கேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா? அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம்.
பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை செய்வதன் மூலம் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுகிறான், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
குஃரல் அஸ்கருக்கு(சிறிய குஃப்ருக்கு) உதாரணம் நபி صلى الله عليه وسلم கூறியது:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு – குஃப்ரு(போன்ற குற்றச்செயல்) ஆகும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7076.
மேலும்,
நபி(صلى الله عليو سلم) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7077.
இது சிறிய குஃப்ராகும், ஒரு ஆத்மாவை கொலை செய்வது மிகப்பெரிய குற்றம், பெரும் பாவம், பெரிய ஹராமான செயல் , ஆனால் அதை செய்தவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாக கருதப்பட மாட்டான்.
– ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அல் ஃபவஸான்,. மஜ்மூ அல் ஃபதாவா அல் ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்.
மொழிப்பெயர்ப்பு: நயீம் இப்னு அப்துல் வதூத்
سؤال: هل للكفر أنواع ودرجات بعضها أعظم من بعض، أم أنه درجة واحدة؟ وإذا كان له درجات، فمن أيها يكون سب الدين أو الرب أو الرسول والعياذ بالله من ذلك؟
الجواب: نعم، الكفر -والعياذ بالله- درجات، بعضه أشد من بعض، منه كفر يخرج من الملة، ومنه كفر دون ذلك، كفر أصغر، وسب الدين أو سب الله أو رسوله، هذا من الكفر الأكبر المخرج من الملة – والعياذ بالله -.
وأما الكفر الأصغر فمثل قوله صلى الله عليه وسلم: «سباب المسلم فسوق، وقتاله كفر» ، وقوله صلى الله عليه وسلم: «لا ترجعوا بعدي كفارًا، يضرب بعضكم رقاب بعض» ، فهذا من الكفر الأصغر الذي لا يخرج من الملة، فقتل النفس جريمة عظيمة، وإثم كبير ومحرم عظيم لكنه لا يصل إلى درجة الكفر المخرج من الملة.
[صالح الفوزان، مجموع فتاوى فضيلة الشيخ صالح بن فوزان، ١٥/١]
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: