கேள்வி :

ஆய்வுக்குட்படுத்தப்பட முடியாதவாறான வணக்க வழிபாடுகள் உட்பட மார்க்க விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றுவது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தக்லீத் செய்யக் கூடிய சில ஷைகுமார்கள் இதற்கு மாறாக கருத்து வேறுபாடுகளை அங்கீகரிக்கப்பது மட்டுமல்லாமல் கருத்து வேறுபடுவதை சமூகத்திற்கு ஒரு வரம் என்று கருதுகிறார்கள். இது குறித்து

ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் பேசும் போது பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ” எனது சமூகம் கருத்து வேறுபடுவது அருளாகும்” இந்த ஹதீஸ் தாங்கள் கடைபிடித்து வரும் மன்ஹஜுக்கு முரண்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 

பதில் :

இதற்கு இரண்டு விதங்களில் பதிலளிக்க முடியும்.

ஒன்று :

இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதல்ல. எந்த அடிப்படையும் அற்ற பொய்யான செய்தியாகும்.

” இதற்கு ஸஹீஹானதோ, பலவீனமானதோ அல்லது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பாளர் வரிசையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று இமாம் ஸுப்கீ கூறுகிறார்.

“எனது தோழர்கள் முரண்படுவது உங்களுக்கு அருளாகும்” ” எனது தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள் ” என்றவாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விரண்டும் கூட ஆதாரபூர்வமானதல்ல. அவற்றில் முதலாவது மிகவும் பலவீனமானதாகவும், மற்றது இட்டுக்கட்டப்பட்ட தாகவும் உள்ளது.

 

இரண்டாவது :

இது பலவீனமாக இருப்பதோடு குர்ஆனுக்கு முரணாகவும் இருக்கிறது. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறும் வசனங்களை கூறித்தான் தெரிய வேண்டியதில்லை.

என்றாலும் எடுத்துக்காட்டாக சில வசனங்களை கூறுவதில் தவறில்லை.

 

 وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌

 நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்

(அல்குர்ஆன் : 8:46)

 

 وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِيْنَۙ‏ © مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏

 இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.

(அல்குர்ஆன் : 30:31,32)

 

 وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ‏ © اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ‌

 எனவே, உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர

அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 11:118‪,119)

எனவே, இறைவன் அருள் புரிந்தவர்கள் முரண்பட்டு கொள்ள மாட்டார்கள். அசத்தியவாதிகளே முரண்பட்டுக் கொள்வார்கள் என்றிருக்கும் போது, கருத்து வேறுபாடு கொள்வது எவ்வாறு அருளாக இருக்க முடியும்?

 

எனவே, இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையோ, உள்ளடக்கமோ ஸஹீஹானதல்ல. குர்ஆன் ஸுன்னாவை பின்பற்றாமல் இருப்பதற்கு இதனைக் காரணமாகக் கொள்ள முடியாது.

பதிலளித்தவர்:இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்)

நூல்: أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

அரபு மூலம்:

السؤال :

قال بعضهم : لا شك أن الرجوع إلى هدى نبينا صلى الله عليه وسلم في شؤون ديننا أمر واجب، لا سيما فيما كان منها عبادة محضة لا مجال للرأي والاجتهاد فيها، لأنها توقيفية كالصلاة مثلا،

ولكننا لا نكاد نسمع أحدا من المشايخ المقلدين يأمر بذلك. بل نجدهم يقرون الاختلاف ويزعمون أنها توسعة على الأمة، ويحتجون على ذلك بحديث – طالما كرروه في مثل هذه المناسبة رادين به على أنصار السنة – ” اختلاف أمتي رحمة” فيبدو لنا أن هذا الحديث يخالف المنهج الذي تدعو إليه وألفت كتبك عليه، فما قولك في هذا الحديث؟

 

الشيخ الألباني رحمه الله : الجواب من وجهين،

الأول : أن الحديث لا يصح بل هو باطل لا أصل له، قال العلامة السبكي ” لم أقف له على سند صحيح ولا ضعيف ولا موضوع”

قلت : وإنما روي بلفظ (… اختلاف أصحابي لكم رحمة”) و (” أصحابي كالنجوم، فبأيهم اقتديتم اهتديتم “)

وكلاهما لا يصح.

الأول واهٍ جدا، والآخر موضوع، (“وقد حققت القول في ذلك كله في سلسلة الأحاديث الضعيفة والموضوعة رقم ٥٨،٥٩، ٦١”)

الثاني : مع ضعفه مخالف للقرآن الكريم، فإن الآيات الواردة – في النهي عن الاختلاف في الدين والأمر بالاتفاق فيه – أشهر من أن تذكر، لكن لا بأس من أن نسوق بعضها على سبيل المثال، قال تعالى” ولا تنازعوا فتذهب ريحكم واصبروا” و لا تكونوا من المشركين ©من الذين فرقوا دينهم وكانوا شيعا، كل حزب بما لديهم فرحون” وقال :” ولا يزالون مختلفين © إلا من رحم ربك”

فإذا كان من رحم ربك لا يختلفون وإنما يختلف أهل الباطل فكيف يعقل أن يكون الاختلاف رحمة.

فثبت أن هذا الحديث لا يصح سندا ولا متنا، وحينئذ يتبين بوضوح أنه لا يجوز اتخاذه شبهة للتوقف عن العمل بالكتاب والسنة الذي أمر به الأئمة

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply