அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா

ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்:

அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது.

1) ஆயதுல் குரஸியில்:

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ

 

அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம்.

அல் பகரா: 266

2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்:

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ

2. அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம்.

ஆலி இம்ரான்: 2

3) தாஹா சூராலில்

ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ

111. (அந்நாளில்) அல்ஹய் அல் கய்யூமான (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும்.

சூரா தாஹா

அல் ஹய் எனும் பெயரில் அல்லாஹ்விற்கு ஜீவன் (அல் ஹயாத்) உள்ளது என்பது உறுதியாகிறது. அது முழுமையான குறையற்ற ஜீவன், அவன் எப்பொழுதும் உயிரற்றவனாக இருந்ததில்லை, அவனுடைய வாழ்விற்கு முடிவோ, இருதியோ இல்லை. அவனுடைய ஜீவனில், யாதொரு குறையும் இல்லை, உயர்ந்தோன் ரப் அதை விட்டும் பரிசுத்தமானவன். அவனின் ஜீவனானது செவி, பார்வை, வல்லமை, நாட்டம், கருணை, தான் நாடியதை செய்தல் போன்ற குறையற்ற பரிபூரண பண்புகளாலானது. இவ்வாறான பண்புகளும், நிலையான ஜீவனும் கொண்டவன் யாரோ, அவன் மட்டுமே வணக்கதிர்க்கும் ருகூவிர்க்கும் சுஜூதுக்கும் தகுதியானவன். அல்லாஹ் கூறுகிரான்:

وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ

மரணமற்ற அல்ஹய் ஆகிய அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக.

அல் ஃபுர்கான் 25:58

மரணிக்கக்கூடிய உயிர்கள் , உயிரிழந்து மரணித்தவர்கள், உயிற்ற பொருள்கள் ஆகியவை எவ்வகையிலும் வணங்கப்பட தகுதியற்றவை. மரணிக்காத அல் ஹய்யாகிய அல்லாஹ் ஒருவனே வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுடையவன்.

அல்லாஹ் கூறுகின்றான்:

هُوَ ٱلْحَىُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَۗ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

அவன் அல்ஹய்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது.

அல் குர்ஆன் 40:65

மேலும் நபி صلى الله عليه وسلم அவா்களின் பிரார்த்தனைகளில் ஒன்று:
اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِي أَنْتَ الْحَىُّ الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ ‏
இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் உதவியாலேயே (எதிரிகளிடம்) வழக்காடுவேன். இறைவா! நான் வழிதவறாமலிருக்க உனது வல்லமையின் மூலம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; ஆனால் நீ இறக்காமல் நிலைத்திருப்பவன்.

ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹ் அல்புகாரி

அல்கைய்யூம் எனும் பெயரில் அல்லாஹ்வின் அல்கைய்யூமிய்யத், எனும் பண்பு உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் பொருள்: 1)அவன் தானே யாதோர் உதவியும் இன்றி நிலயானவன், 2)தன் படைப்புகள் அனைத்தையும் நிர்வகித்து நிலை நிருத்துபவன்.

அல்கைய்யூம் எனும் பெயர் இரு விஷயங்களை காட்டுகிறது

1) அல்லாஹ எவ்வகையிலும் யார்மீதும் தேவையற்றவன், தானே நிலைத்தவன், அவன் தன் படைப்புகளின் மீது யாதொரு தேவையும் இல்லாதவன்.

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.

அல் ஃபாதிர் 35:15

ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் குத்ஸி உள்ளது, “உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.” என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் தன் படைப்புகளிலிடமிருந்து யாதொரு வகையிலும் தேவயற்றவன்.

2) அவனின் படைப்புகளின்மீது அவன் கொண்டுள்ள முழுமையான ஆற்றல், வல்லமை. அவைகளை அவன் நிர்வகிப்பது. அவன் தான் அவைகளை தன் வல்லமையால் நிலைப்படுத்துகிரான்.

படைப்புகள் அனைத்தும் அவணயே சார்ந்துள்ளது, கண்ணிமைக்கும் நேரமும் அவனை சாராமல் இல்லை.அர்ஷும், குர்ஸியும், வானங்களும்,பூமியும், மலைகளும், மரங்களும், மனிதனும், விலங்குகளும் அவணயே சார்ந்துள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான்:

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

33. ஒவ்வோர் ஆத்மாவும் செய்பவற்றை நன்கறிந்தவன் எதற்கும் சக்தியற்ற பொய் தெய்வங்களுக்கு சமமாவானா? அவர்களோ பொய்யான தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! அவற்றின் பெயர்களை கூறுங்கள்

அர்ரஅத் 13:33

மற்றோர் இடத்தில் கூறுகின்றான்:

إِنَّ ٱللَّهَ يُمْسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّنۢ بَعْدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا

41. வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.

ஃபாதிர் 35:41

மற்றோர் இடத்தில் கூறுகின்றான்:

وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ بِأَمْرِهِۦۚ

25. வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.

ரூம் 30:25

இதே பொருளில் குர்ஆனில் பல ஆயத்துகள் வந்துள்ளது.

ஆகையால் அல்லாஹ் தான், படைப்புகள் அனைத்தையும் நிர்வகிக்கறன்டறான்.

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து, “அல்ஹய் அல்கைய்யூம்” எனும் இவ்விரு பெயர்களும் அல்லாஹ்வின் அனைத்து பெயர்களின் பொருள்களையும் உள்ளடக்கும் என்பது விளங்குகின்றது, அவனின் அனைத்து அழகிய பெயர்களும் இவ்விரு பெயர்களை சுற்றியே அமைந்துள்ளது, ஆக படைப்பாலனின் அனைத்து பெயர்களும் இவ்விரு பெயர்களையே சார்ந்துள்ளது.

அல்கைய்யூம் எனும் பெயர் அல்லாஹ்வின் செயல்கள் அனைத்தயும் உள்ளடக்கும், அல் ஹய் எனும் பெயர் அல்லாஹ் தன்னுடைய பண்புகள் அனைத்தும் உள்ளடக்கும்.செவி, பார்வை, கை, இல்மு(அறிவு) போன்ற அல்லாஹ்வின் மெய்மை (ذات) சார்ந்த பண்புகள் அனைத்தும் அல் ஹை எனும் பெயரில் அடங்கும். படைப்பு, ரிஸ்கு கொடுப்படு, கருணை காட்டுவது, மரணிக்கச்செய்வது, உயிர் கொடுப்பது, போன்ற செயல்வடிலான பண்புகள் அனைத்தும் அல் கைய்யூம் என்ற பெயரில் அடங்கும். அவனுடய அத்தாட்சிகளில் ஒன்று அவன், படைப்புகளை படைத்து, ரிஸ்களித்து, உயிர் கொடுத்து, மரணிக்கச்செய்து, நிர்வகித்து நிலைப்படுதுவது. ஆகையால் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்(அஸ்மாஉல் ஹுஸ்னா) அனைத்தயும் இவ்விரு பெயர்கள் உள்ளடக்கும். இதனால் தான் அறிஞர்களில் சிலர் இவ்விரு பெயர்களே அல்லாஹ்வின் மிகப்பெரிய பெயர் (இஸ்முல் அஃதம்) என்று கருதுகிறார்கள். அல்லாஹ்வின் இஸ்முள் அஃதமை கொண்டு அழைத்தால் பதிலளிக்கப்படும், துஆ கேட்டால் கொடுக்கப்படும்.

இஸ்முல் அஃதமை குறிப்பிட்டு வரும் பெரும்பாலான ஹதீஸ்களில் இவ்விரு பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இமாம் இப்னு அல்கய்யிம் رحمه الله கூறுகிறார்:” அல்லாஹ்வின் ஜீவன், அனைத்து பரிபூரண குறையற்ற பண்புகளையும் கொண்டது. இதனால் தான் அல்லாஹ்வின் எந்த பெயரை கொண்டு பிரார்த்தித்தால் பதிழல்ப்பானோ, கேட்டால் கொடுப்பானோ, அந்த இஸ்முல் அஃதம் அல்ஹய் அல் கைய்யூம். ”

மற்றோர் இடத்தில் அவர் கூறினார்:

“அல்லாஹ்வின் இஸ்முல் அஃதம் ஆயதுல் குர்ஸியிலும், ஆல இம்ரானின் ஆரம்பத்திலும் தான் உள்ளது. அல்லாஹ்வின் ஜீவன் அவனின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கும், அவனின் அல்கைய்யூமிய்யத் அவனின் செயல்கள் அனைத்தயும் உள்ளடக்கும்”

இப்னு அல் கைய்யிம் رحمه الله இவ்விரு பெயர்களையும் முன் வைத்து துஆ கேட்பதால் ஏற்படும் பெரும் பலன்களை குறிப்பிடுகிறார், குறிப்பாக கவலைகள், தீமைகள், கஷ்டங்களிலிருந்து பாதுகாவல் தேடும் போது.
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

யா ஹை! யா கய்யூம்! உன்னுடைய ரஹ்மத்தை கொண்டு உதவி தேடுகிறேன்.

என்று நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த துஆவின் பயனை பற்றிக்கூறும்போது, இவ்விரு பெயர்களுக்கும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு தேடுவதற்கும் உள்ள தொடர்பை கூறுகிறார்.

மேலும் பின் வரும் ஹதீஸையும் இமாம் குறிப்பிடுகிறார்.

அனஸ் رضي الله عنه அறிவிக்கிறார், ஒரு மனிதர் நபியின் முன்:

‘யா அல்லாஹ் உண்க்கே புகழ் அனைத்தும், உன்னை தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை, நீ தான் அல்மன்னான் (அருட்கொடை வழங்குபவன்), வாணங்கள் பூமியை தோற்றுவித்தவனே, வல்லமையும் கண்ணியமும் கொண்டவனே, யா ஹய், யா கய்யூம்’ என்று கூறி கேட்கிறேன் என்றார்.

அதற்கு நபி صلى الله عليه وسلم : “அவர் அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு துஆ கேட்டு விட்டார். அல்லாஹ்வின் இஸ்முல் அஃதமை கொண்டு அழைத்தால் பதில் அளிப்பான், கேட்டால் கொடுப்பான்” என்று கூறினார்கள்.

இப்னு மாஜா, இப்னு ஹிபான், அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் பல ஹதீஸ் நூல்கள். இந்த ஹதீஸின் அறிவிபபாளர் தொடர் பலமானது.

அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார், நபி صلى الله عليه وسلم அவார்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் வருத்தம் தந்தால் அவர்:
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

“யா ஹய்! யா கய்யூம்! உன்னுடைய ரஹ்மத்தை கொண்டு உதவி தேடுகிறேன்.” என்று கூறுவார்கள்.

இமாம் திர்மிதீ இதை அறிவிக்கிறார், இது ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்க்கும் அறிவிப்புகளால் ஹஸன் தரம் கொண்டது.

மேல் கூறப்பட்டவை எல்லாமே இவ்விரு பெயர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய முக்கியத்துவமும்,அதனால் நாம் அல்லாஹ்விற்கு முன் தாழ்மை கொண்டு கட்டுப்படவேண்டும் என்பதையும் காட்டுகிறது.

وَعَنَتِ ٱلْوُجُوهُ لِلْحَىِّ ٱلْقَيُّومِۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا

(அந்நாளில்) அல் ஹய்! அல்கய்யூமாகிய அல்லாஹ்வின் முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.

அல் குர்ஆன் 20:111

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: