முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…

முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த யூத சிறுவன் மரணத்தருவாயில் இருக்கும்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் சென்று கலிமாவை கூறும்படி கூறினார்கள்

ஆனால் ஒரு மனிதன் காபிரான நிலையில் மரணித்து விட்டார் என்பது தெளிவாக தெரிந்து விட்டால் ஒரு முஸ்லிமான ஜனாஸாவுக்கு செய்யவேண்டிய கடமைகளை அந்த காபிரான ஜனாஸாவுக்கு செய்ய முடியாது. அதேபோன்று அவருக்காக வேண்டி அல்லாஹுத்தஆலாவிடத்தில் பாவமன்னிப்புத் தேடுவதும் கூடாது

1-அல்லாஹுத்தஆலா கூறுகிறான்

நபிக்கோ,-விசுவாசிகளுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்போருக்காக–அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்கு தெளிவானதன் பின்னர் – மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்ல.
(அல்குர்ஆன் : 9:113)

2-அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவதும்.

ஸஹீஹ் புகாரி : 1240.

3- இமாம் மாலிக்,அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

ஒரு முஸ்லிமுக்கு காபிரை குளிப்பாட்டுவது கபன் செய்வது கூடாது
ஷரஹுல் முகத்தப் 5/153

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்
“அன்றியும், அவர்களில் இறந்துபோன எந்த ஒருவரின் மீதும் ஒருபோதும் நீர் தொழுகையும் வைக்காதீர், அவருடைய கப்ரின்மீதும் (மன்னிப்புக்கோர) நிற்கவும் வேண்டாம், (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள், இன்னும் அவர்கள் பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்.”
(அல்குர்ஆன் : 9:84)

இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவரிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்கப்படுகிறது

“முஸ்லிம் அல்லாதவர்களின் ஜனாஸாவில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்வது கூடுமா?”

“முஸ்லிம் அல்லாதவர்களின் ஜனாஸாவில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்வது கூடாது. ஏனெனில் அது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யவேண்டிய உரிமை. ஒரு முஸ்லிம் காபிருக்கு ஸலாத்தை கொண்டு ஆரம்பிக்கக் கூடாதது போன்று அது காஃபிர்களுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய உரிமைகளில் உள்ளது அல்ல.
அந்தக் காபிர் யாராக இருந்தாலும் அவருடைய ஜனாஸாவை பின்தொடர்வதன் மூலம் அதை கண்ணியப்படுத்துவது கூடாது. அவர்
மிக நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே”

பதாவா நூருன் அலத்தர்ப் :181

ஆக ஒரு காபிர் மரணத் தருவாயில் இருக்கும் போது அவரிடம் சென்று கலிமாவை கூறும்படி கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.அவர் காபிரான நிலையில் மரணித்துவிட்டால் அவருடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது, கபன் செய்வது, பின்தொடர்வது, அவர்களின் மத சடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்வது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. யாரும் அவரை புதைப்பதற்கு இல்லை என்றால் அந்த நேரத்தில் அவரை புதைத்துவிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய தந்தையின் சகோதரர் மரணித்தபோது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து “நீங்கள் உங்கள் தந்தையை புதைத்து விட்டு வாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஹ்ஸன் அல்கமி (ஆசிரியர் மர்கஸு அல்கமா)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply