தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

தற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார்.
தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:29)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “யார் எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்.
(ஸஹீஹுல் புஹாரி :6047)

தற்கொலை செய்து கொள்வோருக்கு தொழுகை நடத்துவதைப் பொருத்தவரை பொதுமக்களில் ஒருவர் அவருக்கு தொழுகை நடத்த வேண்டும்.

அவரை குளிப்பாட்டி அவரை கபன் செய்து பின்னர் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் அவரை முஸ்லிம்களுடைய மண்ணறையில் அடக்கம் செய்ய வேண்டும்

ஆனாலும் அறிவுடையவர்கள்(உலமாக்கள் ), மக்களில் மதிக்கப்படுவார்கள் இந்த செயலை கண்டிக்கும் முகமாக அவருக்குத் தொழுகை நடத்தாமல் இருப்பது சிறந்ததாகும்.
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடனாளியான ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட சமயத்தில் “உங்களில் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் இப்னு மாஜஃ :1966

இந்த அடிப்படையில் ஏனைய பாவிகளுக்கு தொழுகை நடத்துவது போன்று பொதுமக்களில் ஒருவர் இவருக்கு தொழுகை நடத்த வேண்டும்.

நூருன் அலத்தர்ப்
(ஷெய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாம் ஸுஆல் ஜவாப் :45617
(ஷெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹபிதஹுல்லாஹ்)

ஆகியோரின் ஃபதாவா சுருக்கம்…

அல்லாஹ் மிக அறிந்தவன்…

தமிழாக்கம்:மௌலவி அஹ்ஸன் அல்கமி(ஆசிரியர்:மர்கஸு அல்கமா,இலங்கை)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply