நோன்பு குறித்த கேள்வி பதில்கள்

கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? ... Read more

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. ... Read more

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣ : நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா?அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?   பதில் :   நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. ஹஜ் விடயத்தில் கூட ஒரு நபர் எந்த விதமான வணக்க வழிபாட்டுக்கான நிய்யத்தையும் ... Read more

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?  

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣ : ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா? (அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.? ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?   பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :   إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى ‘செயல்கள் அனைத்தும் ... Read more

11.சத்தியத்தை நோக்கிய அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?

கேள்வி: தற்போது அழைப்பு பணியை மேற்கொள்ளும் கூட்டமைப்புகள் அதிகமாகக் காணப்படுவதோடு அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்பாளர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனாலும் அந்த அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பதில்: முதலாவதாக, அழைப்புப் பணியிலும் அதுவல்லாத ஏனைய விடயங்களிலும் அதிகமான கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன்பால் நாம் மக்களைத் தூண்ட மாட்டோம். அதற்கு மாறாக அல்லாஹ்வின்பால் அறிவுடன் அழைக்கும் ஒரு கூட்டமைப்பையே நாம் விரும்புகிறோம். அதிகமான கூட்டமைப்புகளும், வழிமுறைகளும் நமக்கு மத்தியில் தோல்வியையும், ... Read more

நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?

கேள்வி: 10.நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா? பதில்:-   (( அவர்களின் நலவுகளை மக்களுக்கு நீ கூறிக் காட்டுவது அவர்களை பின்பற்றுமாறு அம்மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதே அர்த்தமாகும். அவர்களின் நலவுகளை நீ கூறிக்காட்ட வேண்டாம். அவர்களிடம் உள்ள பிழைகளை மாத்திரம் கூறிவிடு. அவர்களின் நிலமைகளை தூய்மைப்படுத்துவது உனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. மாறாக அவர்களிடம் உள்ள பிழைகளை தெளிவுபடுத்துவதே உனது பொறுப்பாகும். (அவ்வாறு நீ செய்யும் பட்சத்தில்) அவர்கள் ... Read more

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா?

கேள்வி : எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம், ஒருவன் இவ்வுலகில் எதையாவது மிகுந்த அன்புடன் நேசித்தால், அவன் அதை சுவர்க்கத்தில் பெறுவானா? உதாரணமாக, அவன் விமானங்களை விரும்பினால், அவற்றை சுவர்க்கத்தில் பெறுவானா ? விமான நிலையமும் அங்கு இருக்குமா ? பதில் :அல்ஹம்துலில்லாஹ். இந்தக் கேள்வி சிறுபிள்ளைத் தனமானதல்ல, மாறாக நல்லதைக் கேட்டுப் பலனடைவதற்கும் சுவர்க்கத்தின் மீதான ஆசையையும்,அதனை அடைவதற்கான நற்கருமங்களை அதிகப்படுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடிய மார்க்கம் சார்ந்த அறிவுபூர்வமான விடயமாகவே இது உள்ளது. சில நபித்தோழர்கள் ... Read more

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து

கேள்வி : “அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமமான “அல் ஹகீம்” எனும் பதமானது, “ஃபயீல்” எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சொல்லிலக்கண அடிப்படையில் “ஃபயீல்”எனும் பதம் ஒரு செயலை மிகைப்படுத்திக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்படும். இது “ஃபாயில்” வஸ்னிலுள்ள “ஹாகிம்”எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1) இந்த வகையில் அல்லாஹ் “ஹாகிமாக” இருக்கிறான். அதாவது, படைப்பினங்களுக்கான விதிகளை நிர்ணயம் செய்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதாகும். இவ்வாறு, அல்லாஹ் ... Read more

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது? கேள்வி- இன்று நான் ஆஷூரா நாள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் படித்துவிட்டேன், ஆனால் யூதர்களுக்கு மாற்றமாக முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்குமாறு நபி ﷺ கூறிய எந்த ஹதீஸையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ,“இன்ஷா அல்லாஹ் – அடுத்த ஆண்டில் நான் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி ﷺ ... Read more

அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம்

கேள்வி: இவ்விரண்டிலும் எது மிகவும் சிறப்புக்குரியதாகும்?முதலில் மார்க்க அறிவை தேடுவதா? அல்லது அழைப்புப் பணியை மேற்கொள்வதா? பதில்:- முதலில் மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு இல்லாவிட்டால் அவனுக்கு இந்த அழைப்பு பணியை (சிறப்பாக) மேற்கொள்ள முடியாமல் போய்விடும். (மார்க்க அறிவு இல்லாத நிலையில்) ஒருவன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் அவனின் மூலம் அதிகமான தவறுகள் ஏற்படும். அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் மார்க்கத்தை கற்று (தெளிவு பெற்றுக் கொள்வது) ... Read more