5. மரணித்தவரின்‌ உறவினர்களுக்கு கடமையானவை

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார:

19. தனது உறவினர்‌ ஒருவர்‌ மரணித்து விட்டார்‌ என்ற செய்தியை அறிந்த
சொந்தக்காரர்களுக்கு இரண்டு விஷயங்கள்‌ கடமையாகிவிடுகின்றன.

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

நிச்சயமாக நாம்‌ உங்களை ஓரளவு அச்சத்தாலும்‌, பசியாலும்‌, பொருள்கள்‌,
உயிர்கள்‌, விளைச்சல்கள்‌ ஆகியவற்றின்‌ இழப்பினாலும்‌ சோதிப்போம்‌; ஆனால்‌
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர்‌ நற்செய்தி கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத்‌ துன்பம்‌ ஏற்படும்போது,
‘நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வுக்கே உரியவர்கள்‌; நிச்சயமாக நாம்‌ அவனிடமே திரும்பிச்‌
செல்வோம்‌’ என்று கூறுவார்கள்‌. இத்தகையோர்‌ மீது தான்‌ அவர்களுடைய
இறைவனின்‌ நவ்லாசியும்‌, நற்கிருபையும்‌ உண்டாகின்றன, இன்னும்‌ இவர்கள்‌ தாம்‌
நேர்வழியை அடைந்தவர்கள்‌.

(அல்‌-குர்‌ஆண்‌: 2:155-157)

இந்த வசனங்கள்‌ துன்பம்‌ ஏற்படும்போது பொறுமையைப்‌ பற்றிப்பிடித்து
அல்லாஹ்வின்‌ தீர்ப்புக்குத்‌ தலை சாய்ப்பவர்களுக்குக்‌ கிடைக்கும்‌ நன்மைகளைத்‌
தெளிவாக விளக்குகின்றன. பல நபிமொழிகளும்‌ இதற்கு ஆதாரங்களாக இருக்‌கின்றன.
ஒரு முறை நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ நடந்து போய்க்‌ கொண்டிருக்கும்‌ போது ஒரு
அடக்கஸ்தலத்தில்‌ பெண்ணொருத்தி அழுது கொண்டிருப்பதைக்‌ கண்டார்கள்‌.
“பெண்ணே! அல்லாஹ்வைப்‌ பயந்துகொள்‌! பொறுமையாயிரு!” என நபியவர்கள்‌
கூறினார்கள்‌. இவ்வாறு கூறுபவர்‌ யார்‌ என்று அப்பெண்‌ நிமிர்ந்து பாராமல்‌
“இங்கிருந்து போய்விடு, என்‌ துன்பத்தை நீ அறியமாட்டாய்‌!” எனக்‌ கூறினாள்‌.
நபியவர்கள்‌ சென்று விட்டார்கள்‌.
“உன்னோடு இப்போது பேசியவர்‌ அல்லாஹ்வின்‌ தூதராகும்‌’’ என ஒருவர்‌
வந்து கூறினார்‌. நடுநடுங்கி, முகம்‌ வெளுத்தவளாக அவள்‌ நபியவர்களின்‌
வீட்டுக்குவந்தாள்‌. அங்கு வாயில்‌ காவலர்‌ யாருமில்லை. “அல்லாஹ்வின்‌ தூதரே!
உங்களை நான்‌ தெரிந்து கொள்ளவில்லை. (மன்னித்து விடுங்கள்‌)” என்றாள்‌. “துன்பம்‌
ஏற்பட்ட உடனேயே மேற்கொள்ளும்‌ பொறுமைக்குத்தான்‌ நற்கூலி கிடைக்கும்‌” என
நபியவர்கள்‌ கூறியதாக அனஸ்‌ (رضي الله عنه) அவர்கள்‌ அறிவித்திருக்கிறார்கள்‌.

(புகாரி, முஸ்லிம்‌, பைஹகி)

தனது குழந்தைகள்‌ இறந்தவுடன்‌ பொறுமையாக இருந்து அல்லாஹ்வின்‌
தீர்ப்புக்குப்‌ பணிந்து விடுபவனுக்குப்‌ பெருங்கூலியுண்டு. இது குறித்து பல நபிமொழிகள்‌
வந்துள்ளன.

௮( (தாய்‌, தந்தையான ) இரு முஸ்லிம்களுக்குப்‌ பருவமடைவதற்கு முன்‌ மூன்று
பிள்ளைகள்‌ மரணித்து விடுவார்களாயின்‌ அப்பிள்ளைகளையும்‌ அவர்களின்‌
பெற்றோர்களையும்‌ அல்லாஹ்‌ தன்‌ அருளினால்‌ சுவர்க்கத்தில்‌ நுழையச்‌
செய்கின்றான்‌. அப்பிள்ளைகள்‌ சுவர்க்கத்தின்‌ வாசலில்‌ நின்று கொண்டிருப்பார்கள்‌.
“சுவர்க்கத்திற்குள்‌ நுழையுங்கள்‌!” என்று அவர்களிடம்‌ கூறப்படும்‌. அப்போது அவர்கள்‌
“எங்கள்‌ பெற்றோர்‌ இல்லாமல்‌ (முடியாது)’ என்பார்கள்‌. நீங்களும்‌, உங்கள்‌
பெற்றோர்களும்‌ “அல்லாஹ்வின்‌ அருளினால்‌ சுவர்க்கத்தினுள்‌ செலுலுங்கள்‌” என்று
அவர்களுக்குக்‌ கூறப்படும்‌.

(நஸயீ, பைஹகி)

ஆ. எந்தப்‌ பெண்ணாவது அவளுக்குரிய மூன்று பிள்ளைகள்‌ மரணித்தால்‌
அப்பிள்ளைகள்‌ அவளை நரகத்திற்குச்‌ செல்ல விடாமல்‌ திரையாக நிற்பார்கள்‌” என்று
நபியவர்கள்‌ கூறியதைக்‌ கேட்ட ஒரு பெண்‌ இரண்டு குழந்தைகள்‌ மரணித்தால்‌?” என்று
கேட்டாள்‌. ”இரண்டு குழந்தைகள்‌ இறந்தாலும்‌ அப்படியேதான்‌” என நபி (صلى الله عليه وسلم)
அவர்கள்‌ கூறினார்கள்‌.

(புகாரி. முஸ்லிம்‌)

இ. சொந்தக்காரனோ அல்லது ஒரு முஸ்லிமோ மரணித்ததைச்‌ செவியுற்றால்‌

إنَّا للـهِ وإنَّا إلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أجُرْنِي فِي مُصِيْبَتي، وأخْلِفْ لِي خَيْراً مِنْهَا

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்‌” என்று கூற வேண்டும்‌. அத்துடன்‌
அல்லாஹும்ம அஜிர்னி ஃபீ முஸீபதீ வஃஹ்லுஃப்லி ஃஹைரன்‌ மின்ஹா (யா அல்லாஹ்‌!
எனது இத்துன்பத்தைப்‌ போக்குவாயாக! மேலும்‌ இத்துன்பத்திற்குப்‌ பகரமாக சிறப்பான
நற்பயனைத்‌ தந்தருள்வாயாக!) என்று கூறுவது நபிவழியாகும்‌.

(புகாரி, முஸ்லிம்‌)

20. தன்‌ மகன்‌ இறப்புக்காக ஒரு பெண்‌ தன்‌ அலங்காரங்களைக்‌ குறைத்துக்‌
கொள்ளக்கூடாது. அப்படிச்‌ செய்வதானாலும்‌ மூன்று நாட்களுக்கு மேற்படாது துக்கம்‌
கடைப்பிடிக்கலாம்‌. எனினும்‌ கணவன்‌ இறந்தால்‌ மட்டும்‌ மனைவி நான்கு மாதம்‌ பத்து
நாள்‌ துக்கம்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌.

அபுஸலமாவின்‌ மகள்‌ ஜைனபு (رضي الله عنها) அவர்கள்‌ மூலம்‌ நான்‌ அன்னை உம்மு
ஹபீபா (رضي الله عنه) அவர்களின்‌ வீட்டுக்குச்‌ சென்றேன்‌. அல்லாஹ்வின்‌ மீதும்‌, மறுமை நாள்‌
மீதும்‌ நம்பிக்கை கொண்ட எந்தப்‌ பெண்ணும்‌ மூன்று நாட்களுக்கு மேல்‌ துக்கம்‌
கடைப்பிடிக்க கூடாது. இறந்த கணவனுக்காக மனைவி மட்டும்‌ நான்கு மாதம்‌ பத்து நாள்‌
துக்கம்‌ கடைப்பிடிக்கலாம்‌ என நபி(صلى الله عليه وسلم) அவர்கள்‌ கூறியதைக்‌ கேட்டேன்‌ என்று
அறிவித்தார்கள்‌.
பின்னர்‌ அன்னை ஜைனப்‌ பிந்து ஜஹ்ஷ்‌ (رضي الله عنه) அவர்கள்‌ வீட்டுக்குச்‌ சென்றேன்‌.
அப்போது அவர்‌ தமையன்‌ மரணமடைந்திருந்தார்‌. உடனே அவர்‌ வாசனைத்‌
திரவியத்தைக்‌ கொண்டு வரச்‌ சொல்லி அதனைப்‌ பூசிக்‌ கொண்டார்‌. “எனக்கு இப்போது
மணம்‌ பூசுவதற்கு விருப்பமில்லை. எனினும்‌ கணவன்‌ இறந்த பெண்ணைத்‌ தவிர வேறு
எந்தப்‌ பெண்ணும்‌ மூன்று நாட்களுக்கு மேல்‌ துக்கம்‌ கடைப்பிடிக்கக்‌ கூடாது என நபி (صلى لله ليه سلم) அவர்கள்‌ கூறியதைக்‌ கேட்டேன்‌. அதற்காகவே இப்போது மணம்‌
பூசிக்கொள்கிறேன்‌” என்றார்‌.

(புகாரி).

 

இந்த நூலின் முந்தைய தலைப்பு பார்க்க

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply