சூரா அல்ஃபீல் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி  கூறுகிறார்:
அதாவது, 1)அல்லாஹ்வின் ஆற்றலையும், 2)முக்கியத்துவத்தையும், 3)அடியார்களின் மீது அவனின் இரக்கத்தையும், 4)அவனின் தவ்ஹீதின் அத்தாச்சிகளையும்,5)அவனின்தூதர் முஹம்மதின்صلى الله عليه وسلم நேர்மையையும் வாய்மையையும்,   அல்லாஹ் யானைப்படையினரை என்ன செய்தான் என்பதில்நீர் பார்க்கவில்லையா?” அவர்கள், இறைவனின் இல்லத்திற்கெதிராக சதித்திட்டம் தீட்டினார்கள், அதை அழிக்க நாடினார்கள், பெரும்படையை திரட்டி தயாராகினார்கள், இடிப்பதற்க்காக ஒரு யானைக்கூட்டத்தையே உடன் அழைத்து வந்தனர். அபிஸீனா, யமன் தேசங்களிலிருந்து, அரபுகளால் எதிர்கொள்ளவே முடியாத,  ஒரு பெரும்படையை அழைத்து வந்தனர். மக்காவை அவர்கள் நெருங்கிய போது, எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை, மக்காவாசிகள் அனைவரும் தன் உயிருக்கு பயந்து மக்காநகரை விட்டுவெளியேரினர்.
أي: أما رأيت من قدرة الله وعظيم شأنه، ورحمته بعباده، وأدلة توحيده، وصدق رسوله محمد صلى الله عليه وسلم،ما فعله الله بأصحاب الفيل، الذين كادوا بيته الحرام وأرادوا إخرابه، فتجهزوا لأجل ذلك، واستصحبوا معهم الفيلة لهدمه، وجاءوا بجمع لا قبل للعرب به، من الحبشة واليمن، فلما انتهوا إلى قرب مكة، ولم يكن بالعرب مدافعة، وخرج أهل مكة من مكة خوفًا على أنفسهم منهم.

أرسل الله عليهم طيرًا أبابيل أي: متفرقة.
“மேலும், அவர்கள் மீது அபாபீல்  பறவைகளைக்  “

அபாபீல்: அதாவது கூட்டம் கூட்டமாக பல்வேறு பறவைகளை

“அல்லாஹ் அனுப்பினான்”
“تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.”

تحمل حجارة محماة من سجيل، فرمتهم بها، وتتبعت قاصيهم ودانيهم، فخمدوا وهمدوا
அந்த பறவைகள் சுடப்பட்ட  கற்களைக்கொண்ட யானைப்படையினரை எல்லா மூளை முடுக்குகளிலும் துரத்தி துரத்தி, அடித்தன. யானை படையினர் ஓய்ந்து அழிந்து போனார்கள்.

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

அல்லாஹ் அவர்களின் தீங்குகளை நீக்கினான், அவர்களின் திட்டத்தை அவர்களுக்கு எதிராகவே ஆக்கினான்.
அவர்களின் இந்த கதை அறிந்ததும் பிரபலமானதுமாக ஆகியது. இந்த சம்பவம் நடந்த அதே ஆண்டில் தான் நபி صلى الله عليه وسلم பிறந்தார்கள். அவரின் அழைப்புப்பணிக்கொரு அடித்தளமாகவும், தூதுத்துவத்திற்கு ஒரு அடிப்படையாகவும் ஆகியது. இறைவனுக்கே அனைத்து நன்றிகளும், புகழும்.
وصاروا كعصف مأكول، وكفى الله شرهم، ورد كيدهم في نحورهم، [وقصتهم معروفة مشهورة] وكانت تلك السنة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم، فصارت من جملة إرهاصات دعوته، ومقدمات  رسالته، فلله الحمد والشكر.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply