இமாம் அஷ்ஷிந்கீத்தி (رحمه الله) கூறுகிறார்கள்:
தெரிந்துகொள்ளுங்கள், குகைவாசிகளையும் அவர்களின் கண்ணியத்தையும் குரித்து சூரா அல்-கஹ்ஃபில் கூறும்போழுது, அவர்களோடு இனைத்து, அல்லாஹ் தன்னுடைய இந்த குர்ஆனில் அவர்களின் நாயையும் அது தன் முன்னங்கால்களை நீட்டி குகைவாசலில் படுத்திறுந்ததை குறிப்பிடுகிறான்.
நல்ல மக்களின் தொடர்பு தரும் பெரும்பயன்களை இதிலிருந்து அறியலாம்.
இப்ன் கஸீர் ரஹிமஹுல்லாஹ் இந்த உயர்ந்த ஆயத்தின் தஃப்ஸீரில் கூறுகிறார்: “அவர்களுக்கு கிடைத்த இந்த பரகத் அவர்களின் நாயிக்கும் கிடைத்தது, அதனால், அவர்கள் அந்த குகையில் உறங்கும்போது, அதுவும் உறங்கியது. இது நல்ல மக்களின் தொடர்பால் கிடைக்கும் பயன், அவர்களின் கதையில் அந்த நாயும் குர்ஆனில் கூறப்படுகிறது, அந்தஸ்த்தும் கொடுக்கப்படுகிறது”.
இதே அர்தத்தில் நபியின் صلى البه عليه وسلم ஒரு ஹதீஸும் வந்துள்ளது . அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் صلى الله عليه وسلم நேசிப்பதாக கூறிய ஒருவரிடம் நபி صلى الله عليه وسلم கூறினாற்கள்: “நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடனே இருப்பாய்” [அனஸின் ஹதீஸ் رضي الله عنه ஸஹீஹ் அல்புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் அறிவிக்கும் முத்தஃபக்குன் அலைஹி வகை ஹதீஸ்].
இதிலிருந்து தீயவர்களின் தொடர்பில் பெரும் தீமைகள் விழையும் என்பதும் தெரிகிரது. அல்லாஹ் அஸ்ஸாஃப்பாத் ஸூராவில் கூறுகிறான்:
قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ “
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ
‘நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?’ என்றும் கேட்டான்.>
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
(அவ்வாறு கூறியவனை) ‘நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?’ என்றும் கூறுவார்.
فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
قَالَ تَاللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
(அவனிடம்) ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ
‘என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.“
[அஸ்-ஸாஃப்ஃபாத் 37:51-57]