நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?

நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா? விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும்.‌ எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ஓட்டுவது ... Read more

இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?

கேள்வி இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ ... Read more

அகீதாவிற்கும் மன்ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: அகீதா எனும் “கொள்கை கோட்பாடிற்கும்”, மன்ஹஜ் எனும் “வழிமுறைக்கும்” இடையே உள்ள வித்தியாசம் என்ன?? பதில்: மன்ஹஜ் என்பது அகீதாவை விட அதிக கருத்தை பொதிந்துள்ள பொதுவான ஒரு வார்த்தையாகும். எனவே, (ஒரு முஸ்லிமின்) கொள்கை கோட்பாடிலும், பண்புகளிலும், கொடுக்கல் வாங்கல் உற்பட அவனது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் “மன்ஹஜ்” எனும் வழிமுறை காணப்படுகிறது. ஆகவே, ஒரு முஸ்லிம் நடந்து போகும் ஒவ்வொரு பாதைக்கும் “மன்ஹஜ்” என்று கூறப்படுகிறது. ஆனால், அகீதா என்பது ஈமானின் அடிப்படை ... Read more

அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!

கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்?? பதில்: “எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி ... Read more

இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?

கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து ... Read more

பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா?

  கேள்வி: ரியாத் நகரில் வசிக்கும் அஹ்மது மிஸ்ரி என்பவர் கேட்கிறார்: கண்ணியம் மிகுந்த ஷேக், பொருளாதாரம் என்பது அருட்கொடையா அல்லது சோதனையா? பதில்: பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளும், அவனின் சோதனைகளும் ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.( அல் ... Read more

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more

இகாமத்தின் வாக்கியங்கள்

கேள்வி: நான் வங்காளதேசத்தை சார்ந்தவன், எங்கள் நாட்டில் பாங்கைப் போலவே இகாமத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு முறை கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான அரபு நாடுகளில் இகாமத்தின் வாக்கியங்கள் ஒருமுறை தான் கூறப்படுவதை காண்கிறான், இதற்கான ஸஹீஹான ஆதாரம் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களிடமிருந்து இகாமத் பல முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வடிவம் (பதினோரு வாக்கியங்கள்):   1) அல்லாஹு அக்பர்; 2)அல்லாஹு அக்பர்; 3)அஷ்ஹது அன் ... Read more

அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

கேள்வி: குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா? பதிலின் சுருக்கம்: (இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்: அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் ... Read more

ஒரு விடயத்தை மறந்து விட்டால் ஓத வேண்டியது

கேள்வி கேட்பவர்: மதிப்பிற்குரிய ஷேக்… (கேட்க வந்த கேள்வியை மறந்து விடுகிரார், பின்னர் நபி صلى الله عليه அவர்கள் மீது ஸலவாத்து கூறுகிறார்) ஷெய்க் அல் – அல்பானி: وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; ஸூரதுல் கஹ்ஃப் :24 ஏனென்றால், ஒரு விடயத்தை மறந்து விட்டால் அதை நினைவு கூறவதற்காக, நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும் ... Read more