உள்ளத்தின் கடுந்தன்மைக்கு தீர்வு

கேள்வி:

கண்ணியமான ஷேக்! என் உள்ளம் கடுமையாகி விட்டது, இறைவனுக்கு கட்டுப்படுவது எனக்கு சிரமாமகிவிட்டது. இதற்கு எதேனும் தீர்வுண்டா? பாவங்களினால் எனக்கு நானே தீங்கு இழைதுக்கொண்ட நிலையில், எனக்கு உங்கள் ஆலோசனை என்ன?

இளம் சகோதரிகள் சிலர் நாகரீக ஆடை அலங்காரங்களிலும், மார்கத்தில் சோதனை ஏற்படுத்தும் அதுபோன்ற மற்ற காரியங்களிலும் நேரங்களை வீனடிக்கிரார்கள். அவர்களுக்கும் உங்கள் உபதேசம் என்ன?

பதில்: உள்ளத்தின் கடுந்தன்மைக்கு மருந்து, குர்ஆனை அதிகமாக ஓதுவது.

இதற்கு ஆதாரம், அல்லாஹ்வின் சொல்:

﴿لَو أَنزَلنا هذَا القُرآنَ عَلى جَبَلٍ لَرَأَيتَهُ خاشِعًا مُتَصَدِّعًا مِن خَشيَةِ اللَّهِ وَتِلكَ الأَمثالُ نَضرِبُها لِلنّاسِ لَعَلَّهُم يَتَفَكَّرونَ﴾
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.

[ அல் – ஹஷ்ர்: 21]

மலை கடுமையான பாரைகளினாலானது அறிந்ததே, அந்த மலைமீது குர்ஆன் இறங்கும்போது அது பயந்து நடு நடுங்கி, பிளந்து போகும். இது போன்று மனிதனின் உள்ளமும் குர் ஆணை ஆழ உணர்ந்து ஓதினால், அதன் விளைவுகளை உள்ளத்தில் காணலாம். அல்லாஹ்வின் சொல்லை கேளுங்கள்:

إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

[காஃப்:37]

ஆகையால் என் சகோதரியே, நீங்கள் குர்ஆனை ஆழ்ந்து உணர்ந்து பயபக்தியுடன் ஓதுங்கள். அல்லாஹ் உங்கள் உள்ளத்தின் கடுமையை மென்மையாக மாற்றுவான்.

நவநாகரீக ஆடை அலங்காரங்களில் காலம் கழிக்கும் பெண்கள் இந்த உலக வாழ்க்கை மற்றும் மறுமை இரண்டையும் வீனாக்குக்கின்றனர், [அல்லாஹ் நாடினால் தவிர]. இந்த பெண்கள் தங்கள் இச்சைகளுக்கும் ,கணவர்களுக்கும் , தந்தைகளுக்கும், தங்கள் மீது அதிகரமுடயவர்களுக்கும் கட்டுப்பட்டு இவ்வாறான அலங்காரங்களில் ஈடுபடுகின்றனர். இதில் இவர்கள் செலவழிக்கும் பணம் காஃபிர் நிறுவனங்களுக்கு செல்கின்றன. நம் எதிரிகள் நம் செல்வத்தால் பயநடைகின்றனர். இப்பெண்களுக்கும் அவா்களின் குடும்பதலைவர்களுக்கும் இது போன்ற நவ நாகரீக ஆடை அலங்காரங்களின் பின்னால் செல்லாதீர்கள் என்பதே எனது உபதேசம். இதில் நேரமும் செல்வமும் வீனடைகிறது, உள்ளங்களும் இதனால் பாதிக்கப்படுகிறது.

ஷேக் உசைமீன் – சில்சிலாத் அல் லிகா அஷ்ஷஹ்ரிய.

[ السؤال: ]

فضيلة الشيخ، أشكو من قسوة قلبي وثقل الطاعة عليَّ فهل من حل؟ رغم أني
مسرفة على نفسي بالمعصية، فما نصيحتك لي ولأخواتي الفتيات اللاتي شغلن
بالموضة ونحوها من الأمور التي تفتن المرأة عن دينها؟

الجواب:

أقول: إن قسوة القلب لها دواء وهو الإكثار من قراءة القرآن، دليل ذلك
قول الله عز وجل: ﴿لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ
لَرَأَيْتَهُ خَاشِعاً مُتَصَدِّعاً مِنْ خَشْيَةِ اللَّهِ﴾ [الحشر:21]
والجبل كما نعلم حجارة صماء لو نزل القرآن عليها لخشع وتصدع، كذلك القلب
إذا ورد عليه القرآن وقرأ الإنسان بتفكر وتمعن فلا بد أن يؤثر في قلبه،
واسمع إلى قول الله تعالى:﴿ إِنَّ فِي ذَلِكَ لَذِكْرَى لِمَنْ كَانَ لَهُ
قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ﴾ [ق:37] فعليك أيتها الأخت!
بتلاوة كتاب الله بتدبر وتخشع، وسيبدل الله هذه القسوة ليناً ورجوعاً إلى
الله تبارك وتعالى. أما النساء اللاتي شغلن بالموضات فقد خسرن الدنيا
والآخرة إلا أن يشاء الله، وإنك لتعجب من هؤلاء النساء اللاتي شغلن
بالموضات يتعبن أنفسهن، ويتعبن أزواجهن، ويتعبن آباءهن ويتعبن أولياء
أمورهن، ثم إن هذا المال يذهب إلى من؟ إلى الشركات التي تورد هذه الموضات
وقد تكون الشركات شركات كافرة، فينتفع أعداؤنا بأموالنا. فنصيحتي للنساء
ولأولياء أمورهن: ألا يذهبوا وراء هذه الموضات التي لا خير فيها إلا إضاعة
الوقت وإتلاف المال، مع ما فيها من تأثير على القلب في انصرافها عن طاعة
الله.المصدر: سلسلة اللقاء الشهري > اللقاء الشهري [72]

التوبة والرقائق

Help us translate
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: