குர்ஆன் ஓதிய பிறகு சதகல்லாஹுல் அதீம் என்று கூறுவது

கேள்வி:

குர்ஆன் ஓதி முடிக்கும் போது ُصَدَقَ اللّٰه ٱلعَظِيْمُ என்று கூறுவது ‘பித்அத்’ என்று கூறும் பலரை கேட்டிருக்கிறேன். சிலர் இது கூடும் என்றும் அதற்கு ஆதாரமாக (அல்லாஹ் உண்மையே கூறினான், முற்றிலும் நேரான வழியில் சென்ற இப்ராகிம் (அலை) அவர்களை பின்பற்றுங்கள்-3:195) எனும் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.
மேலும் சில கல்விமான்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் நபரை (ஓதுவதை) நிறுத்த நாடினால் “போதுமானது” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள் அல்லாஹ் உண்மையே கூறினான் (صدق الله العظيم ) என்று கூறமாட்டார்கள்” என்று கூறியுள்ளனர்.

என்னுடைய கேள்வி ” صدق الله العظيم” என்று குர்ஆன் ஓதி முடிக்கும் போது கூறுவது கூடுமா? இந்த விஷயத்தில் தெளிவான பதிலை விளக்குவீர்கள் என்று ஆதரவு வைக்கின்றேன்..

பதில்:

பல மக்கள் குர்ஆன் ஓதி முடிக்கும் போது صدق الله العظيم என்று கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இது அடிப்படையில் ஆதாரம் இல்லாதது. அதைக் கூறுபவர் அது சுன்னத் என்று கருதினால் மார்க்க சட்டங்களின் அடிப்படையில் அது பித்அத்திற்கு நெருக்கமானது.
அதை விடுவது அவசியமாகும். ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அதை வழக்கமாக்கி வைத்துக் கொள்வதும் கூடாது.
மேலும் திருமறை வசனம் (அல்லாஹ் உண்மையே கூறினான்- 3:195) என்பது இந்த விஷயத்தில் (இறக்கப்பட்டது) இல்லை.

இவ்வசனத்தில் அல்லாஹ் தன் தூதருக்கு தவ்ராத் போன்ற முந்தைய வேதங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ள விஷயங்களில் உண்மையே கூறியுள்ளான் என்று தெளிவு படுத்துமாறு கட்டளையிடுகின்றான். அல்லாஹ் தன்னுடைய வேதமான குர்ஆனில் மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ள விஷயங்களில் உண்மையாளனே, என்றாலும் குர்ஆன் ஓதி முடித்த பின்போ அல்லது ஒரு வசனத்தை ஓதி முடித்த பின்போ அல்லது ஒரு அத்தியாயத்தை ஓதி முடித்த பின்போ صدق الله العظيم என்று கூறுவது ஆதாரமாகாது. ஏனெனில் அவ்வாறு கூறுவது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ صلى الله عليه وسلم நபித்தோழர்களிடமிருந்தோ அறியப்பட்டதாகவோ அல்லது நிரூபிக்கப்பட்டதாகவோ இல்லை..

இப்னு மஸ்ஊத் (رضي الله عنه) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் صلى الله عليه وسلم அவர்களிடம் அத்தியாயம் அந்நிஸா ஓதி

فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيْدًا

என்னும் வசனத்தை அடைந்தபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதும் ( َحَسْبُك) என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுடைய தூதரை صلى الله عليه وسلم நோக்கி பார்த்தேன். அப்போது அல்லாஹ்வுடைய தூதருடைய இரு கண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. அதாவது இந்த வசனத்தில் மறுமை நாளில் நிகழப்போகும் மகத்தான ஒரு விஷயத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளதால் அழுதார்கள். அது (இவர்களுக்கு எதிராக சாட்சியாக -கொண்டு வரப்படுவீர்கள்). அதாவது அல்லாஹ்வுடைய தூதருடைய صلى الله عليه وسلم சமூகத்திற்கு எதிராக வருவார்கள். நாம் அறிந்தவரை இப்னு மஸ்ஊத் (رضي الله عنه) அவர்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் صلى الله عليه وسلم அவர்கள் போதும் என்று கூறியதற்கு பின்பு صدق الله العظيمஎன்று கூறினார்கள் என்பதற்கு இப்னு மஸ்ஊத் ( رضي الله عنه)அவர்கள் மூலமாக எந்த கல்விமானும் கூறவில்லை. குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஓதுபவர் صدق الله العظيم என்று கூறுவதற்கு தூய்மையான மார்க்கத்தின் சட்டங்களில் ஆதாரம் இல்லை. அதே நேரம் தேவைப்படும் வேறு சில காரணங்களுக்காக மனிதன் அதை கூறினால் அது தவறல்ல….

பதிலளித்தவர்: கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (رحمه الله).

நூல்: .ஃபதாவா உலமா-இ- பலதில் ஹராம்…(فتاوى علماء البلد الحرام).//مجموع فتاوى بن باز.

தலைப்பு பித்அத் மற்றும் அதைக் குறித்த எச்சரிக்கை ஃபத்வா எண் :17

தமிழாக்கம்:ஷைய்க் யூனுஸ் ஃபிர்தௌசி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply