சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார்.

பதில்:

சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه)

இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது ஷரியத்தில் ஆகுமானது என்பதை காட்டுகிறது

மேலும் ஒரு ஹதீஸில்

 இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:

“ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.”, என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்விரு ஸஹீஹான ஹதீஸ்களும் ஸஜ்தாவில் துஆ செய்வது ஷரீயத்த்துக்குட்பட்டது என்பதை காட்டுகின்றன.

மேலும்:

அபூஹுரைரா (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில்

للَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ ‏

அல்லாஹும் மஃக்பிர்லீ தம்பீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆகிரஹு, வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும் பெரியதையும்,ஆரம்பமாகச் செய்ததையும் இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.)

(ஸஹீஹ் முஸ்லிம்)

ஆகையால் நபியின்ﷺ செயலின் மூலமும் சொல்லின் மூலமும் ஸஜ்தாவில் துஆ செய்வது ஆகுமானது என்பது தெரிகிறது.

ஆகையால் முஃமின் கடமையான, உபரியான அனைத்து தொழுகைகளிலும் ஸஜ்தாவில் துஆ செய்யலாம், ஏனெனில் நபி ﷺ அவர்கள் அதை நமக்கு ஏவினார்கள், அவர்களும் செய்தார்கள்.

மூலம் இமாம் இப்னு பாஸ்: https://binbaz.org.sa/fatwas/11057/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D8%A7%D8%A1-%D8%A7%D8%AB%D9%86%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%B3%D8%AC%D9%88%D8%AF

கேள்வி 2:
மக்களிடம் தொழுகை முடிந்த பின்பு தனியாக ஒரு ஸஜ்தா செய்து அதில் துஆ கேட்கும் வழக்கம் பரவி உள்ளது, இவ்வாறு செய்வது ஆகுமானதா? இதற்க்கு ஆதாரம் உள்ளதா? நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்து இது குறித்து ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துள்ளதா? அல்லது ஸஹாபாக்கள் رضوان الله عليهم அவர்களிடமிருந்து வந்துள்ளதா?

பதில்: இந்த ஸஜ்தா – ஸஜ்ததுஸ் ஸஹ்வு (தொழுகையில் ஏதாவதை மறந்து விட்டதற்காக செய்யும் ஸஜ்தாவாக) இருந்தால், அது ஷரியத்திற்கு உட்பட்ட ஸஜ்தாவாகும், அதில் தொழுகையின் ஸஜ்தாவில் ஓதுவதை போலவே ஓதவேண்டும் – சுபஹான ரப்பீ அல் அ ‘லா என்று சில முறை ஓதி விட்டு பின்னர் விரும்பிய துஆவை கேட்கலாம், மறதிக்கான ஸஜ்தா இல்லை என்றால், இவ்வாறு தனியாக ஸஜ்தா செய்வது பித்அத் ஆகும், அவ்வாறு செய்வதற்க்கு அனுமதி இல்லை, ஏனென்றால் நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இதை ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் )

இவ்வாறான ஸஜ்தாவை நபி الله عليه وسلم அவர்கள் கற்றுத்தரவும் இல்லை அவர்கள் செய்ததும் இல்லை, ஆகையால் அது நிராகரிக்கப்பட்டது.
அல்லாஹ்விடமே வெற்றியும் உதவியும் இல்லாது, அல்லாஹ்வின் தூதரின் மீதும் அவரின் குடும்பத்தார், ஸஹாபாக்கள் மீதும் ஸலாத்தும் பாதுகாப்பும் அல்லாஹ் பொழிவானாக.

[மூலம்: சவுதி அரேபியாவின் நிரந்தர மார்க்கத்தீர்ப்பு குழு ]

கேள்வி 3: ஒரு மனிதர் தொழுகையில் அல்லாமல் தனியாக ஸஜ்தா செய்து, அதில் துஆ கேட்கலாமா?

பதில்: தனியாக ஸஜ்தா மட்டும் செய்வதற்கு இரண்டு தருணங்களில் தவிர ஷரியத்தில் இடம் இல்லை.

1) ஸஜ்ததுஷ் ஷுகர் (அல்லாஹ்வரிக்கு நன்றி கூறும் பொருட்டு செய்யும் ஸஜ்தா ): அல்லாஹ் அவருக்கோ அல்லது பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்குமோ கொடுத்த ஒரு அருட்கொடைக்காக, அல்லது நீக்கிய ஒரு சிரமத்திற்காக நன்றி சொல்வதற்காக ஸஜ்தா செய்வது
2)ஸஜ்தத்துத் திலாவா (குர்’ஆனில் ஸஜ்தா வசனங்கள் ஓதும் போது செய்யும் ஸஜ்தா ).

இதற்கு அன்றி  தொழுகையில் அல்லாமல் ஸஜ்தா செய்வது கூடாது

ஷேக் ஸாலிஹ் அல் -ஃபவ்ஸான்

الجواب:

سنة الدعاء في السجود، سنة، الدعاء في السجود أمر به النبي ﷺ في صحيح مسلم عن أبي هريرة  عن النبي ﷺ أنه قال: أقرب ما يكون العبد من ربه وهو ساجد؛ فأكثروا الدعاء وهذا حديث صحيح، يدل على شرعية الدعاء في السجود، ولهذا قال ﷺ: أقرب ما يكون العبد من ربه وهو ساجد؛ فأكثروا الدعاء وفي حديث ابن عباس عند مسلم -رحمه الله- في الصحيح يقول ﷺ: أما الركوع فعظموا فيه الرب، وأما السجود فاجتهدوا في الدعاء، فقمن أن يستجاب لكم يعني: حري أن يستجاب لكم، فهذان الحديثان الصحيحان يدلان على شرعية الدعاء في السجود.

وثبت عنه ﷺ: أنه كان يدعو في سجوده ويقول: اللهم اغفر لي ذنبي كله، دقه وجله، وأوله وآخره، وعلانيته وسره فقد ثبت هذا من فعله، ومن قوله، عليه الصلاة والسلام.

فيشرع للمؤمن أن يدعو في السجود في الفرض والنفل جميعًا؛ لأن الرسول أمر بهذا، وفعله -عليه الصلاة والسلام-نعم.

المقدم: جزاكم الله خيرًا. 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply