‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:

 

கேள்வி:

கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா?

பதில்:

கிறிஸ்மஸ் பண்டிகையாக இருக்கலாம், அல்லது நிராகரிப்பாளர்களின் மத ரீதியான எந்த பண்டிகையாக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்) என்பது ஏகோபித்த முடிவாகும்.

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள், தனது ‘அஹ்காமு அஹ்லுத் திம்மா’ என்ற நூலில் குறிப்பிடும்போது: ‘நிராகரிப்பாளர்களின் அடையாளச் சின்னங்களாகவே காட்சியளிக்கும் விடயங்களில் அவர்களை வாழ்த்துவது ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் ஹராமாகும். அவைகள் அவர்களது பண்டிகைகள், அல்லது நோன்பு போன்ற கிரியைகளைக் குறிப்பிடலாம். எவ்வாறான சொற்களை பயன்படுத்தி வாழ்த்தினாலும் சரியே. இவ்வாறு வாழ்த்துபவர் குப்ஃரை விட்டு நீங்கியவராக இருந்தாலும் இது தடுக்கப்பட்டதாகும். இந்த வாழ்த்தானது சிலுவைக்கு அவன் சிரம் பணிவதையே குறிக்கும். இது அல்லாஹ்விடத்தில் விபச்சராத்தை விட, மதுபானத்தை விட, கொலையை விட மிகப் பெரும் குற்றமாகும். அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் மிகக்கொடிய பாவச் செயலாகும். இந்த தூய்மையான மார்க்கத்தின் மீது எந்த மதிப்பும் இல்லாத (இந்த பரிசுத்த நெறியின் கண்ணியத்தை அறியாத) அதிகமானோர் இந்த அழிவில் வீழ்ந்துவிடுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவனது இந்த மோசமான செயலின் பாரதூரத்தை அவன் அறியாமல் இருப்பது மற்றொரு வேதனையான விடயம். எவனொருவன் ஒரு பாவமான காரியத்தை, அல்லது ஒரு பித்அத்தை அல்லது குப்ஃரான விடயத்தை வாழ்த்துகின்றானோ அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவது உறுதியானதாகும்.’

அவர்களது மத ரீதீயான விடயங்களில் வாழ்த்துவது ஹராமாகும். இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தெளிவு படுத்தும் விடயம்: இது அவர்களின் நிராகரிப்பின் சின்னங்களை ஏற்றுக்கொள்வதாகும், அவர்களுக்காக அவற்றை பொருந்திக்கொள்வதாகும். இவன் இந்த குப்ஃரை தனக்காக பொருந்திக்கொள்ளா விட்டாலும் சரியே, பிறரை திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் குப்ஃரின் சின்னங்களை வாழ்த்துவது ஒரு முஸ்லிமுக்கு தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அல்லாஹ் இதை ஒருபோதும் பொருந்திக்கொள்வதில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும்போது:

إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ

‘(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை. நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான்.’ (39:7).

اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.’ (5:3).

உங்களுடன் ஒன்றாக பணியில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம் பொதுவாகவே இவ்வாறு வாழ்த்துவது ஹராமாக்கப்பட்டதாகும்.

அவர்களின் பண்டிகைகளுக்காக (பெருநாட்களுக்காக) எம்மை வாழ்த்தினால் நாம் அதற்கு பதில் வாழ்த்து தெரிவிப்பது கூடாது, ஏனெனில் அவைகள் எமது பெருநாட்கள் அல்ல, இன்னும் அப்பெருநாட்களை அல்லாஹ் ஒருபோதும் பொருந்திக்கொள்வதில்லை, சில வேளை அவர்களது மதத்திலும் அது புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது அவர்களது மதத்தில் உள்ள ஒன்றாக இருக்கலாம், இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் தூதராக அனுப்பப்பட்டதன் மூலம் இஸ்லாம் ஏனைய அனைத்து வழிகெட்ட மதங்களையும், கொள்கைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிட்டது.

அல்லாஹ் தனது திருமறையில்:

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது, மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.’ (3:85).

இந்நிகழ்வுகளுடன் கூடிய விழாக்களுக்கோ, விருந்துகளுக்கோ ஒரு முஸ்லிம் அழைக்கப்படும்போது கலந்துகொள்வது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் இவ்வாரான நிகழ்வுகளில் கலந்தகொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும். ஒரு முஸ்லிம் இவைகளில் கலந்து, இனிப்புப் பண்டங்கள், உணவு வகைகள், குடிபானங்கள், பரிசுப் பொருட்களை அவர்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்வதும், நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக செயல்படுவதும் முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். அந்நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதும் ஹராமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இக்கூற்று மிக முக்கியமானதாகும்: ‘எவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக செயல்படுவார்களோ அவர்களும் அக்கூட்டத்தை சார்ந்தவர்கள்’ (அபூதாவுத்).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் முஹாலஃபதி அஸ்ஹாபில் ஜஹீம் என்ற நூலில்: ‘அவர்களின் பண்டிகைகளில் கலந்து அவர்களுக்க ஒப்பாக செயல்படுவதென்பது அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் இருக்கும் அசத்திய வழியையும் சரிகாணச் செய்யும். அதே போன்று சில வேளைகளில் இவர்களுடன் கூடி இவ்வாரான நிகழ்வுகளில் உணவுகளை பரிமாறுவது, இது போன்ற விடயங்கள் கலந்து கொள்வது மார்க்கத்தில் பலவீனமாக உள்ளவர்களை திசை திருப்புவதற்கும் சந்தர்பமாக பயன்படுத்தப்படும்.’

மேற் கூறப்பட்ட விடயங்களை, எந்த நோக்கமுமின்றி வெளிப்படையாகவோ அல்லது நட்பை பிரதிபளிக்கும் விதமாகவோ, அல்லது வெட்கத்தின் காரணத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்திற்காக செய்தாலும் அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்த பாவியாவான். ஏனெனில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் வளைந்து கொடுப்பதென்பது இறை நிராகரிப்பாளர்களின் உள்ளங்களை அவர்களின் வழிகெட்ட கொள்கைளில் பலப்படுத்துவதுடன், அவர்கள் இருக்கும் வழிகெட்ட மதங்களைப்பற்றி ஒரு பெறுமை அவர்களுக்குள் உருவாக்கவும் வழிசெய்யும். (ஷைகு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் மஜ்மூஉல் பஃதாவா எனும் நூல்: 369/3).

தமிழாக்கம்: அஸ்ஹர் ஸீலானி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply