பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |

 

பொய்யின் வடிவங்களில் சில:-

 

காணாததைக் கண்டதாகக் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய்:

‏صحيح البخاري ‏7043: عن ابن عمر، أن رسول الله ﷺ قال: من أفرى الفرى أن يري عينيه ما لم تر .

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். (புகாரி 7043)

 

கேட்பதையெல்லாம் உறுதி செய்யாமல் பேசுபவன் பொய்யனாக ஆகிவிடுகிறான்:

‏صحيح مسلم5: عن حفص بن عاصم قال: قال رسول الله ﷺ: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع.

ஒரு மனிதன் தான் செவிமடுத்த அனைத்தையும் பேசுவது பொய் சொல்வதற்குப் போதுமானது என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 5)

 

காணாத கனவைக் கண்டதாகப் பொய் உரைப்பவருக்குரிய தண்டனை:

‏صحيح البخاري ‏7042: عن ابن عباس، عن النبي ﷺ قال: من تحلم بحلم لم يره، كلف أن يعقد بين شعيرتين، ولن يفعل، ومن استمع إلى حديث قوم وهم له كارهون – أو يفرون منه – صب في أذنه الآنك يوم القيامة، ومن صور صورة، عذب وكلف أن ينفخ فيها، وليس بنافخ.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘எவன் தான் செவிமடுப்பதை விரும்பாத மக்களின் அல்லது தன்னை விட்டு வெருண்டோடும் மக்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறானோ அவனது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’. (புகாரி 7042)

 

நடத்தையில் பொய்யனாக இருப்பவன் மனிதர்களிலே கெட்டவன்:

‏صحيح البخاري ‏7179: عن أبي هريرة، أنه سمع رسول الله ﷺ يقول : إن شر الناس ذو الوجهين، الذي يأتي هؤلاء بوجه، وهؤلاء بوجه.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். (புகாரி 7179)

அதாவது ஒரு விடயத்தில் ஒருவரிடம் ஒரு பேச்சையும் வேறொருவரிடம் அதற்கு மாறான பேச்சையும் பேசுவதை மேற்படி ஹதீஸ் குறிக்கிறது.

‏صحيح البخاري ‏7178: قال أناس لابن عمر: إنا ندخل على سلطاننا، فنقول لهم خلاف ما نتكلم إذا خرجنا من عندهم. قال: كنا نعدها نفاقا.

முஹம்மத் இப்னு ஸைத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவித்தார்: மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம், ‘நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்’ என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், ‘இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவதை (நபி ﷺ அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதி வந்தோம்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி 7178)

 

உறுதி செய்யாமல் ஹதீஸ்களைப் பரப்புபவனும் பொய் கூறிய பாவத்திற்கு ஆளாகிறான்:

‏مقدمة صحيح مسلم‏ عن سمرة بن جندب والمغيرة بن شعبة عن رسول الله ﷺ: من حدث عني بحديث يرى أنه كذب، فهو أحد الكاذبين.

யார் பொய்யென எண்ணப்படும் ஒரு ஹதீஸை என்னைத் தொட்டும் அறிவிக்கிறாரோ அவர் பொய்யர்களில் ஒருவரே என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் – முன்னுரை)

 

தனக்கில்லாத ஒன்றைத் தனக்கிருப்பதாகக் காட்டிக்கொள்பவர் பொய்யரே:

‏صحيح البخاري ‏5219: عن أسماء، أن امرأة قالت: يا رسول الله، إن لي ضرة، فهل عليّ جناح إن تشبعت من زوجي غير الذي يعطيني؟ فقال رسول الله ﷺ: المتشبع بما لم يعط كلابس ثوبي زور.

ஒரு பெண்மணி நபி அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், ‘கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், பொய்யின் (போலியான) இரண்டு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள். (புகாரி 5219)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

– ஹுஸைன் இப்னு றபீக் மதனி

முந்தைய தொடரை படிக்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 03 |”

Leave a Reply