தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா??

கேள்வி: தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா? பதில்:- ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும். ... Read more

அகீதாவிற்கும் மன்ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: அகீதா எனும் “கொள்கை கோட்பாடிற்கும்”, மன்ஹஜ் எனும் “வழிமுறைக்கும்” இடையே உள்ள வித்தியாசம் என்ன?? பதில்: மன்ஹஜ் என்பது அகீதாவை விட அதிக கருத்தை பொதிந்துள்ள பொதுவான ஒரு வார்த்தையாகும். எனவே, (ஒரு முஸ்லிமின்) கொள்கை கோட்பாடிலும், பண்புகளிலும், கொடுக்கல் வாங்கல் உற்பட அவனது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் “மன்ஹஜ்” எனும் வழிமுறை காணப்படுகிறது. ஆகவே, ஒரு முஸ்லிம் நடந்து போகும் ஒவ்வொரு பாதைக்கும் “மன்ஹஜ்” என்று கூறப்படுகிறது. ஆனால், அகீதா என்பது ஈமானின் அடிப்படை ... Read more

அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!

கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்?? பதில்: “எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி ... Read more

இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?

கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி: ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்… ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன? ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ... Read more

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. ... Read more

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது ... Read more

அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக. அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும். அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ... Read more

மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?

கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா? பதில்: புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன். கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் ... Read more