ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more

“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குஃப்ர் ஏற்படுத்துபவர்களுக்கான மறுப்பு

கேள்வி: புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை.தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பதில்: முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில் நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more
கேள்வி ;தொழுகையில் நவ நாகரிக ஆடை என்று சிலர் முழங்கால்களில் அல்லது ஆடையின் சில பகுதிகளில் கிழிந்த கால் சட்டையை (பேண்ட்) அணிந்து தொழுகிறார்கள்? அவர்கள் இதை தெரிந்தே தொழுகையில் ஈடுபடுகிறார்கள் ? இது சார்ந்து மார்க்க சட்டம் என்ன? பதில்; இவ்வாறான நவ நாகரிக ஆடையாக கருதப்படுகின்ற கால்சட்டைகளை (பேண்ட்) ஆடைகளை தொழுகையில் மட்டுமல்ல தொழுகைக்கு வெளியிலும் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆடைகளை முஸ்லிம்கள் அணியமாட்டார்கள். இவை முஸ்லிம்களின் ஆடையல்ல , மாறாக ... Read more

முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த ... Read more

அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக. அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும். அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ... Read more

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று ... Read more

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ ... Read more

வஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி : வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா? பதில் : அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது. குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் ... Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

கேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், ... Read more