தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?

___﷽_____

 

கேள்வி:

தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?

 

பதில்:

🎙 ஷைய்ஃக் காலித் பின் அப்தில்லாஹ் அல்-முஸ்லிஹ் (ரஹ்)கூறுகின்றார்கள்.

 

▪️ தொழுகையில் அசைவுகளுக்கு பல சட்டங்கள் உள்ளன.

 

▪️ வாஜிபான அசைவுகள், வெறுக்கப்பட்ட(மக்ரூஹ்) அசைவுகள்,அனுமதிக்கப்பட்ட அசைவுகள் இருக்கிறது.

 

▪️ சில சந்தர்பங்களில் தொழுகையில் அசைவது அல்லது நகர்வது கடமையாகவே சுன்னத்தாகவோ ஆகும்.

 

▪️ சுருக்கமாக சொன்னால் தொழுகையில் ஏற்படுகின்ற அசைவுகள் இஸ்லாமிய மார்க்க சட்டங்களில் ஐந்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

▪️ நீங்கள் கேட்கின்ற இந்த வகையான ரிங்டோன் ஆஃப் செய்வதில் உள்ள அசைவு ஒன்று வாஜிபு அல்லது முஸ்தஹப் என்ற இரு நிலைகளில் ஒன்றாக இருக்கும்.

 

▪️ காரணம் சில அசைவுகள் மக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதை தடுக்கிறது மற்றும் அவர்களின் சிந்தனையை சிதரடிக்காமல் இருக்கும்.

 

▪️ ஹாரம் அல்லாத அனுமதிக்கப்பட்ட ரிங்டோனாக இருந்தாலும் அது தொழுகையாளிகளின் கவனத்தை திசை திருப்பும்.

 

▪️ எனவே தொழுகையின் போது தொலைபேசியை அணைப்பது (OFF) செய்வது தனக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் நன்மையாகும்.

 

▪️ தொழுவதற்காக முற்படும்போது ஒவ்வொருவரும் மொபைல் ஃபோனை ஆஃப் செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும்.

 

▪️ ஆனால் கவனக்குறைவால் அல்லது மறதியின் காரணமாக மொபைல் போன் ஆஃப் செய்ய மறந்து தொழுகையின் இடையில் அழைப்புகள் (calls) வந்தால், அதை விரைந்து ஆஃப் செய்தல் வேண்டும்.

 

▪️அதற்காக வேண்டி தொழுகையில் அசைவுகள் ஏற்படுவது சுன்னத்தாகும்.

 

▪️அதேபோன்று அனுமதிக்கப்படாத மற்றும் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற ரிங்டோனாக இருந்தால் அதனை ஆஃப் செய்வது கட்டாயமாகும்.

 

📽️அரபி மூலம் :

மொழிபெயர்ப்பு: السلفي -கற்கைக்கூடம்

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply