நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒன்றைப் பின்னற்றுவது அவசியமா?

கேள்வி: நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒன்றைப் பின்னற்றுவது அவசியமா?

பதில்:
ஒரு முஸ்லிமுக்கு நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒரு மத்ஹபில் இணைந்து கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதே அதிகமான உலமாக்களில் கருத்தாகும்.

நான்கு மத்ஹப்களில் ஒன்றில் இணைவது அனுமதியுள்ளது ஆனால் அவசியம்,கட்டாயம் கிடையாது
ஒரு முஸ்லிமிற்கு இணைந்து கொள்ளவும் முடியும் இணையாமல் இருக்கவும் முடியும்.

ஆனால் குறித்த ஒரு மத்கபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது ஹராமாகும்.ஒருபோதும் இப்படி நடப்பது கூடாது.
யாருடைய ஆதாரம் பலமாக இருக்கின்றதோ அப்படியான அங்கீகரிக்கப்பட்ட உலமாக்களின் கருத்துக்களை எடுக்க முடியும்.ஆனால் மக்களை குறித்த ஒரு மத்ஹப்பைஜ பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவது கூடாது.
ஏனெனில் மத்ஹபுகளை பின்பற்றுவது கடமை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆதாரமின்றி மக்களுக்கு கடமையாக்குவது கூடாது.அதேபோன்று மதஹப்களைப் பின்பற்றுவது நான்கு மத்கப்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இப்படி இருக்கும் போது எப்படி அவர்களுக்குப் பின் வந்தவர்களுக்கு கடமையாக இருக்க முடியும். இந்த உம்மத்தின் ஆரம்பத்தில் கூட கடமையாக இருக்கவில்லை. மார்க்கம் என்பது ஒன்றுதான். நான்கு மதுஹபகளுக்குப் பின் புதிதாக எந்த மார்க்கமும் வரவில்லை

நான்கு மத்ஹபுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது கடமையாக இருந்திருந்தால் ஸஹாபாக்களின் மத்ஹப்களைப் பின்பற்றுவதே கடமையாக மிக சிறந்ததாக இருந்திருக்கும்.
ஸஹாபாக்களுடமும் மார்க்க சட்டங்களில் அதிகமான கருத்துக்கள் இருந்தன. எவர் முஸன்னத் அப்திர் ரஸ்ஸாக், முஸன்னஃப் இப்னு அபீஷைபா இதுபோன்ற புத்தகங்களை வாசிக்கறாரோ அவர் ஸஹாபாக்களின் அதிகமான மார்க்க சட்டங்களின் கருத்துக்களை கண்டு கொள்வார்.

அப்படி பின்பற்றுவதாயின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பின்பற்றுவது நான்கு மத்ஹப்களை பின்பற்றுவதை விட மிகச் சிறந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குறித்த ஒரு ஸஹாபியைப் பின்பற்றுவது கடமை என்று எந்த இமாமும் கூறவில்லை இதனால் இவர்களுக்குப் பின் வந்தவர்களை பின்பற்றுவதும் கடமை கிடையாது.

(ஆக குர்ஆனையும் சுன்னாவையும் ஸஹாபாக்களின் விளக்கத்தின் படி பின்பற்றுவதே எம் கடமையாகும்)

அஷ்ஷெய்ஹ் ஸுலைமான் அர்ருஹைலி ஹபிழஹுல்லாஹ் அவர்களில் ஆடியேவிலிருந்து…

மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி (ஆசிரியர்:மர்கஸு அல்கமா)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply