{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلافِ قُرَيْشٍ * إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ}
குறைஷிகளின் பாதுகாப்பிற்காக.
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக.
ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும்.
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
இமாம் ஆஸ்ஸஅதி கூறுகிறார்கள்:
தப்ஸீர் அறிஞர்களில் பலரின் கருத்துப்படி, இந்த சூராவின் ஆரம்பம் முந்தைய சூராவின் கருத்தை ஒட்டி வருகிறது. அதாவது, “குறைஷிகளுக்காவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும், நன்மைக்காகவும், குளிர்காலத்தில் யமன் தேசத்திற்கும், கோடை காலத்தில் ஷாம் தேசத்திற்கும் அவர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர வியாபாரப்பயணம் தடைபெறாமலும் இருக்கவே, நாம் யானைப்படையை அழித்த்தோம்” என்ற விளக்கத்தை தருகிறார்கள்.
தீங்கு செய்ய நாடியவர்களை அல்லாஹ் அழித்தான், ஹரத்தையும், அதை சார்ந்த மக்களையும் அரபுகளின் பார்வையில் உயர்த்தினான்,அரபுகள் குரைஷிகளை கண்ணியப்படுத்தினார்கள், அவர்களை அவர்களின் பயணங்கள் எதிலும் எதிர்க்க முற்பட மாட்டார்கள் .
ஆகையால், அல்லாஹ் அவர்களை இந்த அருட்கொடைக்காக நன்றி (ஷுக்ர்) செலுத்துமாரு கட்டளை இடுகிறான் ,
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும்.
அதாவது அவன் ஒருவனை மட்டும் தூய எண்ணத்துடன் வணங்குங்கள் .
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
சிரமமின்றி கிடைக்கும் உணவும், அச்சத்திலிருந்து பாதுகாப்பும் உலக அருட்கொடைகளிலேயே மிகப்பெரிய அருட்கொடைகள், அதற்க்காக அல்லாஹ்விற்க்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.
யா அல்லாஹ்!வெளிப்படையான மறைவான அனைத்து அருட்கொடைகளுக்கும் உனக்கே அனைத்து புகழும் நன்றியும்.
இரைவன் தன் கஅபாவோடு மட்டும் தன் ருபூபிய்யத்தை குறிப்பிடுவதற்குக்காரனம், அதன் மகத்துவம் தான். இல்லையெண்றால் அவன் அனைத்து வஸ்துக்களின் தானே!
I need இலக்கிய நயங்கல்