குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?

கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ

எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக!

என்று கேட்பது.

பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது.

உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ

எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக!

ஸூரத்துல் ஃபுர்கான்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக

ஸூரதுல் பகரா

رَبَّنَا لا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே

ஸூரா ஆலி இம்ரான்

இது போன்ற ஆயத்துகளை துஆ கேட்கும் நிய்யத்தில் வாசிப்பதில் தவறில்லை, ஆனால் கிராஅத்  ஓதவேண்டும் எனும் எண்ணத்தில் ஸுஜூதிலும் ருகூவிலும் ஓதுவது தவறு. ஏனென்றால் நபி صلى الله عليه وسلم ருகூ மற்றும் ஸுஜூதில் குர்ஆன் ஓதுவதை தடுத்துள்ளார்கள்.

தொழுபவர், ருகூ, ஸஜூதில் ஓதக்கூடாது, கியாமில்(நிற்கும் போது) தான் ஓத வேண்டும்.

ஆனால் குர்ஆனில் வரும் ஒரு துஆவை, துஆ கேட்கும் நோக்கத்தில் ஓதினால் தவறில்லை, அல் ஹம்து லில்லாஹ்.

இமாம் இப்னு பாஸ்: https://binbaz.org.sa/fatwas/10074/حكم-الدعاء-بادعية-القران-حال-السجود

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply