கேள்வி:
ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?.
பதில்:
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்னவென்றால், அந்த இரவுகளை தொழுகையிலும், திக்ருலும் கழிக்க வேண்டும் என்பதே.
தர்மம் செய்வதை பொறுத்தவரை மற்ற நேரங்களில் தர்மம் செய்வதை விட ரமழானில் தர்மம் சிறந்தது,ஆனால் கடைசி பத்து நாட்களில் தர்மம் செய்வது (மற்ற அமல்களை விட மிக சிறந்த செயல் என்று) ஸுன்னாவில் நாம் எதுவும் காணவில்லை.
ஆனால் சிறப்பான நேரத்தின் போது செய்யப்படும் நல்ல செயல்கள் சிறந்தவை என்றும், சந்தேகத்திற்கு இடமின்றி ரமழானின் கடைசி பத்து இரவுகள் மற்ற இரவுகளை விட சிறந்தவை என்றும் அறிஞர்கள் கூறினார்கள்.
ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது.இது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.
எது எப்படியிருந்தாலும், ரமழான் மாதம் முழுவதும் அதிகளவில் தர்மம் செய்வது முஸ்லிமுக்கு விதிக்கப்பட்டுள்ளது (என்பதற்கு கீழே உள்ள ஹதீஸ் சான்றாக உள்ளது).
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்…….
…….தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’.
ஸஹீஹ் புகாரி : 06 மற்றும் ஸஹிஹ் முஸ்லிம் : 4622
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.”
Source:IslamQ&A
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: