அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள் – இறுதி தொடர் – 04
பிரயாணத் தொழுகை | இறுதி தொடர் : 04 | பயணத் தொழுகையுடன் தொடர்பான சில அவசியமான குறிப்புகள் —————————————————– 1) பிரயாணத்தின் போது தொழுகைகளை சுருக்கி தொழுவதன் சட்டத்தை பொறுத்தவரை இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன: சில அறிஞர்கள் சுருக்கித் தொழுவது கட்டாயமானது என்று குறிப்பிடுகின்றனர். ஹனபி, ழாஹிரி மத்ஹபினர் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். இவர்கள் இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் : 1. நபியவர்கள் தமது பிரயாணங்களின் போதெல்லாம் தொழுகைகளை சுருக்கியே தொழுதிருக்கிறார்கள். சுருக்காமல் ... Read more