலாம்.

மனைவியின் சார்பாகப் பரிகாரம் செய்ய கணவருக்கு மனைவி அதிகாரம் அளிக்கலாம்.

தனது தாய்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இருந்தால் தேவை அதிகமாக இருந்தால், உங்கள் சொந்த தாய்நாட்டிற்கு பரிகாரத்தை அனுப்புவதில் எந்த தவறும் இல்லை, ஏனெனில் இது ஒரு பெரிய நோக்கத்திற்கு உதவும்.

இமாம் இப்னு முஃப்லிஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

மிகச் சரியான (மார்க்க) நிலைபாட்டின்படி சத்தியம், பரிகாரம் மற்றும் உயிலை மாற்றுவது போன்றவை (இஸ்லாமிய மார்க்கத்தில்) அனுமதிக்கப்படுகிறது.

📝 பார்க்க : அல்-ஃபுரூ’ (4/265)

மனைவி சம்மதித்தால்,மனைவி சார்பாக அவரது கணவர் இந்த பரிகாரத்தை கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

(நீண்ட ஃபதாவா -வின் ஒரு பகுதி)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்…

Source: Islam Q&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply