அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம்

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:

وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا

அல்லாஹ் கேட்பவனாகவும் (ஸமீஉ) பார்ப்பவனாகவும்(பஸீர்) இருக்கின்றான்.

அல் நிஸா:134

பெரும்பாலும் அல்லாஹ் செவி, பார்வை எனும் அவனுடய இரு பண்புகளையும் சேர்த்தே கூறுகிறான். அவனுடய செவியும் பார்வையும் – மறைவான, வெளிப்படையான – யாவற்றையும் சூழும். அவன் தான் அனைத்து ஓசைகளையும் கேட்கும் அஸ்ஸமீஉ.

மேல்,கீழ் உலகங்ளின் இரகசியமான, வெளிப்படையான அனைத்து ஓசைகளையும், அல்லாஹ் ஒற்ற ஓசையை கேட்பது போல் தெளிவாக கேட்கின்றான். அதில் குழப்பம் அடைவதில்லை, எந்த மொழியும் அவனுக்கு புரியாமல் இல்லை. தொலைவும் பக்கமும், இரகசியமும் வெளிப்படையும் அல்லாஹ்வுக்கு சமமே.

سَوَآءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ ٱلْقَوْلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۭ بِٱلَّيْلِ وَسَارِبٌۢ بِٱلنَّهَارِ

எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).

அர் ரஅது:10

قَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّتِى تُجَٰدِلُكَ فِى زَوْجِهَا وَتَشْتَكِىٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ

நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.

அல்முஜாதிலா:1

ஆயிஷா رضي الله عنهاகூறுகிறார்:

“தபாரக அல்லாஹ்( அல்லாஹ் உயர்வும் கண்ணியமும் வாய்ந்தவன்) அவன் அனைத்து ஓசைகளையும் கேட்கின்றான், நான் அறையின் ஒரு ஓரத்தில் இருந்த போது, நபியிடம் صلى الله عليه و سلم வந்து முறையிட்டாள், அவள் கூறியதில் எனக்கு கேட்கவில்லை, ஆனால் அல்லாஹ் ‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான்’ என்ற ஆயத்தை இறக்கினான்”.

அல்லாஹ்வின் செவி இருவகைப்படும்.

1)முதல்வகை: வெளிப்படையான, மைரைவான, இரகசியமான, பகிரங்கமான அனைத்து ஓசைகளையும் கேட்கும். அது அனைத்தையும் சூழ்ந்தது.

2) இரண்டாம் வகை: அவனிடம், பிரார்த்திப்பவர்கள், கேட்பவர்கள், வணங்குபவர்களின் பிரார்த்தனையை கேட்டு பதிலளிக்கிறாரன், கூலியும் தருகிறான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ

நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்.

இப்ராஹீம் : 39

தொழுகையில் நாம் ‘ ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் – அல்லாஹ் , அவனை புகழ்வோரை செவியுறுகிறான்’ என்று கூறுகிறோம், அதாவுது பதில் அளிக்கிறான்.

( ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி)

قال الله تعالى: {وَكَانَ اللَّهُ سَمِيعًا بَصِيرًا} (1)، وكثيراً ما يقرن الله بين صفة السمع والبصر، فكل من السمع والبصر محيط بجميع متعلقاته الظاهرة، والباطنة، فالسميع الذي أحاط سمعه بجميع المسموعات، فكل ما في العالم العلوي والسفلي من الأصوات يسمعها سرَّها وعلنها وكأنها لديه صوت واحد، لا تختلط عليه الأصوات، ولا تخفى عليه جميع اللغات، والقريب منها والبعيد، والسرّ والعلانية عنده سواء {سَوَاءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ الْقَوْلَ وَمَن جَهَرَ بِهِ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ} (2)، {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ} (3)، قالت عائشة رضي الله عنها: تبارك الذي وسع سمعه الأصوات، لقد جاءت المجادلة تشتكي إلى رسول الله – صلى الله عليه وسلم – وأنا في جانب الحجرة،
[سعيد بن وهف القحطاني، الثمر المجتنى مختصر شرح أسماء الله الحسنى في ضوء الكتاب والسنة، صفحة ١٤].

وإنه ليخفى عليَّ بعض كلامها، فأنزل الله: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} (1) الآية.
وسَمْعُه تعالى نوعان:
النوع الأول: سَمْعُه لجميع الأصوات الظاهرة والباطنة، الخفيّة والجليّة، وإحاطته التامّة بها.
النوع الثاني: سَمْعُ الإجابة منه للسائلين والداعين والعابدين فيجيبهم ويثيبهم، ومنه قوله تعالى: {إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ} (2)، وقول المصلي ((سمع الله لمن حمده)) أي استجاب
[سعيد بن وهف القحطاني، الثمر المجتنى مختصر شرح أسماء الله الحسنى في ضوء الكتاب والسنة، صفحة ١٥]

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: