கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா?
பதில்:
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே
ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன் படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது.
ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979
ஷேக் இப்னு உஸைமீன் கூறினார்:
இந்த இன்ஹேலர் ஆவியாக மாறும், பயன் படுத்துவோரின் வயிற்றை சென்றடையாது. ஆகையால் நோன்பாலி இந்த இன்ஹேலரை பயன் படுத்துவதில் எந்த தவறும் இல்லை, அது நோன்பை முறிக்காது என்று நாம் கூறுகிறோம்.
ஃபதாவா அற்கானுல் இஸ்லாம் பக்கம் 475
ஃபத்வாவிர்க்கான நிரந்தர கமிட்டி கூறுகிறது:
ஆஸ்துமா நோயாளிகள், சுவாசத்தின் மூலம் எடுக்கும் மருந்துகள் நுரையீரலை தான் சென்றடைகிறது வயிற்றை சென்றடைவது இல்லை, ஆகவே இது உணவுப்பொருள் அல்ல.. இவ்வாறான மருந்துகளால் நோன்பு முறியாது என்பதே தெரிகிறது.
ஃபதாவா அல் இஸ்லாமிய 1/130
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
Islamqa