முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கேள்வி:
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக. இந்த கேள்வியானது சமீப காலங்களில் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அநியாயக்காரர் என தைரியமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள் (அவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?)

அல்லாஹ் அவர்களை சபிப்பானாக.மேலும் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபிப்பவர்களை (தனது அருளை விட்டும் தூரமாக்கி) அவமானப்படுத்துவானக.அவர் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் கன்னியமான தோழர்களில் ஒருவராக இருந்தார்.அல்லாஹ் முஆவியா ரழி மூலம் முஸ்லீம்களை ஒன்றுபடுத்தினான்.மேலும் பல்வேறு சோதனைகள் மற்றும் வழிகெட்ட பிரிவுகளுக்கு எதிராக நின்று அதை அடக்கினார்.அவருக்கு நிறைய சிறப்புகள் இருக்கிறது.(அல்லாஹ் அவரை பொருந்தி கொள்வானாக).இந்த மக்கள் அவரை வெறுக்கிறார்கள், அவர்கள் இஸ்லாத்திற்காக பணியாற்றினார்கள். இவர்கள் இலாத்திர்க்காக பணியற்றிவரை வெறுக்கிறார்கள்.அவர் அவருடைய கிலாபத்தில் இஸ்லாத்திற்கு வெற்றியை கொடுத்தார் மேலும் முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி வலிமையாக்கினார்.(அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக).அவர் ஞானத்தில் சிறந்தவர் மற்றும் நேர்மையானவர்.அவர் தனது காலத்தில் தீய மற்றும் பித்அத் செய்ய கூடிய மக்களை தனது ஞானத்தாலும் உலக அறிவாலும் வென்றார்.(அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக).அவருக்கு நிறைய சிறப்புகள் உள்ளன.ஆனால் இந்த மக்கள் அவரை வெறுக்கிறார்கள், ஏனென்றால் அல்லாஹ் அவர் மூலம் உம்மத்தை உறுதிப்படுத்தினான். மேலும் அவர் மூலம் சோதனைகளையும் குழப்பங்களையும் நீக்கினான்.இதனால் தான் அவர்கள் இவரை வெறுக்கிறார்கள்.

 

பதிலளித்தவர்:ஷெய்ஹ் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹபீதஹுல்லாஹ்)

 

வீடியோ வடிவில் பார்வையிட:

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: