பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா?

 

கேள்வி: ரியாத் நகரில் வசிக்கும் அஹ்மது மிஸ்ரி என்பவர் கேட்கிறார்: கண்ணியம் மிகுந்த ஷேக், பொருளாதாரம் என்பது அருட்கொடையா அல்லது சோதனையா?


பதில்: பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளும், அவனின் சோதனைகளும் ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ

சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
( அல் குர்ஆன் 21:35)

மேலும் சுலைமான் عليه السلام பற்றி கூறும்போது அல்லாஹ் கூறினான், அவரிடம் பில்கீஸ் ராணியின் சிம்மாசனம் கொண்டு வரப்பட்ட போது:

قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ

‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்” என்று கூறினார் (சுலைமான்)

அல் குர்ஆன் (27:40)

ஆகையால் பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று, அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை சோதிக்கிரான், அவர்கள் அந்த அருட்கொடைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறார்களா? அந்த செல்வத்தை அல்லாஹ்விற்கு கட்டுப்படும் வகையில் செலவு செய்கிறார்களா? அல்லது அவனுக்கு நன்றி செலுத்தாமல், பாவ காரியங்களில் செலவு செய்கிறார்களா? என்று சோதிக்கிரான்.

அவர் முதல் வகையை சேர்ந்தவராக இருந்தால், அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர், அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வழங்குகிறான், அல்லாஹ் கூறுகிறான்:

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ 

உங்கள் இறைவன் நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்…..என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.

அல் குர்ஆன் 14:7

அவர் இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருந்தால்,  அதாவது அந்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமழும், அதை பாவங்களில் செலவு செய்பவராகவும் இருந்தால், அல்லாஹ் கூறுகின்றான்:

وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏

நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் 

அல் குர்ஆன் 14:7

ஒருவர் அல்லாஹ்வினால் செல்வம் வழங்கப்பட்டு, அவர் அதற்கு நன்றி செல்துத்தாதவராக இருந்தும், அவரிடம் இருந்து அல்லாஹ் அந்த செல்வத்தை பறிக்காமல் இருக்கிறான் என்றால், அவர் அறிந்து கொள்ளவேண்டும்,  அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்கின்றான் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அது அல்லாஹ் அவருக்கு கொடுக்கும் அவகாசம். உயர்ந்தோன் அல்லாஹ் ஞானம் கொண்டவன். சில நேரங்களில் அநியாயக் காரர்களுக்கு அவகாசம் அளிக்கின்றான், பின்னர் அவன் அவர்களை பிடிக்கும் போது அவர்களால் தப்பிக்க முடியாது.

அபூமூசா அல்அஷ்அரீ (رضي الله عنه ) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள், “அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்பவிடமாட்டான்” என்று  கூறிவிட்டு,

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ

“அநீதி இழைத்த ஊர்(க்காரர்)களைப் பிடிக்கும்போது இவ்வாறே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது” (11:102) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்]

ஆகவே அல்லாஹ் எவருக்கு பொருட் செல்வத்தை வழங்கினானோ அவர், அந்த செல்வத்தை பாவகாரியங்களில் செலவிடுவதை விட்டு எச்சரிக்கையாக இருக்கட்டும். அல்லாஹ் அவர் மீது கடமையாக்கிய ஸகாத், மட்டும் ஷரியத் கட்டாயமாக்கிய இதர செலவுகளை நிறைவேற்றி, படைத்த ரப்பிற்கு நன்றியுள்ளவராக இருக்கட்டும்.

 

மூலம்: இமாம் இப்னு உஸைமீன், ஃபதாவா நூரருந் அலத்தரப்

https://binothaimeen.net/content/8865

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply