உடலிலிருந்து ரத்தம் வெளியேறுவது வுழு-வினை முறிக்குமா?

பதிலின் சுருக்கம்: இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் ... Read more

பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும்

பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும் – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்: ஹைல், நிபாஸ் எனப்படும் ... Read more

ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____   கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?   பதில்: 🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:   ▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.   ▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.   ▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.   ▪️ அவர்கள் ... Read more

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்   பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.   ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் ... Read more

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா?

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா? – ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.   அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! ... Read more

ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் மாதம் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்   அல்லாஹுத்ஆலா படைத்த காலங்களில் சிறப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதுவே ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். இது ஷஃபான் மாதத்திற்குரிய ஒரு சிறப்பாகும். எனவே, இம்மாதத்தில் நாமும் அதிகமாக நோன்பு நோற்பது நபிவழியாகும்.   ஒவ்வொரு வணக்க வழிபாட்டிலும் பித்அத்கள் உருவாக்கப்பட்டது போன்று இம்மாதத்தின் ... Read more

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |     -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயன்படுத்தல்:   ஒரு பெண் மாதவிடாயை தடுப்பதற்குரிய மாத்திரை அல்லது அது போன்றவற்றை பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதியுள்ளது. முதலாவது : பெண்ணுக்கு ... Read more

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 03 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் தொடர்பான சட்டங்கள்:   மாதவிடாய் தொடர்பாக இருபதிற்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இங்கு மிக அவசியமானவற்றை மட்டும் குறிப்பிடுவது போதுமானது எனக் கருதுகின்றோம். அவற்றுள் பின்வருவன முக்கியமானவை : முதலாவது: (அஸ்ஸலாத்) தொழுகை பெண்களுக்கு மாத விடாய் ஏற்பட்டிருக்கும் போது பர்ளான மற்றும் ஸுன்னத் தான தொழுகைகளை தொழுவது ... Read more

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 02 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 02 | -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…   மாதவிடாய் மாற்றங்கள்/ வித்தியாசங்கள்: மாதவிடாயில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும். அது பல வகைப்படும் முதலாவது வகை: மாதவிடாய் ஏற்படும் நாட்கள் கூடுதல் அல்லது குறைதல்.; உதாரணமாக ஒரு பெண்ணின் வழமையான மாதவிடாய் நாட்கள் சாதாரணமாக ஆறு நாட்கள் வரை இருக்கும். பின் அந்த கால ... Read more

காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 |

காலுறைகளின் மீது மஸஹ் செய்வது தொடர்பான மார்க்க சட்டங்கள் | தொடர் 01 | மஸஹ் செய்வதன் வரையறையும், சட்டமும்: மஸஹ் செய்வது என்றால் – குறிப்பிட்ட நேரம் வரை காலுறைகளின் மேற்பகுதியில் கால் விரல்களிலிருந்து கணுக்கால் வரை ஈரக் கைகளைக் கொண்டு தடவுவதாகும். காலுறைகள் (குப்/ khuff) என்றால் என்ன ? காலில் அணியப்படும் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை குறிக்கும். மேலும், பஞ்சு மற்றும் கம்பளியை கொண்டு செய்யப்படும் காலுறைகளும் (சாக்ஸ்/ SOCKS) இதில் அடங்கும். ... Read more