அல்பாஸித், அல்காபித் – القابض ، الباسط
ஷேக் அப்துர்ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பத்ர் கூறுகிறார்:
இவ்விரு பெயர்களும் நபி صلى الله عليه وسلم அவா்களின் சுன்னாஹ்வில் வந்துள்ளது.
அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார்கள்:
“நபி صلى الله عليه وسلم அவா்களின் காலத்தில் ஒரு முறை, பொருள்களின் விலைவாசி அதிகரித்தது. சஹாபாக்கள் ‘ யா ரசூலல்லாஹ் நீங்கள் விலைகளை நிர்ணயிக்கலாமே!’ என்று கேட்டனர்.
அதற்கவர்கள் ‘அல்லாஹ்தான் அல்காலிக் (அனைத்தயும் படைத்தவன்), அல்காபித் (தடுப்பவன், குறைப்பவன்), அல் பாஸித் (தாராளமாக கொடுப்பவன்), அர்ராஸிக் (கொடையளிப்பவன், உணவலிப்பவன்), அல்முஸஃஇர்(விலைகளை நிர்ணயிப்பவன்). அல்லாஹ்வை நான் சந்திக்கும்போது உங்களில் எவர் ஒருவரின் பொருள், உயிருக்கு எதிராக நான் அநியாயம் செய்ததாக குற்றம் பிடிக்கப்பட விரும்பவில்லை ‘
ஸுனன் இப்னு மாஜா, திர்மிதீ, அபூ தாவூத், முஸ்னத் அஹ்மத்.
அல்பாஸித்: அவன், நாடியவர்களுக்கு ரிஸ்க்கை தாராளமாக கொடுக்கின்றான்.
அல்காபித்: சில நன்மைகளுக்காக, தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்கை குறைக்கின்றான் அல்லது அவர்களிடமிருந்து ரிஸ்க்கை தடுக்கின்றான்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:
وَلَوْ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزْقَ لِعِبَادِهِۦ لَبَغَوْا۟ فِى ٱلْأَرْضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَآءُۚ
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்;
அல் குர்ஆன் 42:27
ரிஸ்க்கை குறைவாக கொடுப்படதும் (அல்கப்து), தாராளமாக கொடுப்பது (அல் பஸ்து) அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அவன் தான் அல்காபித், அல்பாஸித், அல்ஃகாஃபித்(தாழ்த்துபவன்), அர்ராஃபி(உயர்த்துபவன்), அல்முஃதி(கொடுப்பவன்), அல் மாநிஃ (தடுப்பவன்), அல் முஇஸ் (கண்ணியப்படுத்துபவன்), அல்முதில் (கேவலப்படுத்துபவன்), அவனுக்கு யாதோர் இணையுமில்லை.
அல்கப்து, அல்பஸ்து எனும் இவ்விரு பண்புகளும், இறைவனோடு இணைக்கப்பட்டு குர்ஆன் சுண்ணாஹ்வின் பல இடங்களில் வந்துள்ளது.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُۚ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْءَاخِرَةِ إِلَّا مَتَٰعٌ
அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே மகிழ்ச்சியடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) அற்ப சுகமே தவிர வேறில்லை.
அல் குர்ஆன் 13:26
மற்றோர் இடத்தில் அல்லாஹு கூறுகின்றான்:
إِنَّ رَبَّكَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)
அல் குர்ஆன் 17:30
இது போன்ற வாசகங்கள், தாராளமாக கொடுப்பதும், தடுப்பதும் அல்லாஹ்வின் கையிலே தான் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.
அவன் தான் நாடியவர்களுக்கு செல்வத்தில், ஆரோக்கியத்தில், வயதில், இல்மில், வாழ்வில் தாராளமாக கொடுக்கிறான், அவன் நாடியவர்களுக்கு குறைக்கின்றான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
யா அல்லாஹ் எங்களுக்கு உன்னுடைய பரகத்திலும், கருணையிலும், அருளிலும், ரிஸ்கிலும் தாராளப்படுத்துவாயாக.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: