குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

கேள்வி: குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?   பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, குர்ஆனில் ஸஜ்தாவுடைய இடங்கள் 15 ஆகும். அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் 15 ஸஜ்தா வசனங்களை ஓதினார்கள். அதில் மூன்று முஃபஸ்ஸலிலும் சூரா ஹஜ்ஜிலே இரண்டு வசனங்களும் ஆகும். இந்த செய்தி அபூதாவூத், இப்னுமாஜா,ஹாகிம்,தாரகுத்னீ இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) ஆகியோர் இந்த செய்தி ... Read more

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர் ... Read more

பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது இஸ்திஜ்மார் என்றால் என்ன? மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா? தூய்மை விடயத்தில் சிறந்தது எது? பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று ... Read more

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ ... Read more

கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா? பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني ... Read more

ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன?

கேள்வி: ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.. இரவு தொழுகையைப் போல உபரியான(நஃபில்) தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. பர்ளான தொழுகையில் பெரும்பாலும் குர்ஆனை பார்த்து ஓதுவதின் பால் தேவையில்லாத காரணத்தினால் அது மக்ருஹ் ஆகும். பர்ளான தொழுகையில் தேவை ஏற்பட்டால் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்முக்னீ பாகம் 1 பக்கம் 335 ல் ... Read more

கண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் என்ன?

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم கண்களை மூடிக்கொண்டு தொழுவதன் சட்டம் எங்களது ஷெய்க். முஹம்மது இப்னு ஹிஸாம் (حفظه الله) அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : கண்களை மூடிக்கொண்டு தொழுபவரின் (மார்க்கச்) சட்டம் என்ன.? ஷெய்க் அவர்களின் பதில் : இவ்வாறான செயல் நபி ﷺ அவர்களது வழிகாட்டலுக்கு முரணானது. நபி ﷺ அவர்கள் தமது கண்களை திறந்த நிலையிலே தொழுதுள்ளார்கள். கண்களை மூடிக்கொண்டு தொழுததாக எவ்வித அறிவிப்புகளும் இல்லை. எனவே எவ்வித காரணங்களுமின்றி ... Read more

உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..⁉️ பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே!) அவசரப்பட்டு அதற்காக ... Read more

உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم உதட்டை அசைக்காமல் தொழுபவரை பற்றிய (மார்க்க) நிலைபாடு அன்பிற்குரிய ஷெய்க். முஹம்மத் இப்னு ஹிஸாம் (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களிடம் கீழ்கண்ட கேள்வி கேட்கப்பட்டது… கேள்வி : உதட்டை அசைக்காமல் (மௌனமாக) ஓதி தொழுபவரின் சட்டம் என்ன..? பதில் : அவரது தொழுகை செல்லுபடியாகாதது. ஏனென்றால் உதட்டையும், நாவையும் அசைத்து ஓதுவதுதான் (சரியான) ஓதுதலாக அமையும். அல்லாஹ் தஆலா கூறுவதாவது … {لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِ} (நபியே!) அவசரப்பட்டு அதற்காக ... Read more