அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம்

கேள்வி:

இவ்விரண்டிலும் எது மிகவும் சிறப்புக்குரியதாகும்?முதலில் மார்க்க அறிவை தேடுவதா? அல்லது அழைப்புப் பணியை மேற்கொள்வதா?

பதில்:-

முதலில் மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு இல்லாவிட்டால் அவனுக்கு இந்த அழைப்பு பணியை (சிறப்பாக) மேற்கொள்ள முடியாமல் போய்விடும். (மார்க்க அறிவு இல்லாத நிலையில்) ஒருவன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் அவனின் மூலம் அதிகமான தவறுகள் ஏற்படும்.

அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் மார்க்கத்தை கற்று (தெளிவு பெற்றுக் கொள்வது)
ஒரு அழைப்பாளனுக்கு இருக்க வேண்டிய நிபந்தனையாகும்.

அல்லாஹ் கூறினான்:-

(நபியே!) நீர் கூறுவீராக! “இதுவே என்னுடைய வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்;

(அல்குர்ஆன் : 12:108)

பதிலளித்தவர்:

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.

பார்க்க:

“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة” (146)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

 

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply