ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்

ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்

நிய்யத் – எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்:

1️⃣ பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லுதல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும்.

கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்:

2️⃣ ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

3️⃣ வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் பிற்படுத்துதல்.

பயணத்தில் ஏற்படும் தவறுகள்:

4️⃣ அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்காத கெட்டவர்களுடன் பயணத்தை மேற்கொள்ளல்.

5️⃣ அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பதாகக் கூறிக்கொண்டு தேவையான கட்டுச் சாதனங்களை எடுத்துச் செல்லாமல் மற்றவர்களுக்குச் சுமையாக இருத்தல்.

6️⃣ ஒரு பெண் மஹ்றம் இல்லாமல் பயணித்தல்.

7️⃣ பயணத்தில் தொழுகை விடயத்தில் கவனயீனமாக நடந்து கொள்ளல்.

8️⃣ பயணத்தின் போது புகைத்தல், இசை செவிமடுத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், மற்றவர்களை நையாண்டி செய்தல் போன்ற பாவமான காரியங்களில் ஈடுபடுதல்.

9️⃣ அதிக நகைச்சுவையில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளினால் நிறைவேற்றப் போகும் வணக்க வழிபாட்டின் மகிமையை உணராமல் நடந்து கொள்ளல்.

இன் ஷா அல்லாஹ் தொடரும்…

– ஹுஸைன் இப்னு றபீக் மதனி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply