ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி: ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள். இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் ... Read more

ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது “சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா? பதில்: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் ... Read more

பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா?

கேள்வி:ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா? பதில்:அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இது விடயத்தில் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகளில் தொழுவதே மிகச் சிறந்தாகும் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தினத்தில் இரண்டு பாங்கு சொல்லுதல், இதுபோன்ற சுன்னாவுக்கு முரணான செயல்கள் நடைபெறக்கூடிய அல்லது இறை நிராகரிப்பை ஏற்படுத்தாத பித்அத் நடைபெறக்கூடிய பள்ளியில் தொழுவது கட்டாயமாகும். ஏனெனில் ... Read more

ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா? பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், ... Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

கேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், ... Read more

‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:   கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் ... Read more

ஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமா?தற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா?

கேள்வி:ஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபிﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள்.ஆனால் ஒருவர் தற்பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமா?தற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபாண்டு) கால்சட்டை –கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா? பதில்: கால் சட்டை,வேஷ்டி போன்ற ஆடைகள் கணுக்காலுக்கு கீழே தொங்கவிடுவது பொதுவாக ஹராமாகும்.அவ்வாறு அணிவது தற்பெருமையும்,ஆணவத்தையும் அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரியே.அவ்வாறு அணிவதே தற்பெருமைக்கும்,ஆணவத்திற்குமான வாய்ப்பாக உள்ளது என்பதை ... Read more

Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன?

கேள்வி:Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன? முதலாவதாக; Democracy என்பது அரபு சொல் அல்ல கிரேக்க மொழியிலிருந்து தான் இச்சொல் பெறப்பட்டது.     இரண்டு வார்தைகளை உள்ளடக்கிய சொல்லாகும்ஒன்று Demos பொதுமக்கள்  இரண்டாவது   kratia ஆட்சி இதன் பொருள் ஜனநாயக ஆட்சி அல்லது அரசு என்பதாகும் . இரண்டாவதாக;ஜனநாயகம் என்பது இஸ்லாதிற்கு எதிராண( system) அமைப்பாகும் எப்படி என்றால்  சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடிமக்களுக்கும் அல்லது ... Read more

பணப்பறிமாற்றத்திற்காக வங்கிக்கு செலுத்தும் மேலதிக தொகை(Extra Charges) கான மார்க்க சட்டம் என்ன?

கேள்வி: பணப்பறிமாற்றத்திற்காக வங்கிக்கு செலுத்தும் மேலதிக தொகைக்கான மார்க்க சட்டம் என்ன? பதில்: இவ்வாறான வங்கி சேவைகள்( ஹவாலா) என்று அழைக்கப்படும். அறிஞர்கள் இதற்கு விளக்கமளிக்கையில் : ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி ஒரு வங்கிக்கோ அல்லது பிற நிறுவனத்திற்கோ நாட்டிற்குள் அல்லது வெளி நாட்டுக்கோ அல்லது அந்த வங்கியின் ஒரு கிளைக்கோ – குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அனுப்பி வைப்பதாகும்.. இந்த வங்கிப் பணப் பரிமாற்றம் என்பது வாடிக்கையாளரிடமிருந்து வங்கிக்கு ... Read more