இபாதத்களிலிருந்து திசை திருப்பும் ஸ்மார்ட் போன்கள்

கேள்வி: ஷேக்,மேற்கு உலகில் மற்றும் பிற இடங்களிலும் நாம் இப்போது சிரமமான காலங்களில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் கற்கும் திறன், பயன்தரும் வேளைகளில் ஈடுபடும் திறன், செயல் திறன் ஆகியவை குறைந்துவிட்டது. நாம் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறோம், சமூக ஊடகங்ககள், வாட்ஸாப் போன்றவற்றில் அடிமைகளாக இருக்கிறோம்.

இச்சூழலில் குர்ஆனை நாம் எவ்வாறு மனனம் செய்வது என்று எங்களுக்கு அறிவுரை அளியுங்கள்.

நாங்கள், எங்களுக்கு நேரம் இல்லை என்று குறைசொல்லுகிறோம் ஆனால், இந்த செல்போன்களில் நமக்கு திரும்ப திரும்ப புதிய தகவல்கள் வருகிறது, நம்மை திசை திருப்பிகிறது. ஒரு மனிதர் கற்பதற்காக தன்னை மக்களிடம் இருந்து தனிமைப் படுத்திக்கொண்டாலும், அவரால் இந்த செல்போன்களில் இருந்து விலக முடியவில்லை. அவர் தனது செல்போனை அனைத்து விட்டாலும், அவர் என்னை யாரவது செல்போன் மூலம் அழைப்பார்களோ, இல்லை எனக்கு யாராவது தகவல் அனுப்பி இருப்பார்களோ என்ற கவலையில் தான் இருக்கிறார்.

இக்காலத்தில் என்ன நடந்தாலும் நமக்கு உடனே தெரிய வேண்டும் எனும் மனநிலையில் உள்ளோம். அவ்வாறு இல்லாமல் 10 நிமிடம் சென்றாலும் நமக்கு நமக்குள் ஒரு வித பதட்டம் ஏற்படுகிறது. நிச்சயமாக விடயங்கள் மாறிவிட்டதை உணர்கிறோம்.

இதற்கு தீர்வு என்ன, நாம் எவ்வாறு மனனம் செய்வது, இக்கடும் காலங்களில் நாம் ஏதாவது சாதிக்க விரும்பினால், இந்த சோதனையை தாண்டி எவ்வாறு செய்வது.

பதில்: ஷேக் அப்துர் ரஷீத் அஸ்ஸூஃபி: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நீங்கள் கூறிய விடயங்களால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது இந்த காலத்தின் சோதனைகளில் ஒன்று.

ஒரு முறை ஒரு இளைஞர் என்னிடம் “நான் ஒரு ஆண்டில் குர்ஆனை, மனனம் செய்ய நாடுகிறேன். இது சாத்தியமா என்று கேட்டார்.” நான் “நிச்சயமாக சாத்தியம் என்று கூறினேன்”.

“அவ்வாரானால் நான் மஸ்ஜித் அந் நபவியில் صلى الله عليه وسلم ஒரு ஆண்டு இஃதிகாஃப் செய்து, அதை விட்டு இயற்க்கை தேவைக்கு அன்றி நான் வெளியேறாமல் தங்குவேன். மீதி நேரம் அனைத்தையும் குர்ஆனை மனனம் செய்யவே பயன் படுத்துவேன்” என்று கூறினார்.

நான் “இன்ஷா அல்லாஹ், உங்களால் செய்ய முடியும், நீங்கள் உங்களது முழு நேரத்தையும் செலவிட்டால். முழு குர்ஆனையும் மனனம் செய்ய இயலாவிட்டாலும், ஏறத்தாழ மனனம் செய்வீர்கள்”

அவர்: “எனக்கு உங்கள் அறிவுரை என்னது என்று கேட்டார். “

நான்: “உங்கள் கையில் உள்ள இந்த ஸ்மார்ட் போனை – அவர் உயர்விலை ஃபோன் வைத்திருந்தார் – விட்டு விடுங்கள்” என்று கூறினேன்

அவர்: “என்னால், அதை செய்ய முடியாது எனக்கு அழைப்புகள் வரும் ” என்றார்.

நான்: “நீங்கள் பேச உங்களுக்கு, பழைய நோக்கியோ போன்ற சாதாரண கைபேசி இருந்தால் போதுமே. ஸ்மார்ட் போனை நீங்கள் விடாவிட்டால், உங்களுக்கு மனனம் செய்வது மிகக் கடினமாகும் என்று கூறினேன்.”

அவர் சரி என்று கூறினார், நாங்கள் பிரிந்து சென்றோம்.

பல நாட்கள் கழித்து எனக்கு அவரிடம் இருந்து ஒரு வாட்டசாப் பரிமாற்றம் வந்தது.

6, 7 மாதங்கள் கழித்து நான் அவரை சந்திக்கும்போது, நான் “நான் உங்களுக்கு இதை விட்டுவிடுங்கள் என்று அறிவுறுத்தினேன் அல்லவா ” என்று கூறினேன்

அவர் “வல்லாஹி என்னால் இயலவில்லை என்றார் “

நான் “அப்போது ஆண்டுகள் ஒவ்வொன்றாக உங்களை கடந்து செல்லும் ஆனால் உங்களால் மனனம் செய்ய இயலாது” என்று கூறினேன்.

உண்மையில் அது தான் நடந்தது மூன்று, நான்கு ஆண்டுகள் கழிந்தும் அவரால் மனனம் செய்து முடிக்க இயலவில்லை. அதற்கு காரணம் நீங்கள் கூறியது போல, ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு நோய் உள்ளது, நமது இக்காலத்தின் நோய் இது தான்.

நாம் சாதிக்க விரும்பும் விடயங்களை – அது குர்ஆன் ஓதுவதாக இருக்கலாம், மார்கக்கல்வி தேடுவதாக இருக்கலாம்- நாம் ஒரு போதும் அடைய முடியாத இதை விட்டு நாம் விலகி இருக்க சில நேரமாவது ஒதுக்காமலே தவிர .

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply