அந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை

بسم الله الرحمن الرحيم

அந்த குழந்தைகளை மரணம் நெருங்குவிட்டதை முஹம்மது ப்ஸீக் அறிவார். ஆனால் அவர் அவர்களை எடுத்து வளர்த்தி வருகிறார். 64 வயது முஹம்மது ப்ஸீக் லிபியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

1989தில் துவங்கி இதுவரை மரணத்தருவாயில் உள்ள 80க்கும் மேற்பட்ட குழந்தைகளை பஸீக் எடுத்து வளர்த்தியிருக்கிறார் . அவர் வளர்த்தியதில் 10 குழந்தைகள் மரணித்துவிட்டனர், அவர்களில் சிலர் அவரின் மடியில் இறந்தனர்.

அவரை குறித்த செய்தி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017இல் டைம்ஸ் பத்திரிக்கையில் பதிவாகியதிலிருந்து அவர் முழு உலகிலும் பிரபல்யம் அடைந்தார்.

ப்ஸீக் இரவு பகலாக தூக்கம் இன்றி, தான் இப்போது வளர்த்திவரும் 6வயது சிறுமியை கவனித்துவருகிறார், அந்த சிறுமியை அரியவகை மூளை நோய் தாக்கியுள்ளது, கண்பார்வையும் இல்லை, கேக்கும் திறனும் இல்லை. அவளின் இரு கரங்களும் செயல் இழந்துவிட்டது. தினமும் வலிப்பால் பாதிக்கப்படுகிறாள்.

அமெரிக்காவில் அஸுஸா எனும் இடத்தில் வாழும் ஒரு அமைதியான இறைபக்தியுடைய லிபியா முஸ்லீம், ப்ஸீக். அவர் அந்த பெண்குழந்தை இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை அறியவேண்டும் என்றே விரும்புகிறார்.

“அவளுக்கு கேக்காது, பார்க்க முடியாது என்று எனக்கும் தெரியும் ஆனால் அவளிடம் எப்பொழுதும் பேசுவேன்” என்கிறார். “நான் எப்பொழுதும் அவளை என் கைகளில் பிடித்து இருக்கிறேன், தலையை கோதிக்கொடுக்கிறேன், அவளுக்கும் உணர்வுண்டு, உயிறுண்டு. அவளும் மனுஷி தான்”

அந்த பகுதியின் அரசு குழந்தைகள் நலத்துறை அதிகாரி யூசுப் ரோசெல்லா, கூறுகையில் “எந்த ஒரு நேரமும் 600க்கும் அதிகமான குழந்தைகள் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு எங்களிடம் வருகிறார்கள். அவர்களை பாதுகாக்க வளர்ப்பு பெற்றோர்கள் தேவை படுகின்றனர்.”

“ஆனால் அங்கு ப்ஸீக் ஒருவர் தான் இருக்கிறார்.”

மெலிசா டெஸ்டெர்மன் எனும் அதிகாரி கூறுகிறார் “எங்களிடம் யாரவது ஒருவர் ‘இந்த குழந்தைக்கு ஒரு குடும்பம் தேவைப்படுகிறது’ என்று கூறினால் எங்களுக்கு ஒருவர் தான் நினைவில் வருகிறார். அவர் ஒருவர் தான் மரணத்தருவாயில் இருக்கும் குழந்தைகளை எடுத்து வளர்த்துபவர்’.

“முழு நாட்டிலும் ப்ஸீக் ஒருவர் தான் மரணத்தருவாயில் இருக்கும் குழந்தைகளை வளர்த்துவதற்கு தயாராக இருப்பார்.” என்கிறார் யூசுப் ரோசெல்லா.

அந்த 6 வயது சிறுமியை இரவு பகலாக பார்த்து சோர்ந்து போயிருப்பார் என்றறிந்தும், அவரிடம் யூசுஃப் வேறு ஒரு குழந்தையும் பார்ப்பீர்களா என்று கேட்டார் . இம்முறை ப்ஸீக் தன்மையுடன் மறுத்துவிட்டார்.

அவர் வளர்த்தி வரும் குழந்தையின் விவரங்களை வெளியிட சட்டத்தில் தடை இருக்கும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவரின் வீட்டில் சில நேரம் செலவிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவர் வளர்த்திவரும் அந்த சிறுமி ப்ஸீக்கின் வீட்டு மூலையில் சோபாவில் அமர்ந்திருந்தாள். அவளின் நீல, மெலிதான கூந்தல் குடுமியிடப்பட்டிருந்தது, அவளின் பார்வையற்ற கண்ணிற்கு மேல் சீராக வளைந்த புருவம் இருந்தது .

சிறுமியின் தலை அவளின் 12 கிலோ எடை உடலுக்கு மிக சிறிதாகவே இருந்தது, அவளின் உடல் அவளின் வயதுக்கு மிக சிறிதாகவே இருந்தது. அரிதான ஒரு சத்துக்குறைபாடோடு பிறந்ததனால், அவளின் மூளையின் ஒரு பகுதி மண்டையோட்டின் வெளியில் வளர்ந்தது என்று அவளின் மருத்துவர் சூசன் ராபர்ட்ஸ் கூறினார். மூளைமருத்துவர்கள் அவள் பிறந்த சில நேரத்தில் அந்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து துண்டித்தார்கள், ஆனால் அவளின் மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தது.

பிரந்த ஒரு மதத்திலிருந்து ப்ஸீக்கே அந்த குழந்தையை பராமரித்து வருகிறார். இதன் முன்னர் அதே நோயால் தாக்கப்பட்ட வேறு மூன்று குழந்தைகளையும் பராமரித்திருக்கிறார். இந்த குழந்தைகளுக்கு ஆயுள் தண்டனை என்று கூறினார்.

1978 இல் லிபியாவிலிருந்து கல்லூரி மாணவராக அமெரிக்கா வந்த ப்ஸீக், பல ஆண்டுகளுக்கு பின்னர் டாவ்ன் எனும் பெண்ணை திருமணம் முடித்தார். டாவ்ன் 80களில் அவரை சந்திப்பதற்கு முன்பு வளர்ப்புத்தாயாக இருந்து வந்தார். டாவ்னின்தாத்தா பாட்டியும் இது போல குழந்தைகளை எடுத்து வளர்த்தியிருக்கிறார்கள். ப்ஸீக்கை சந்திப்பதற்கு முன் டாவ்ன் தன் வீட்டை அவசர உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு திறந்து விட்டார் .

ப்ஸீக் கூறுகையில், “டாவ்ன் தான் வளர்த்திய ஒவ்வொரு குழந்தையையும் நேசித்தார். சிறு பூச்சிகளையும் கண்டு பயந்த டாவ்ன், குழந்தைகளின் நோய்களையும் குழந்தைகளை நெருங்கி இருக்கும் மரணத்தையும் கண்டு அச்சப்படாமலிருந்தார்” என்கிறார்.

அவர்களிருவரும் அவர்களின் வீட்டில் பல குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தனர், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை எப்படி கவனிப்பது என்று மக்களுக்கு பயிற்சி அளித்தனர்.

1989இல் ப்ஸீக் தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளை பராமரிக்க துவங்கினார். அவர்கள் வளர்த்திய குழந்தைகள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

முஹம்மது ப்ஸீக் 1991 ஆம் ஆண்டில் ஒரு வளர்ப்பு குழந்தையின் மரணத்தை அனுபவித்திருந்தார். விவசாய தொழிலாளியான அந்த குழந்தையின் தாய், கர்ப்பகாலத்தில் நச்சு பூச்சிக் கொல்லி மருந்தை ஸ்வாசித்தார். முதுகெலும்பு பிரச்சனையுடன் பிறந்தார், முழு உடம்பும் பிளாஸ்டர் இடப்பட்டிருந்தார், ஒரு வயது அடையும் முன்னர் ஜூலை 4, 1991 அன்று இறந்தார்.

அழகிய வெள்ளை ஆடையில், மஞ்சள் மலர்கள் சூழ மரணப்பெட்டியில் இருந்த அந்த சின்னங்சிறு குழந்தையின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே “இந்த மரணம் என்னை மிகவும் பாதித்தது” என்றார் ப்ஸீக்.

1990களின் நடுப்பகுதியில் ப்ஸீக்கும் அவரின் மனைவியும் மரணத்தருவாயில் இருக்கும் குழந்தைகளை மட்டுமே வளர்ப்பது என்று முடிவெடுத்தனர். இந்த குழந்தைகளுக்கு DNR எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும், அதாவது அவர்களின் இதயம் நின்றாலும் மருத்துவர்கள் உயிர்ப்பிக்க முயற்சி செய்யமாட்டார்கள், அந்த நிலையில் இருந்த குழந்தைகளை மட்டும் எடுத்து வளர்த்தினார்கள்.

மற்றோர் குழந்தை குறுகிய குடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், தன் 8 வயது வாழ்க்கையில் 167 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திட உணவு எதுவும் உட்கொள்ள முடியாத நிலையிலும் அவரை தன் குடும்பத்தில் ஒருத்தியாக , ஒரே மேடையில் வைத்து உண்பார்கள் ப்ஸீக்கும் அவரின் மனைவியும்.

ப்ஸீக் இப்பொழுது வளர்த்தி வரும் குழந்தையின் அதே மூளை நோயுடன் இருந்த இன்னொரு குழந்தை. அவரை வீட்டிற்கு கொண்டு வந்து எட்டே நாளில் மரணித்தார். சின்னஞ்சிறு அந்த குழந்தையின் உடலுக்கு, இறந்தவுடன் பொம்மை செய்பர் ஒருவர் தான் ஆடை தெய்த்து தந்தார். ப்ஸீக் குழந்தையின் உடலை கொண்ட பெட்டியை தன் கையில் ஒரு செருப்பு பெட்டி தூக்குவதை போல் தூக்கி செண்டர்.

“உங்கள் சொந்த குழந்தைகளை நேசிப்பது போல் அவர்களை நேசிப்பது முக்கியம்,” என்று கூறினார். “அவர்களின் நோய் எனக்கு தெரியும். அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் ஒரு மனிதனாக என்னால் இயன்றதை செய்கிறேன், மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிடுகிறேன்” என்றார்.

ப்ஸீக்கிற்கு பொருளாதார உதவி செய்ய:
https://www.gofundme.com/bzeek

ப்ஸீக்கின் ஒரே மகன், ஆதம், 1997 ல் பிறந்தார் – பலவீன எலும்பு நோய்(brittle bone disease) மற்றும் குறைந்த வளர்ச்சியுடன் பிறந்தார். அவரது டயப்பரை(diaper) அல்லது காலுறையை மாற்றினால் கூட அவரின் எலும்புகள் முறியும் அபாயம் இருந்தது.

தன் சொந்த குழந்தைக்கு ஏற்பட்ட நோயினால் அவர் என்றும் விரக்தியோ கோவமோ அடைந்ததில்லை என்றார் ப்ஸீக். மற்ற குழந்தைகளைப்போலவே அவரையும் நேசித்தார் ப்ஸீக்.

இப்பொழுது 19 வயதான அவரின் மகன் ஆதம், 30 கிலோ எடையுடன், பெரிய கண்களுடன் வீட்டை சுற்றி தன் தந்தை செய்து தந்த தள்ளுவண்டியில் வளம் வருகிறார்.

கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கும் ஆதம் கல்லூரிக்கு மின்-சக்கர நாற்காலியில் செல்கிறார். “அவர் தான் தன் வகுப்பிலேயே மிக சிறிய மாணவர். ஆனால் ஒரு போராளி” என்கிறார் ப்ஸீக்.

ஆதமின் பெற்றோர்கள் தன்னுடன் வளரும் குழந்தைகளின் நோயையோ, அவர்கள் மரணிக்கப்போகிறார்கள் என்றோ எப்பொழுதும் அவரிடம் மறைத்ததில்லை. மரணம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டனர். இதனால் வாழ்வின் சிறு சந்தோஷங்களும் அவர்களுக்கு அர்த்தம் தந்தது.

“நான் என் சகோதரியின் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறேன் . யாருக்கும் இந்த அளவு வழியும் வேதனையும் வரக்கூடாது” என்றார் கூச்சசுபாவமுடைய ஆதம்.

2000ஆம் ஆண்டு டாவ்ன் நோயால் பாதிக்கப்பட்டார். கடும் வலிப்பு தாக்கி பலநாட்கள் பலவீனமாக ஆகி விடுவார். பொது இடங்களில் விழுந்து விடுவோம் என்ற பயத்தால் எங்கும் வெளியே செல்லமாட்டாள். நோயால் கடும் துயரும் வேதனையும் அடைந்து, பிரிந்தனர், அதன் பின்னர் ஒரு ஆண்டில் டாவ்ன் மரணித்தார்.

ஒரு குளிரான நவம்பர் காலையில், சக்கர நாற்காலியில் ப்ஸீக் அந்த பெண்குழந்தையையும், அவரின் பார்முலா உணவையும் குழந்தைகள் மருத்துவமனைக்கு தள்ளிச் சென்றார். இளஞ்சிவப்பு கம்பளிக்குள் இருந்தாள், “அப்பா எங்கள் வீட்டை ஒட்டவைத்திருக்கும் டேப்பை போல்” என்று எழுதப்பட்ட தலையணையில் அவளின் தலை சாய்ந்திருந்தது.
சீராக இல்லாத பருவநிலையினால் சளிதாக்கியிருந்தது.
அவளின் பலகீனமான மூளையால் அவளின் உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது. ஒரு கால் சூடாகவும் மற்றோர் கால் சில்லென்றும் இருந்தது.
இரும்பலினால் சிவந்திருந்தது அவளின் முகம், சளியினால் மூச்சு திணறினாள். மக்கள் அவளை பாராமல் திரும்பிக்கொண்டனர்.

ப்ஸீக் அவளின் கன்னத்தை தடவி கொடுத்து, கரங்களை பிடித்துக்கொண்டார். இந்த மருத்துவமனை ப்ஸீக்கின்இரண்டாவது வீடாக மாறிவிட்டது.

மற்ற நேரத்தில் குலந்தியின் மற்ற மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசுவார், அவளின் வக்கீல்கள், இன்சூரன்ஸ் காரர்கள் ஆகிவர்களிடம் பேசுவார். வீட்டை விட்டு வெளியேறும்போதேல்லாம், ஒரு பெரிய மருத்தவ ஆவணங்கள் நிறைந்த கோப்புடன் தான் இருப்பார்.

புன்னகையுடன் வந்த மருத்துவர் ராபர்ட்ஸ், “வழக்கம் போல் அழகிய ஆடையுடன், எங்கள் இளவரசி வந்துவிட்டார்” என்றார்

ராபர்ட்ஸுக்கு ப்ஸீகை பல ஆண்டுகளாக தெரியும், அவரின் பல வளர்ப்பு குழந்தைகளை ராபர்ட்ஸ் பார்த்திருக்கினார். இந்த குழந்தையின் 2 வயதிலேயே டாக்டர்கள் இதற்க்கு மேல் மருத்துவ ரீதியாக முன்னேற்றம் எதுவும் கிடைக்காது என்று கூறிவிட்டனர்.

22 மணிநேரம் குழாய் மூலமே உணவு தரப்படும் அந்தக்குழந்தை, இத்தனை நாள் வாழ்வதற்கு காரணம் ப்ஸீக் தான் என்றார் ராபர்ட்ஸ்.
“நல்ல மனநிலையில் இருக்கும் போது, கட்டிப்பிடிக்க கேட்டு அழுகுவலாள் . அவளால் பேசமுடியாவிட்டாலும், தன் தேவைகளை எப்படி தெரியவிப்பது என்று தெரியும். தன் வாழ்க்கையை சந்தோஷமாகவே வாழ்கிறார். எல்லாம் ப்ஸீக்கினால் தான் ” என்றார் ராபர்ட்ஸ்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் மருத்துவத்திற்கும் தவிர ப்ஸீக் வெளியே அதிகம் செல்வதில்லை. மூச்சு திணறலை தவிர்க்க அமர்ந்தே உரங்குவாள் அந்தக்குழந்தை. ப்ஸீக்கும் அருகில் அமர்ந்தே தூங்குவார், அவரின் தூக்கம் குறைவானதே.

டிசம்பர் மாதம், ப்ஸீக், ஆதாம், அவளின் செவிலி குழந்தையின் 6ஆவது பிறந்த நாளை கொண்டாட ஒரு சிறிய விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தையின் பெற்றோறையும் அழைத்திருந்தனர். அவர்கள் வரவில்லை.

அழகிய சிவப்பும் வெள்ளையும் கலந்த ஆடையை அணிந்திருந்த அந்த குழந்தையின் கைகளை ப்ஸீக் குனிந்து பிடித்து தட்டினார்.
“நீ ஆறு வயதை அடைந்து விட்டாய், 6! 6! 6!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

6 மெழுகுவர்த்திகளை கேக்கில் வைத்து மெழுகுவர்த்திகளை உஷ்ணத்தை உணரவேண்டும் என்பதற்காக அவளின் முகத்தின் அருகில் கொண்டு சென்றார்.

“ஹாப்பி பர்த்டே” என்று பாடும் போது ப்ஸீக் குழந்தையின் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு சென்றார். மெதுவாக அரவணைத்தார். அவள் மெழுகுவர்த்தியின் புகையை முகர்ந்த போது அவளின் முகத்தில் ஒரு சிறு புன்னகை வந்தது.!

அல்லாஹ் முஹம்மது ப்ஸீக்கிற்கு உதவி செய்வானாக. அவருக்கு இரு உலகிலும் நற்கூலியை தருவானாக.

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply