கொள்ளை நோய், அல்லது கொள்ளை நோய் பரவும் எனும் அச்ச காலத்தில் ஜும்ஆ தொழுகை, ஜமாஆத் தொழுகைக்கு செல்வதன் சட்டம்

கேள்வி: கொள்ளை நோய் பரவும் காலத்திலும் கொள்ளை நோய் பரவும் எனும் அச்சம் நிலவும் சூழ்நிலையிலும், ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுக்காமல் இருப்பதன் சட்டம் என்ன?

பதில்:

புகழனைத்தும் அல்லாஹ்விற்கு.

சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்கள் குழு ஹிஜ்ரி 16/7/1441 தேதி அன்று பின் வரும் ஃபத்வாவை வெளியிட்டது:

எல்லா புகழும் இறைவனுக்கே, அவன் தான் அகிலங்களின் அதிபதி, ஸலாத்தும் ஸலாமும் நம் முஹம்மது நபியின் மீதும் அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும், அவரை பின் பற்றுவோர் மீதும் உண்டாகட்டும்.

மேலும்:

ரியாத் நகரில் 16/7/1441 அன்று நடந்த மூத்த அறிஞர்களின் இருபத்தி நான்காம் கூட்டத்தில், கொள்ளை நோய் மற்றும் கொள்ளை நோய் பரவும் அச்ச சூழலில், ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுக்காமல் இருப்பதற்கான சலுகைகள் குறித்த கேள்விகளை ஆராய்ந்தனர். குர்ஆன் ஸுன்னா, ஷரியத்தின் அடிப்படை நோக்கங்கள்(மகாசித்), ஷரியத்தின் வழிகாட்டுதல்கள், அறிஞர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் ஆராய்ந்த பின், கீழ்க்காணும் அறிவுரைகளை வெளியிட்டனர்:

1) இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர் ஜும்ஆ, ஜமாஅத் தொழுகையில் பங்கெடுப்பது ஹராம். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள் “நோயுடதை நியற்றதுடன் சேர்த்து நிருத்தவெண்டாம்”(புகாரி, முஸ்லிம்)

மேலும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “கொள்ளை நோய் ஓர் இடத்தில் ஏற்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு செல்லாதீர்கள். நீங்கள் வசிக்கும் இடத்தில் கொள்ளை நோய் பரவினால் அவ்விடத்தை விட்டு வெளியேறாதீர்கள்“.

(புகாரி, முஸ்லிம்)

2) தகுதி வாய்ந்த (மருத்துவக்) குழுவால், தனிமைப்படுத்த படவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஒர் மனிதர், அதை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். அவர் ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளில் பங்கெடுக்க கூடாது. அவர் வீட்டிலோ, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலோ தொழுக வேண்டும்.

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி (صلى الله عليه وسلم) அவர்கள், “நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள்.
(முஸ்லிம்)

3) ஒருவர் தனக்கோ அல்லது தன்னால் பிரருக்கோ தீங்கு ஏற்படும் என அஞ்சினால், அவர் ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளில் பங்கெடுக்க வேண்டியது இல்லை. நபி صلى الله عليه وسلم கூறினார்கள் : “(இஸ்லாத்தில்) தீங்கும் இல்லை தீங்கிளைப்பதும் இல்லை”. (இப்னு மாஜாஹ்)

மேல் குறிப்பிடப்பட்ட மூன்று நிலைகளிலும் ஒருவர் ஜும்ஆ தொழவில்லை என்றால் அவர் நான்கு ரக்அத்கள் ளுஹர் தொழவேண்டும்.

மூத்த அறிஞர்களின் குழு, அனைவரையும் இந்த கொள்ளை நோயை தடுக்க நியமிக்கப்பட்ட பிரத்யேக குழுவின் பரிந்துரைகள், வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது.

மேலும் உயர்ந்தோனும் கண்ணியம் வாய்ந்தோனுமாகிய அல்லாஹ்வை அஞ்சுமாரும், அவனிடம் துஆவின் மூலமும், பணிவின் மூலமும் மீண்டு இந்த சொதணயிலிருந்து விடுவிக்குமாறு பிரார்த்திக்கவும் கேட்டுக்கொள்கிறது.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:

وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.

(அல் குர்ஆன் 10:107)

وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.

(அல் குர்ஆன் 40:60)
அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் நம் முஹம்மது நபியின் மீதும் அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும், அவரை பின் பற்றுவோர் மீதும் உண்டாகட்டும்.
இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 
%d