இந்த துஆவை தினமும் காலை மாலையில் ஓதி வந்தால் அன்று தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவீர்

உஸ்மான் இப்ன் அஃப்ஃபான் رضي الله عنه கூறியதாக அபான் இப்ன் உஸ்மான் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :

‘யார் ஒருவர் பிஸ்மில்லாஹில்லதீ லாயதுர்று மஇஸ்மிஹி ஷைஉன் ஃபிளர்தி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ்ஸமீ உல்அளீம் (அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு, அவன் பெயரைச்சொன்னால் பூமியிலும் வானங்களிலும் எந்த தீங்கும் பாதிக்காது. அவனே அனைத்தையும் பார்ப்பவன் அனைத்தையும் அறிந்தவன் ) என்று மூன்று முறை கூறுகிறாரே அவரை காலை வரை எந்த திடீர் தீங்கும் தீண்டாது. யாரொருவர் அதை காலையில் மூன்று முறை கூறுகிறாரே அவரை மாலை வரை எந்த திடீர் தீங்கும் தீண்டாது ” என்று கூற நான் கேட்டுள்ளேன். “

இந்த ஹதீஸை அறிவிப்பவர் கூறுகிறார், “ஆனால் அபான் இப்ன் உஸ்மானிற்கு பக்கவாத நோய் இருந்தது, இந்த ஹதீஸை கேட்டுக்கொண்டிருந்தவர் அவரை பார்த்தார். அப்பொழுது அபான் ‘உமக்கு என்ன நேர்ந்தது, என்னை இப்படி பார்க்கிறீர்?நபி صلى الله عليه وسلم அவா்களின் மீது, நானும்  பொய் சொல்லவில்லை உஸ்மானும் பொய் சொல்லவில்லை, ஆனால் எனக்கு பக்கவாதம் வந்த அந்த நாள் இந்த துஆவை கேட்க மறந்து விட்டேன் ‘ என்று கூறினார்”

[அபூ தாவூத்.]

இமாம் திர்மிதி சில வார்த்தை மாற்றங்களுடன் இதே ஹதீஸை அறிவிக்கிறார். இமாம் அல் திர்மிதி இதை ஹசன் ஸஹீஹ் கரீப் வகை ஹதீஸ் என்று கூறுகிறார், மேலும் இமாம் இப்ன் அல்கய்யிம், இமாம் அல்அல்பானி ஆகியோர் இதை ஸஹீஹ் என்று கூறுகிறார்கள்.

துஆவின் அரபி மூலம்:

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

Dr. அப்துர்ரஸ்ஜாக் அல் பத்ர் கூறுகிறார்: இது மிக சிறந்த துஆக்களில் ஒன்று, இதை ஒரு முஸ்லிம் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஓதி வருவது முக்கியம், அதனால் அவர் திடீர் துன்பங்களிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் அல்லாஹ்வின் நாட்டத்தினால் பாதுகாக்கப்படுவார். இமாம் குர்துபி இந்த ஹதீஸை குறித்து, “இது ஸஹீஹான அறிவிப்பு, உண்மை சம்பவங்களால் நிரூபிக்கப்பட்ட உண்மையான சொல்.  நான் இதை கேட்ட நாள் தொட்டு செயல் படுத்தி வருகிறேன், என்னை எந்த தீங்கும் தீண்டியதில்லை, இந்த துஆவை விட்டாலே தவிர. ஒரு நாள், மதீனாவில் என்னை ஒரு தேள் கொட்டியது, யோசித்த பொழுதுதான் தெரிந்தது நான் அன்று அந்த துஆவை கேட்க மறந்து விட்டேன் என்பது.”

[அல் ஃபுதூஹாத்துரப்பாநீ ]

 

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply