றாபிழாக்களின் கருத்தைக் கண்டு குழம்பிப்போய் உள்ள அஹ்லுஸ் சுன்னாஹ்
சகோதரர்.

கேள்வி :

கர்பலா நிகழ்வு உண்மையான வரலாற்று சம்பவமா? அப்படி என்றால் கதீப் மார்கள் ஏன் அந்த சம்பவத்தை குத்பா பேருரைகளில் கூறுவது இல்லை? அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் வழித் தோன்றல்கள் கொலை செய்யப் பட்ட வரலாற்று நிகழ்வு மிம்பர் மேடைகளில் சொல்லப் படுவதற்கு தகுதியானதாக இல்லையா?  நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தனக்குப் பின் 12 இமாம்கள் தோன்றுவார்கள் என குறிப்பிட வில்லையா?  அவர்கள் ஷீஆக்களின் இமாம்களாகத் தானே வந்தார்கள்? நான் அண்மைய நாட்களில் ஷீஆக்களின் புத்தகங்களில் சிலதை வாசித்தேன், அவற்றில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள பல்வேறு உண்மைத் தகவல்கள் அஹ்லுஸ் சுன்னாஹ் கொள்கையுடையவர்களாகிய எமது நூல்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளதை அவதானித்தேன்..

உதாரணமாக அபூ பக்கர் மற்றும் பாத்திமா (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறுகளை குறிப்பிடலாம்.நான் மிகவும் குழம்பி போயுள்ளேன்,தெளிவு படுத்துமாறு கேட்கிறேன், நாங்களா சரியான கொள்கையில் இருக்கின்றோம்?அல்லது அவர்களா? புரியவில்லை! எனது சந்தேகங்களுக்கு சரியான தெளிவை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்,இது உணர்வுகளை தூண்டும் செய்தி என நான் அறிவேன், எனினும் தெளிவு பெற எனக்கு உங்கள் உதவி தேவைப் படுகிறது.அல்லாஹ் உங்களுக்கு சிறந்த வெகுமதி வழங்குவானாக. அல்லாஹ்வின் சாந்தி, அருள் மற்றும் அனுகூலங்களும் உங்கள் மீது உண்டாகட்டும். (தெளிவு படுத்துங்கள்).

பதில் :

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தம்,

முதலாவதாக :

கர்பலா நிகழ்வை பொறுத்த வரையில் அது உண்மையான வரலாற்று நிகழ்வு தான், கதீப் மார்கள் அந்த சம்பவத்தை குத்பா பேருரைகளில் கூறுவது இல்லை என்பது தவறான கணிப்பு ஆகும். குத்பா பேருரைகள் கதைகளையும், சம்பவங்களையும் மாத்திரம் கூறுவதற்குரிய இடம் இல்லை. மாற்றமாக ஏகத்துவத்தை நிலை நாட்டவும், மக்களுக்கு அவர்களின் மார்க்கத்துக்கு பிரயோசனம் அளிக்கும் விடயங்களையும், அவர்கள் நல்லுணர்வு பெற தேவையான உபதேசங்களையும் நிகழ்த்தும் இடமாகும்.இந்த கதைகளையும்  மற்றும் அதன் பரிமாணங்களையும் அறிய வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்க முடியாது.குறித்த நிகழ்வின் உண்மையை அறிய வேண்டிய நிலையிலும், ராபிழாக்களின் பொய்கள் மற்றும் அவர்களின் வழி கேடான கொள்கைகள் தொடர்ப்பில் தெளிவு பெற வேண்டிய நிலையிலும் உள்ள பிரதேச மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் போதே இந்த சம்பவம் குறித்து அதிகம் விவரமாக பேசப்படும்.

எந்த இடங்களில் எல்லாம் கர்பலாவின் புனிதத்துவம், ஹுசைன் (ரழி) அவர்களின் கொலை மற்றும் அவரின் கொலையுடன் சம்மந்தப் பட்ட அதன் போது ஆட்சில் இருந்த யஸீத் பின் முஆவியா பற்றி பேசப் படுகிறதோ, அல்லது ராபிழா கொள்கை அரசியல் சிந்தனையாக முதலில் தோற்றம் பெற்றது தொடர்ப்பில் தெளிவு படுத்த தேவைப் படுகிறதோ அந்த இடங்களிலேயே கர்பாலா நிகழ்வு தெளிவாக எடுத்துரைக்கப் படும்.

அஹ்லுஸ் சுன்னாஹ் கொள்கை உடையோரைப் பொறுத்த வரையில் இந்த வரலாறை மக்கள் மத்தியில் பரவ செய்வதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அதன் சரியான அறிவிப்பாளர் வரிசையை உறுதிப் படுத்தி கூறி உள்ளனர். வரலாற்று நூல்களிலும், ஹதீஸ் விளக்க நூல்களிலும், கொள்கை அளவிலும் சிந்தனை ரீதியிலும் தோன்றிய பிரிவுகள், மத்ஹப்கள் தொடர்ப்பிலும் எழுதிய நூல்களிலும் அதனை குறிப்பிட்டுள்ளனர். வரலாறு தொடர்ப்பில் எழுதப் பட்ட நூல்களிலோ, பிரிவுகள் மற்றும் கொள்கை கோட்பாடுகள் தொடர்ப்பில் எழுதப் பட்ட நூல்களிலோ இந்த சம்பவம் சுட்டிக் காட்டப் படாமல் இருந்ததில்லை.


எமது தூய்மையான மார்கத்தில் கர்பலாவுக்கு என்று எந்த தனி சிறப்பும் இல்லை. கர்பலா விவகாரத்தில் அவர்கள் கூறியுள்ள இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்களை அவதானித்தால் அவர்களின் வழிகேட்டை உம்மால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் வார்த்தைகள், செயற்பாடுகள், தோற்றம், மற்றும் எழுத்துக்கள் அனைத்திலும் இடம் பிடித்துள்ள இறை நிராகரிப்பு, இணை வைப்பு, எல்லை மீறிய பொய், திரிபு படுத்தல்கள் அனைத்தையும் கண்ட பிறகும் நீர் எப்படி அவர்களின் கொள்கை கோட்பாடுகள் பற்றி தடுமாற்றம் அடைகிறீர் என்பதை எம்மால் புரிய முடியாதுள்ளது.


கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரு அமைந்திருப்பதற்காக அதனை அவர்கள் புனித பூமியாக கருதுகின்றனர். கர்பலாவை சியாரத் செய்தல் ஒரு மில்லியன் ஹஜ், மற்றும் ஒரு மில்லியன் உம்ரா  செய்வதை விட சிறந்ததாக பொய் உரைக்கின்றனர். இது அல்லாத வேறு நிறைய பொய்களை கர்பலாவுடன்  இணைத்து அவர்கள் பேசுவதை அவதானிக்கலாம்.


வசாஇலுஸ் ஷீஆ என்ற அவர்களின் நூலில் (332 / 10) அபூ அப்தில்லாஹ் பின்வருமாறு கூறுவதை அவதானிக்கலாம்,


ஹஜ் கடமையை நீர் நாடி அதனை நிறை வேற்ற முடியாது போய் விட்டால், ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரை தரிசிக்க செல்வீராக, அதன் மூலம் உமக்கு ஹஜ் செய்த நன்மை கிடைத்து விடும். மேலும், உம்ரா கடமையை நீர் நாடி அதனை நிறை வேற்ற முடியாது போய் விட்டால், ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரை தரிசிக்க செல்வீராக, அதன் மூலம் உமக்கு உம்ரா செய்த நன்மை கிடைத்து விடும்.


அதே நூலில் (360 / 10) பின் வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது ,


யார் அரபா தினத்தில் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரை தரிசிக்க செல்கிறாரோ, அவருக்கு மஹ்தி (அலை) அவர்களுடன் ஒரு மில்லியன் ஹஜ் செய்த நன்மையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு மில்லியன் உம்ரா செய்த நன்மையும், ஆயிரம் அடிமைகளை உரிமை இட்ட நன்மையும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் ஆயிரம் வீரர்களுக்கு செலவு செய்த நன்மையும் கிடைக்கும். அவரை பார்த்து இறைவன் எனது நேர்மையான அடியான் அவன் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றி விட்டான் என கூறுவான். அதே போன்றே மலக்குமார்களும் இவரை பார்த்து இவர் நேர்மையான அடியான் அல்லாஹ் அவனது அர்ஷுக்கு மேல் இருந்து அவரை தூய்மை படுத்தி விட்டான் என கூறுவார்கள். உலகில் அவரை கரூபி என்று அழைக்கப் படும்.


இவ்வாறு பொய்களையும், புரட்டுக்களையும் கட்டவிழ்த்து விடும் ராபிழாக்கள் விடயத்தில், அவர்கள் வழி கேடர்கள் என்ற விடயத்தில் யாராவது சந்தேகம் கொள்ள முடியுமா ?!


இரண்டாவது:
பிற்காலத்தில் பன்னிரண்டு கலீபாக்கள் தோன்றுவார்கள் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ள செய்திகள் “சஹீஹ்” ஆகும்.
ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். நான் எனது தந்தையுடன் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது “பன்னிரண்டு கலீபாக்கள் தோன்றும் வரை இந்த மார்க்கம் நிறைவு பெறாது” என்று கூறி விட்டு  பிறகு எதோ இரகசியமாக கூறினார்கள், நான் எனது தந்தையிடம் “நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என வினவினேன். அவர்கள் அனைவரும் “குறைஷ்” கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என கூறினார்கள். (ஆதாரம் : புகாரி , 7222, முஸ்லிம்,1821).

பிறிதோர் அறிவிப்பில், பன்னிரண்டு கலீபாக்கள் உள்ள வரையில் இஸ்லாம் பலமாகவே இருக்கும் என்றும், இன்னுமோர் அறிவிப்பில், பன்னிரண்டு கலீபாக்கள் உள்ள வரையில் இஸ்லாம் பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனவும் வந்துள்ளது.


அறிஞர்கள்  இந்த ஹதீஸில் வந்துள்ள பிரகாரம் அந்த பன்னிரண்டு கலீபாக்களையும் நிர்ணயிப்பதில் கருத்து முரண் பாடு கொண்டுள்ளனர். அவர்கள் றாபிழாக்கள் சுட்டிக் காட்டியுள்ள அந்த பன்னிரண்டு கலீபாக்களும் அல்ல. இது தொடர்ப்பில் விரிவான பதில் ( 146316 )  என்ற இலக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.


மூன்றாவது :
அபூ பக்கர் மற்றும் பாத்திமா (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறுகளை விரிவாகவும், அது தொடர்ப்பில் றாபிழாக்களின் பொய்களுக்கான பதிலையும் ( 125876 ) என்ற இலக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதனை படித்தால் றாபிழாக்களின் பொய்களும், அவதூறுகளும் மிகத் தெளிவாக உமக்குப் புலப்படும்.


நான்காவது :
றாபிழாக்களின் கொள்கை கோட்பாடுகள் இரகசியமான ஒன்றல்ல, எனினும் அவர்கள் கடைப் பிடிக்கும் “தக்கியா” கொள்கை பிரகாரம் அவர்களின் நம்பிக்கைகளை ஆரம்பத்தில் மறைத்தே வைத்திருந்தனர். இப்போது அவர்களின் பழைய நம்பிக்கைகளை வெளிப் படுத்த ஆரம்பித்து விட்டனர். அவர்களின் சொற்கள், செயல்கள் ஊடாக அவை உறுதிப் படுத்தப் பட்டுள்ளதை அவதானிக்கலாம்.


ஆஇஷா (ரழி) அவர்கள் மீது வீண் பழி சுமத்தி, அவர்களை ஒழுக்கக் கேடானவர் என்று அவர்கள் கூறுவதை நீர் காணவில்லையா? அவர்களின் தலைவர்களின் மண்ணறைகளில் சுஜூத் செய்வதையும், அதனை வளம் வருவதையும் நீர் அவதானிப்பது இல்லையா? அபூ பக்கர் மற்றும் உமர் (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகியோரை அவர்கள் சபிப்பதை நீர் பார்ப்பதில்லையா? ஈராக்கில் “அஹ்லுஸ் சுன்னாஹ்” க்களுக்கு எதிராக அவர்கள் அரங்கேற்றிய கொடூரமான குற்றச் செயல்கள் தொடர்ப்பில் நீர் கேள்வி பட வில்லையா? “உமர்” என்று பெயர் வைத்திருந்த சிறுவர்கள், முதியோர்கள் அனைவரையும் கொன்று குவித்தார்களே , அதனை நீர் காணவில்லையா ?
“அஹ்லுஸ் சுன்னாஹ்” அறிஞர்களுக்கும், ஷீஆக்களின் முக்கிய தலைவர்களுக்கும் இடையில் இடம் பெற்றுள்ள விவாதங்களை நீர் கேட்பதில்லையா, அதன் ஊடாக அவர்களின் இணை வைப்பு, இறை நிராகரிப்பு, பொய் புரட்டு, வழி கேடு, திரிபு படுத்தல்கள் அனைத்தும் அவர்களின் நூல்களில் இருந்தும், அவர்களின் தற்கால அறிஞர்களின் கூற்றுகளில் இருந்தே நிரூபிக்கப் பட்டுள்ளதை நீர் அவதானிக்க வில்லையா?
அவர்களின் மோசமாக நம்பிக்கைகள், மற்றும் வழி கேடுகள் அனைத்தயும் இந்த பதிலில் கூறி விட முடியாது.
மேலதிக விபரங்களுக்கு பின் வரும் இலக்கங்களில் கூறப் பட்டுள்ள பதில்களை பார்க்கலாம் : ( 101272 ) ,  ( 43458 ) , ( 44970 ) , ( 4569 ) , (1148 ) , ( 20738 ) , ( 21500 ) , ( 125890 ) .


“அஹ்ளுல் பைத்” எனப் படும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விடயத்தில் “அஹ்லுஸ் சுன்னாஹ்” கொள்கையையை பார்க்க : (125874 )
உண்மையை அறியவும், நேர்வழி பெறவும் இறைவனை கெஞ்சி துஆ கேட்பீராக.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

http://islamqa.info/ar/170238

அரபியில்:ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்

மொழிபெயர்த்தவர்:
முஹம்மத் மஹ்தூம் பின் அப்துல் ஜப்பார்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d