சூரா அல்-மஸத் விளக்கம் – இமாம் அஸ்-ஸஅதி

 {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ * سَيَصْلَى  نَارًا ذَاتَ لَهَبٍ * وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ * فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} .

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
 
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
 
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
 
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: அபூ லஹப்- நபியின் صلى الله عليه وسلم பெரிய தந்தை. அவன் நபியின் صلى الله عليه وسلم கடும் எதிரியாகவும், அவருக்கு பெரும் துன்பங்களையும் தரக்கூடியவனாக இருந்தான். அவனடிம் தீனும் இல்லை, நபியின் உறவு முறையையும் அவன் கண்ணியப்படுத்தவில்லை – அல்லாஹ் அவனை இழிவுபடுத்தட்டும்.

ஆகையால், அல்லாஹ் அவனை (இந்த சூராவில்) கடுமையாக கண்டித்தான், கியாமத் நாள் வரை அவனுக்கு இதனால் இழிவு தான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ 
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக,

அதாவது அவன் கைகள் பயனளிக்காமல் போகட்டும், நாசமயட்டும்.

وَتَبَّ
அவனும் நாசமாகட்டும்.

அவன் வாழ்வில் எந்த பயனும் ஆடவில்லை.

{مَا أَغْنَى عَنْهُ مَالُهُ}
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

எது அவனை அகம்பாவம் அடைய செய்ததோ, அவன் சேகரித்த அந்த பொருட்ச்செல்வங்களால் அல்லாஹ்வின் வேதனை இறங்கும்போது அவனை காக்க ஒன்றும் செய்ய இயலாது.

{سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ}
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

அந்த நரக நெருப்பு அவனை எல்லாப்பக்கங்களிலும் சூழும். அவனையும் விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியையும் .

அவளும் அல்லாஹ்வின் தூதருக்கு صلى الله عليه وسلم பெரும் துன்பங்களை தரக்கூடியவளாக இருந்தால். அவளும் அவளின் கணவனும் ஒருவருக்கொருவர் பாவத்திலும் அநீதியிலும் உதவியாளர்களாக இருந்தார்கள். அவளால் இயன்ற அளவுக்கு அல்லாஹ்வின் தூதருக்கு صلى الله عليه وسلم துன்பம் கொடுத்தாள்.

விறகுகள் சுமப்பவன் எப்படி விறகுகளை சேர்த்து, கழுத்தில் பேரீச்சமர நாரின் கயிற்றில் கட்டி சுமப்பானோ, அதை போல் அவளும் அவளின் முதுகில் பாவங்களை சேர்த்து சுமந்தாள்.

மஸத்(مَسَدٍ) எனும் வார்த்தைக்கு பேரீச்சமர நார் என்று அர்த்தம்.

இப்படியும் அர்த்தம் வரலாம்:
அவள் தன் கணவனின் நரக நெருப்புக்கு விறகுகளை சுமந்து செல்வாள், அந்த விறகுகள் அவளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும்.

எது சரியான அர்த்தமாக இருந்தாலும், இந்த சூரா அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சிகளில் ஒன்று. அல்லாஹ் இந்த சூராவை அபூ லஹபும் அவனின் மனைவியின் உயிருடன் இருக்கும்போதே இறக்கினான், அதில் அவர்கள் நரக நெருப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தான். அதன் அர்த்தம் அவர்கள் ஒரு போதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதாகும். மறைவானதையும் வெளிப்படையானதாயும் அறிந்த அல்லாஹ் கூறியது உண்மையானது.

أبو لهب هو عم النبي صلى الله عليه وسلم، وكان شديد العداوة [والأذية] للنبي صلى الله عليه وسلم، فلا فيه دين، ولا حمية للقرابة -قبحه الله- فذمه الله بهذا الذم العظيم، الذي هو خزي عليه إلى يوم القيامة فقال: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} أي: خسرت يداه، وشقى {وَتَبَّ} فلم يربح، {مَا أَغْنَى عَنْهُ مَالُهُ} الذي كان عنده وأطغاه، ولا ما كسبه فلم يرد عنه شيئًا من عذاب الله إذ نزل به، {سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ} أي: ستحيط به النار من كل جانب، هو {وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ} .

وكانت أيضًا شديدة الأذية لرسول الله صلى الله عليه وسلم، تتعاون هي وزوجها على الإثم والعدوان، وتلقي الشر، وتسعى غاية ما تقدر عليه في أذية الرسول صلى الله عليه وسلم، وتجمع على ظهرها من الأوزار بمنزلة من يجمع حطبًا، قد أعد له في عنقه حبلا {مِنْ مَسَدٍ} أي: من ليف.

أو أنها تحمل في النار الحطب على زوجها، متقلدة في عنقها حبلا من مسد، وعلى كل، ففي هذه السورة، آية باهرة من آيات الله، فإن الله أنزل هذه السورة، وأبو لهب وامرأته لم يهلكا، وأخبر أنهما سيعذبان في النار ولا بد، ومن لازم ذلك أنهما لا يسلمان، فوقع كما أخبر عالم الغيب والشهادة.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply