பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும்

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும் _- அஷ்ஷெய்க் அபூ பிலால் ஹதரமீ அல்-யமானி (حفظه الله) அவர்களது பாடத்திலிருந்து தொகுக்கப்பட்டது._ 1. ஸதகத்துல் ஃபித்ர் என்றால் என்ன.? பதில் : ‘ஸதகா’ என்பது அல்லாஹ்வின் கூலியை நாடி கொடுக்கப்படக்கூடியதாகும். ஃபித்ர் என்பதன் மொழியியல் அர்த்தம் : நோன்பின் முடிவு பகுதி. மார்க்க ரீதியில், ‘ஸகத்துல் ஃபித்ர்’ என்பது நோன்பின் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more

ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?.

கேள்வி: ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்னவென்றால், அந்த இரவுகளை தொழுகையிலும், திக்ருலும் கழிக்க வேண்டும் என்பதே. தர்மம் செய்வதை பொறுத்தவரை மற்ற நேரங்களில் தர்மம் செய்வதை விட ரமழானில் தர்மம் சிறந்தது,ஆனால் கடைசி பத்து நாட்களில் தர்மம் செய்வது (மற்ற ... Read more

இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அறிவைத் தேடுவது நற்செயல்களில் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் இது ஒரு நபர் தனது நேரத்தை செலவிடுவதற்கான சிறந்த வழியாகும்,மேலும் முஸ்லிமை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சிறந்த பாதையாகும். இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்: கல்வி கற்பது என்பது இறைவழிபாடுகளில் ஒன்று. ஜாமி’ பயான் அல்-இல்ம் (1/104). சுஃப்யான் அத்-தவ்ரி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: ... Read more

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி: ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்… ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன? ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ... Read more

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. ... Read more

ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா?

கேள்வி: ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா? குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள். பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடுத் தொழுகையைக் அறிவோம்… “தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்” [அல்-பகரா 2:238] இது அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்றாகும். ஹாஃபிழ், ... Read more

ரமழானில் நோன்பு நோற்ற ஒருவர்,பகலில் உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம் என்ன? அதனை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?

பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும் ரமழானில் நோன்பு நோற்ற நிலையில், பகல் (நேரத்தில்) உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம் மேற்கண்ட பாவச்செயலுக்குறிய பரிகாரமானது பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றாக அமையும். நமது விருப்பத்தின் அடிப்படையில் (மூன்றில் ஏதேனும் ஒன்றை) தேர்வு செய்ய முடியாது. (அதாவது, முதல் பரிகாரத்தை செய்ய சக்தியிருந்தும், இரண்டாவது பரிகாரத்தை நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படாது). அவையாவன : 1. அடிமையை விடுவித்தல்; ஒருவரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால்,…⤵️ 2. ஒருவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு ... Read more

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன் ... Read more

தொழுகையில் கண்களை மூடலாமா?

بسم الله الرحمن الرحيم தொழுகையில் கண்களை மூடலாமா? தொழுகையில் கண்களை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மூடிக்கொள்வது குற்றமில்லை. உதாரணமாக ஒருவர் தொழுகையை ஆரம்பித்து தொழும்போது, முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது தொழுகையின் கவனத்தை திருப்பக்கூடிய ஏதாவது ஒன்றை அவர் கண்டு கொண்டால் அவர் அச்சமயத்தில் கண்களை மூடுவது குற்றமாகாது. காரணமின்றி கண்களை மூடுவது, இன்னும் அது இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று கருதுவது ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறு கண்களை மூடுவது வெறுக்கத்தக்கதாகும். ... Read more