முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்

1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு

قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم علم معاوية الحساب وقِهِ العذاب ) .

யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையில் இருந்து அவரை பாதுகாப்பாயாக.

இப்னு அஸாகீர்-16/684,686, தஹபீ(ரஹ்) அவர்களது “ஸியர் அலாமின் நுபுலா”-8/38, முஸ்னத் ஷமீன்- 190

a) இமாம் அல்பானி (ரஹ்) கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பாளர் தொடர் சரியானது.

என்னுடைய பார்வையில் இந்த தொடர் வலுவானது. இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் இவர்களில் இப்னு அபி உமைர் என்பவரை தவிர மற்றவர்கள்  ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற கூடியவர்கள். இப்னு அபி உமைர் நபி ﷺ அவர்களின் தோழராவார். மற்றோரு அறிவிப்பில்

யா அல்லாஹ் முஆவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக.

ஸில்ஸிலாத்து ஸஹீஹா-3227

மற்றோரு ஆதாரபூர்வமான செய்தி இமாம் அஹ்மத்(ரஹ்) தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள் “ஃபதாயீல் ஸஹாபா-1748”

b) “யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையிலிருந்து அவரை பாதுகாப்பாயாக” என்று  நபி ﷺ அவர்கள் துஆ செய்ததாக அல் இர்பாத் இப்னு ஸாரியாஹ் அஸ் ஸுலைமீ(رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஃபதாயீல் ஸஹாபாவை ஆய்வு செய்த அறிஞர்கள் இது ஹஸன் லிகைரிஹி என்று கூறியுள்ளார்கள்.

இமாம் தஹபீ இது முந்தைய ஹதீஸுக்கு வலுவான ஆதாரம் என்று கூறியுள்ளார்கள்

ஸியர் அலாமின் நுபுலா-3/124

இப்னு ஹிப்பான்(ரஹ்) தனது “அல் இஹ்ஸான் மனாகிப் அஸ் ஸஹாபா-16/191 பதிவு செய்துள்ளார்கள்.

இப்னு குஜைமா(ரஹ்) தனது ஸஹீஹ் இப்னு குஜைமாவில்- 3/214 பதிவு செய்துள்ளார்கள்

ஸஹீஹ் இப்னு குஜைமாவை ஆய்வு செய்த முஹம்மத் முஸ்தபா அல் அஃஜமீ(ரஹ்) இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் ஆகும். ஏனெனில் அல் ஹாரித் என்பவர் இடம் பெறுகிறார் இவர் மஜ்ஹூல்(யாரென அறியப்படாதவர்) ஆனால்  இர்பாத் இப்னு ஸாரியாஹ்(رضي الله عنه) அவர்கள் வழியாக வேறு அறிவிப்பாளர் தொடர் வருவதால் இது ஆதாரபூர்வமான செய்தி.

ஷேக் ஜூபைர் அலி(ரஹ்) ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

மஜல்லாஹ் அல் ஹதீஸ் :பக்கம்-62

இமாம் அல்பானி(ரஹ்) இந்த அறிவிப்பாளர் தொடர் ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

அஸ் ஸஹீஹா-7/688

இந்த ஹதீஸுக்கு வலுவூட்டும் முர்ஸலான ஹதீஸ்

حدثنا أبو المغيرة ، ثنا صفوان قال : حدثني شريح بن عبيد أن رسول الله – صلى الله عليه وسلم – دعا لمعاوية بن أبي سفيان : ( اللهم علمه الكتاب والحساب وقه العذاب ) .

யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையில் இருந்து அவரை பாதுகாப்பாயாக ஷரிஹ் இப்னு  உபைத்(ரஹ்) அறிவிக்கிறார்கள்

இமாம் அஹ்மத்(ரஹ்) உடைய ஃபதாயீல் ஸஹாபா-1749.

இந்த நூலை ஆய்வு செய்தவர்கள் இது பலவீனமான செய்தி என்று கூறுகிறார்கள். ஆனால் இது முந்தைய செய்தியை பலப்படுத்துகிறது.  ஹஸன் லிஹைரிஹி என்று வலுவுட்டுகிறது.

2)முஆவியா(رضي الله عنه) சிறப்பு

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ عَبْدُ الأَعْلَى بْنُ مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ ‏”‏ اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் மூஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்களது “தாரீகுல் கபீர்-5/240, சுனன் திர்மிதீ-3842

இமாம் அல்பானி (ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று ஸஹீஹ் அல் திர்மிதீ- 3/236 என்ற தனது நூலில் கூறியுள்ளார்கள்.

ஷெய்க் முஹம்மத் ஆமீன் அஷ்ஷின்கீதி(ரஹ்) கூறுகிறார்கள்

இமாம் புகாரி தனது “தாரீகுல் கபீரில் 5/240 ஆதாரபூர்வமான செய்தியாக பதிவு செய்துள்ளார்கள்

அபு முஸ்ஹர்—>சயீத் இப்னு அப்துல் அஜிஸ்—>ரபீஆ இப்னு யஜீத்—-அப்துல் ரஹ்மான்(رضي الله عنه) அவர்கள் நபி ﷺ கூறியதாக அறிவிக்கிறார்கள்:

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக.அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் மூஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறினார்கள்

முஸ்னத் அஹ்மதில் வரும் ஆதாரபூர்வமான செய்தி

17926 – حدثنا عبد الله حدثني أبي ثنا علي بن بحر ثنا الوليد بن مسلم ثنا سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة الأزدي عن النبي صلى الله عليه و سلم : انه ذكر معاوية وقال اللهم اجعله هاديا مهديا واهد به

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக.அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் முஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறினார்கள்

முஸ்னத் அஹ்மத்-17926

இமாம் ஷுஐப் அல்அர்னாவூத்(ரஹ்) இந்த ஹதீஸை குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்.

இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் இவர்கள் ஸஹீஹ் அல் புகாரியில் இடம் பெறுபவர்கள்.

இப்னு அஸாகீர்(ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று தாரீக் அல் திமீஸ்கீ-(59/106) கூறியுள்ளார்கள்

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று கூறுகிறார், மஜல்லாஹ் அல் ஹதீஸ்:பக்கம்-60 கூறியுள்ளார்கள்

3) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

முஆவியா(رضي الله عنه) ஃபகீஹ்(ஞானமுடையவர்) மற்றும் அவரது தொழுகை நபி ﷺ அவர்களை போன்று இருந்தது.

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

முஆவியா(رضي الله عنه), தம்மிடம் இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்களிடம் சென்றார். (முஆவியா – رضي الله عنه – அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(رضي الله عنه), ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(صلى الله عليه وسلم) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி-3764

b) அபுதர்தா(رضي الله عنه) அவர்கள் கூறினார்கள்

مَا رَأَيْتُ أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَشْبَهَ صَلاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مِنْ أَمِيرِكُمْ هَذَا ، يَعْنِي مُعَاوِيَةَ

முஆவியாவின் அளவிற்கு   வேறு யாரும் நபி ﷺ அவர்களை போன்று தொழுது நான் கண்டதில்லை.

فوائد المنتقاة العوالي الحسان للسمرقندي-[67]

4) முஆவியா(رضي الله عنه) சிறப்புகள்

முஆவியாவை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்று நபி ﷺ அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதுவருக்காக அல்லாஹ்வின் வஹீயை அவர் எழுதி கொடுப்பவராக இருந்தார்  என்று இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்.

முஸ்னத் அஹ்மத்-2651

இமாம் அல்பானி(ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று ஸில்ஸிலாத்து ஸஹீஹா-1/164 எனும் தனது நூலில் கூறியுள்ளார்கள்

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று கூறினார்.

மஜல்லாஹ் அல் ஹதீஸ்:பக்கம்-5

இமாம் இப்னு தைய்மிய்யா(ரஹ்) தனது மஜ்முஉ ஃபதாவா-4/288 கூறுகிறார்:

நபி ﷺ அவர்களது நம்பிக்கைக்குரிய நபித்தோழர்  மூஆவியா(رضي الله عنه) அவர்கள்  அல்லாஹ்வின் வஹீயை எழுதினார் என்பது பலரால் உறுதிபடுத்தபட்டுள்ளது.  மேலும் கலீஃபாவாக இருந்த உமர் இப்னு அல் கத்தாப் (رضي الله عنه) மக்களை அறிவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். உமர்(رضي الله عنه) முஆவியா(رضي الله عنه) அவர்களை ஷாமிற்கு (அது சிரியா, பலஸ்தீன், ஜோர்டன், லெபனான் ஆகிய பகுதியும் அடங்கும்) தனது மரணம் வரை அவரை ஆளுநராக வைத்து இருந்தார்கள். பிறகு கலீஃபாவாக வந்த உஸ்மான் இப்னு அஃப்பான்(رضي الله عنه) முஆவியா(رضي الله عنه)ஆளுநராக இருந்த அதே பகுதியில் மீண்டும் அவரை நியமித்தார்கள். அவர்களில் யாரும் முஆவியா(رضي الله عنه) ஆளுநராக இருந்த போது அவரை குற்றம் சாட்டவில்லை.

இப்னு அஸாகீர் (ரஹ்) கூறுகிறார்கள்

خال المومنين وكاتب وحى رب العالمين

முஆவியா(رضي الله عنه) அவர்கள் முஃமின்களுக்கு தாய் மாமன் ஆவார்கள் மேலும் இறைவனின் வஹீ எழுதக் கூடியவராக இருந்தார்கள்

தாரீக் அல் திமீஸ்கீ-62/38

5) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்புகள்

உம்மு அல்கமா அறிவிக்கிறார்கள். முஆவியா(رضي الله عنه) அவர்கள் மதீனாவிற்கு வந்து ஆயிஷா(رضي الله عنها) அவர்களிடம் நபி ﷺ அவர்களின் போர்வையும், முடியையும் கேட்டார்கள் பிறகு போர்வையை தங்களது உடம்பில் போர்த்திக் கொண்டு அந்த முடியை தண்ணீரில் முழுக்கி எடுத்து குடித்துவிட்டு தங்களின் உடம்பில் போட்டு ஊற்றினார்கள்

தாரீக் அல் திமீஸ்கீ-62/106

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) அது ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

மஜல்லாஹ் அல் ஹதீஸ்:பக்கம்-60

குறிப்பு:

இந்த செய்தியின் மூலம் முஆவியா(رضي الله عنه) அவர்கள் நபி ﷺ அவர்கள் எவ்வளவு நேசித்து இருப்பார்கள் என்பது அறிய முடிகிறது. மேலும் நபி ﷺ அவர்கள் விட்டுச் சென்றவற்றை கொண்டு பரக்கத் தேடுவது ஆகுமானது என்பதையும் உணர்த்துகின்றது

6) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

இப்னு அப்பாஸ்(رضي الله عنه) கூறுகிறார்கள்

ما رأيت رجلا كان أخلق يعنى للملك من معاوية

(நான்கு கலீஃபாக்களின் கிலாஃப்த்திற்கு பிறகு) ஆட்சி செய்வதில் முஆவியா(رضي الله عنه) அவர்களை விட வேறு சிறந்த மனிதரை நான் கண்டதில்லை.

தாரீக் அல் திமீஸ்கீ-62/161 , முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்-20985

மஜல்லாஹ் அல் ஹதீஸ்: பக்கம்-62

7)முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

முஆவியா(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமன்

அபுதாலிஃப்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடத்தில் “முஆவியா(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமனா அல்லது இப்னு உமர்(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமனா? என்று கேட்டேன் அதற்கு ஆம் முஆவியா(رضي الله عنه) உம்மு ஹபீபா பின்த் அபு சுஃபியான்(رضي الله عنها) அவர்களது சகோதரர். உம்மு ஹபீபா(رضي الله عنها) நபி ﷺ அவர்களின் மனைவியாவார் மற்றும் இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் ஹஃப்ஸா(رضي الله عنها)அவர்களின் சகோதரர். ஹஃப்ஸா(رضي الله عنه) நபி ﷺ அவர்களின் மனைவியாவார்  என்று கூறினார்கள். நான் “முஆவியா(رضي الله عنه) அவர்களை முஃமின்களுக்கு தாய் மாமன் என்று கூறலாமா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அல் ஸுன்னா-2/433

ஹாரூன் இப்னு அப்துல்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடத்தில் எனக்கு அல் ரக்காஹ் என்னும் இடத்தில் சில மக்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது அதில் அவர்கள் முஆவியா(رضي الله عنه) அவர்களை நாங்கள் முஃமின்களுக்கு தாய் மாமன் என்று கூறமாட்டோம் என்று கூறியுள்ளார்கள் அதற்கு அஹ்மத்(ரஹ்) கோபமடைந்து இந்த விஷயத்தில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மனந்திரும்பும் வரை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்

அல் ஸுன்னா-2/434

அப்துல் ஹாரித் அவர்கள் கூறுகிளார்கள்,

நாங்கள் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினோம் அதில்

முஆவியாவை வஹியின் எழுத்தாளர் என்று நான் கூறமாட்டேன். மற்றும் அவர் முஃமின்களுக்கு தாய் மாமன் என்றும் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் கிலாஃப்ததை வாள் மற்றும் படை கொண்டு பெற்றார்கள்  என்று கூறுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அதற்கு “இவை கெட்ட வார்த்தைகள், இந்த நபர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள், மேலும் அவர்களைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்று அஹ்மத்(ரஹ்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

அல் ஸுன்னா-2/434

அபுபக்கர் அல் மர்வதீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நான் முஆவியா சிறந்தவரா அல்லது உமர் இப்னு அப்துல் அஜிஸ் சிறந்தவரா? என்று அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு முஆவியா(رضي الله عنه) அவர்களே சிறந்தவர்கள் ஏனெனில் நாங்கள் நபி ﷺ அவர்களின் தோழர்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்கமாட்டோம். நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள், மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். என்று அஹ்மத்(ரஹ்) பதில் அளித்தார்கள்

அல் ஸுன்னா-2/434

8) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

ما زال بي ما رأيت من امر الناس فى الفتنة حتى اني لأتمنى ان يزيد الله عزوجل معاوية من عمري في عمره

மக்களுடைய விசயங்களில் குழப்பங்கள் அதிகரிக்க கூடிய நேரங்களை நான் பார்க்கும் போது, என் ஆயுளை கொண்டு முஆவியா(رضي الله عنه) அவர்களுடைய ஆயுளை அல்லாஹ் அதிகரிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று அன்னை ஆயிஷா(رضي الله عنها) கூறுகிறார்கள்.

அல் தபகாத் இப்னு அரபல்ஹரானி : பக்கம்-41

9) முஆவியா(رضي الله عنه) சிறப்புகள்

ச’அத் இப்னு அபீ வாக்காஸ் கூறினார்கள் : உஸ்மான்(رضي الله عنه) அவர்களுக்கு பிறகு முஆவியா(رضي الله عنه)அவர்களை விட சத்தியத்தின்படி ஆட்சி செய்தவர்கள் வேறு யாரையும் நான் கண்டதில்லை

இப்னு அஸாகீர் (ரஹ்) அவர்களது தாரீக் அல் திமீஸ்கீ-59/161

ஹாஃபீழ் அபு யஹ்யா நூர்புரி(ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று கூறியுள்ளார்கள்

10) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

அபுதர்தா(رضي الله عنه) கூறுகிறார்கள்

நபி ﷺ அவர்கள் மரணத்திற்கு பிறகு, முஆவியாவைத் தவிர வேறு யாரும் நபி ﷺ அவர்களை போன்று தொழுதவர்களை நான் கண்டதில்லை.

அல் பவாயீத் அல் முன்தகாத் ஸமர்கந்தி : பக்கம்-67

11) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான்:

யாரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கக் கோரும் உரிமையை அவருடைய பொறுப்பாளருக்கு நாம் அளித்திருக்கின்றோம்.

சூரா பனீ இஸ்ராயீல்-17:33

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) விளக்கம் அளிப்பதாவது:

பேரறிஞர் இப்னு அப்பாஸ் (رضي الله عنه) இந்த ஆயத்தின் பொதுவான பொருளிலிருந்து முஆவியா அவர்கள் ஆட்சிக்கு தகுதியானவர் என்று புரிந்து கொண்டார், மேலும் சீக்கிரம் முஆவியா ஆட்சியை அடைவார் என்றும் கருதினார். ஏனென்றால் அவர் உஸ்மானின் பொறுப்பாளராக  இருந்தார், மேலும் உஸ்மான் அநியாயமாக கொல்லப்பட்டார்.  முஆவியா அலியிடம் உஸ்மானின் கொலையாளர்களை ஒப்படைக்குமாறு கேட்டார். அலி முஆவியாவிடம் தன் அதிகாரம் நிலையாகும் வரை அவகாசம்  கேட்டார், மேலும் ஷாம் பகுதியை ஒப்படைக்குமாறு அலி முஆவியாவிடம்  கேட்டார், கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை செய்ய மாட்டோம் என்று அவர் அதை மறுத்தார். மேலும் முஆவியாவும் ஷாம் பகுதி மக்களும் அலி  அவர்களுக்கு பையத் செய்ய மறுத்தார்கள்.  பின்னர் காலம் கழிந்த பின்பு, இப்னு அப்பாஸ் இந்த ஆயத்திலிருந்து புரிந்ததைப்  போல்  முஆவியாவிடம் பதவி வந்தது.  இது ஆச்சரியமான விடயம்

தப்ரானி அல்முஃஜமுல் கபீர்-10/320

12)முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

ஆயிஷா(ارضي الله عنها) அவர்களிடம் இருந்து நபி ﷺ ஹதீஸ் மூலம் முஆவியா(رضي الله عنه) அறிவுரை பெற்றார்கள்.

முஆவியா(رضي الله عنه) அவர்கள் ‘எனக்கு அறிவுரை கூற ஒரு கடிதம் எழுதுங்கள், மேலும் என் மீது அதிக சுமைகளை சுமத்தாதீர்கள்’ என்று ஆயிஷா(رضي الله عانها) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:

அதற்கு நபி ﷺ அவர்கள் கூற நான் கேட்டேன் “எவர் மக்களின் கோபத்தால் அல்லாஹ்வின் திருப்தியை நாடுகிறாரோ, அவரை அல்லாஹ் மக்களிடமிருந்து போதுமானதாக ஆக்கிவிடுவான். அல்லாஹ்வின் கோபத்தால் எவர் மக்களின் திருப்தியை நாடுகிறாரோ அவரை அல்லாஹ் மக்களிடம் ஒப்படைப்பான்”

அஸ்ஸலாமு அலைக்கும். என்று பதில் கடிதத்தில் ஆயிஷா(رضي الله عنها) கூறினார்கள்

ஜாமி உத் திர்மிதீ-2414

ஆயிஷா(رضي الله عنها), முஆவியா(رضي الله عنه) இருவரும் நபி ﷺ  அவர்களின் ஹதீஸ்கள் மீது கொண்ட  நேசத்திற்கு இந்த செய்தி சான்றாகும்.

முஆவியா (رضي الله عنه)  அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

1) ஷியாக்கள் பின்வரும் புகாரியின் ஹதீஸை குறிப்பிடுகிறார்கள்

இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(رضي الله عنه) என்னிடமும் அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(رضي الله عنه) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(رضي الله عنه) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(رضي الله عنه) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்; நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2812.

ஷியாக்களின் வாதம் : அந்த கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று ஹதீஸில் வருகிறது. அந்த  “கூட்டத்தினர் நரகில் இருப்பார்கள்” என்று அர்த்தம். “அவர்கள்” அவரை நரக நெருப்புக்கு சபிப்பார்கள்.

வாதத்திற்கு பதில்

a) பத்ஹுல் பாரி எனும் நூலில் கூறப்படுகிறது:

அம்மார் மற்றோரு கூட்டத்தை சொர்க்கத்தை நோக்கி அழைத்தார்கள் என்பதற்கு அர்த்தம் அவர் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் காரணத்திற்காக அவர்களை அழைத்தார். அவர்

அம்மார் மற்றோரு கூட்டத்தை சொர்க்கத்தை நோக்கி அழைத்தார்கள் என்பதற்கு அர்த்தம் அவர் சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் காரணத்திற்காக அவர்களை அழைத்தார். அவர் ஆட்சியாளர்க்கு கீழ்ப்படிய அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் அவர்கள் தான் சொர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்று நினைத்ததால் மன்னிக்கபடுவார்கள். இவ்விசயத்தில் ஒரு  இஜ்திஹாத் உள்ளது.

b) அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான்.

(சூரா  ஹுஜுராத் : 49:9)

கருத்து:

அல்லாஹ் காஃபிர்கள்  என்று கூறாதவர்களை ஷியாக்கள் காஃபிர்கள் என்று கூற என்ன அதிகாரம் உள்ளது,  வரம்புமீறுதல் என்பது குஃப்ர்  ஆகாது. மேலும் முஆவியாவும் அவரை சேர்ந்தவர்களும் இஜ்திஹாதின் அடிப்படையில் தான் முடிவு செய்தனர். மேலும் மேற்கண்ட ஹதீஸை ஸஹாபாக்கள் அறிந்திருந்தனர், இருந்தும் முஆவியாவை காஃபிர்  என்று கூறவில்லை

c) ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார்.

அலீ(رضي الله عنه) அவர்களின் மகனான ஹஸன்(رضي الله عنه), முஆவியா(رضي الله عنه) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(رضي الله عنه) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(رضي الله عنه), ‘ எதிரிகளை கொள்ளாமல் திரும்பிச் செல்லாத போற்படையை நான் பார்க்கிறேன் ” என்று கூறினார்கள்.

அவரைவிட சிறந்தவராக இருந்த  முஆவியா(رضي الله عنه) ‘ அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் குழந்தைகளை பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?’ என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(رضي الله عنه) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(رضي الله عنه) அவர்களையும் அனுப்பி, ‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்’ என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(رضي الله عنه) அவர்களிடம் (முஅவியா(رضي الله عنه) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(رضي الله عنه), ‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகிவிட்டது’ என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், ‘முஆவியா(رضي الله عنه) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்’ என்று கூறினர். அதற்கு ஹஸன்(رضي الله عنه), ‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?’ என்று கேட்க, அவ்விருவரும் ‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு’ என்று கூறினர்.

ஹஸன்(رضي الله عنه) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்’ என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(رضي الله عنه), முஆவியா(رضي الله عنه) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், ‘(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீது இருக்கா, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(رضي الله عنه) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(رضي الله عنه) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘ என்னுடைய இந்த புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்’ என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்’ என்று அபூ பக்ரா(رضي الله عنه) கூறியதை கேட்டேன்.

ஸஹீஹ் புகாரி : 2704.

குறிப்பு:

முஆவியா(رضي الله عنه) மற்றும் ஹஸன்(رضي الله عنه) முஸ்லிம்களில் மிக சிறந்த தலைவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த ஆதாரம் மூலம் அறியலாம்.

2) இஷ்ஹாக் இப்னு ராஹவைஹ்(ரஹ்) கூற்றை ஷியாக்கள் கூறுகிறார்கள்

الأصم حدثنا أبي سمعت ابن راهويه يقول لا يصح عن النبي صلى الله عليه وسلم في فضل معاوية شيء

நபி ﷺ அவர்களிடம் இருந்து முஆவியா(رضي الله عنه) அவர்களை பற்றி எவ்வித ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை என்று இஷ்ஹாக் இப்னு ராஹவைஹ்(ரஹ்) கூறுகிறார்கள்.

இமாம் தஹபீ (ரஹ்) உடைய ஸியார் அலாமின் நுபுலா-3/132

பதில்:

a) யாகூப் இப்னு யூசுப் அபு ஃபைசல் நிஸாபுரி என்பவர் மஜ்கூல்(யாரென அறியப்படாதவர்) அதனால் இது நிரூபிக்கப்படவில்லை

b) இப்னு அஸகீர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது

وأصح ما رُوي في فضل معاوية حديث أبي حمزة عن ابن عباس أنه كاتِبُ النبيِّ منذ أسلم، أخرجه مسلم في صحيحه. وبعده حديث العرباض: اللهم علمه الكتاب. وبعد حديث ابن أبي عَميرة: اللهم اجعله هاديا مهديا

முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் பற்றி அறிவிக்கப்பட்ட செய்திகளில் மிக ஆதாரபூர்வமான செய்தி அது இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்கள் அறிவிக்க கூடிய முஆவியா(رضي الله عنه) இஸ்லாத்தை ஏற்ற நாளிலிருந்து வஹீ எழுதுபவராக இருந்தார், இது முஸ்லிம்(ரஹ்) தனது ஸஹீஹ் முஸ்லிம் நூல் பதிவு செய்துள்ளார்கள் . பிறகு,அல் இர்பாத்(رضي الله عنه) அறிவிக்க கூடிய முஆவியாவர்க்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பாயாக என்று வரும் ஹதீஸ் பிறகு இப்னு அபி உமைரா(رضي الله عنه) அறிவிக்க கூடிய யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக

தாரீக் அல் திமீஸ்கீ-(59/106)

இமாம் அல்பானி (ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று தனது ஸில்ஸிலாத்து ஸஹீஹா-3227 கூறுகிறார்கள்

3) முஆவியா(رضي الله عنه) அவர்களை வெறுப்பவர்கள் ஸஹீஹ் முஸ்லீம் ஹதீஸ் கூறுகிறார்கள் அது பின்வருமாறு

இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (அவர் நபி (ஸல்) அவர்களின் எழுத்தராக இருந்தார்.)

அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, “அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், “நீ போய் முஆவியா அவர்களை என்னிடம் வரச் சொல்” என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, “அவர் (இன்னும்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்!” என்று சொன்னார்கள்.

அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹத்தஅனீ” எனும் சொல்லுக்கு என்ன பொருள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “என் பின்தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்” என்பது பொருள் என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்-5074

பதில்:

ஷேக் அபு யஹ்யா நூர்புரி அளித்த விளக்கத்தை படியுங்கள், அஸ் ஸுன்னா-148 to 155 என்ற நூலில் இருந்து பின்வருமாறு

நபி ﷺ அவர்கள் முஆவியா(ரலி) அவர்களுக்கு எதிராக துஆ செய்ததாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் மற்றோரு வழியாக வரும் ஹதீஸை  பார்க்க தவறவிட்டார்கள்

رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَعَثَ إِلَى مُعَاوِيَةَ يَكْتُبُ لَهُ

நபி ﷺ அவர்கள் முஆவியா(ரலி) அவர்களுக்கு செய்தி அனுப்பி தனக்கு எழுதி கொடுக்குமாறு கூறினார்கள்

முஸ்னத் தயாலிஸி-2869

முஆவியா(ரலி) வஹீ எழுதினார்கள் என்பதற்கு இந்த செய்தி சான்றாகும். ஆனால் முஆவியா(ரலி) அவர்களை வெறுக்க கூடிய வழிதவறியவர்கள் இதை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, “நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!” என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (رضيت الله عنها) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “நபி (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?” என்று கூறினாள்.

உடனே உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தித்தீர்களா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம், உம்மு சுலைமே?” என்று கேட்டார்கள். உம்மு சுலைம் (رضي الله عنها) அவர்கள், “அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும் எனத் தாங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்” என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

பிறகு, “உம்மு சுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், “நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகிறேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால்,அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் இறைவனிடம் நெருக்கமாக்கும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!” என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லீம்-5073

இமாம் இப்னு கதீர்(ரஹ்) கூறுகிறார்கள்

فركب مسلم من الحديث الأول وهذا الحديث فضيلة لمعاوية

இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸை(அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்)முந்தைய ஹதீஸுக்குப் பிறகு(அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாக ஆகும்) பதிவிட்டு அதனால் இது முஆவியா(ரலி) அவர்களது சிறப்பை சுட்டிக் காட்டினார்.

அல்பிதாயா வன்நிகாயா-8/120

இமாம் நவவி(ரஹ்) கூறுகிறார்கள்

இமாம் முஸ்லிமைத் தவிர மற்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை முஆவியாவின் நற்பண்புகளில் மேற்கோள் காட்டியுள்ளனர், ஏனெனில் நபி ﷺ அவர்களின் இந்த வார்த்தைகள் உண்மையில் முஆவியா அவர்களுக்கான துஆவாகும்.

ஷரஹ் ஸஹீஹ் முஸ்லீம்-16/156

மற்றோரு ஹதீஸை இமாம் இப்னு கதீர்(ரஹ்) கூறிப்பிடுகிறார்கள்

ஹுதைஃபா மதீனாவில் இருந்தார்கள், அவர் அல்லாஹ்வின் தூதர் கூறிய விஷயங்களைக் மக்களிடம் குறிப்பிடுவார்கள்.ஹூதைஃபா(ரலி) அவர்கள் ஸல்மான்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். அப்போது, ஹுதைஃபா(ரலி) அவர்களே அல்லாஹ்வின் தூதர் அவர்களே சில சமயங்களில் கோபமடைந்து அதன்படி பேசுவார், சில சமயம் மகிழ்ச்சியடைந்து அதன்படி பேசுவார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துக் கூறியதை நான் அறிவேன்.நான் என் மக்களில் யாரையாவது ஏசி இருந்தால், அல்லது என் கோபத்தில் அவரை சபித்து இருந்தால். நான் ஆதமின் மக்களில் ஒருவன் அவர்கள் கோபப்படுவது போல் நானும் கோபப்படுகிறேன். அல்லாஹ் என்னை அகிலத்திற்கு ரஹ்மத்(அருளாக) அனுப்பியுள்ளான். யா அல்லாஹ் இறுதி தீர்ப்பு நாளன்று அவர்கள் (ஏச பட்டவர்கள் மற்றும் சபிக்கபட்டவர்களுக்கு) அருள்புரிவாயாக என்றார்கள்.

நீங்கள் இது போன்று குறிப்பிடுவதை நிறுத்தங்கள் இல்லையென்றால் நான் உமருக்கு (கடிதம்) எழுதுவேன் என்று ஸல்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்

சுனன் அபூதாவூத்-4659 |ஸஹீஹ்,

தப்ஸீர் இப்னு கதீர்-21/107

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply