அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

கேள்வி:

குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

பதிலின் சுருக்கம்:

(இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல.

பதில்:

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்:

அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் கையாளுவதும் கட்டாய கடமை என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அல்குர்ஆனை மதிப்பதும் அதைக் கவனமாகக் கையாளுவதும் கடமையாகும் என்பதை அறிஞர்கள் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர்.”

பார்க்க: அல்-மஜ்மு’, 2/85

அல்குர்ஆனை அவமதித்ததற்கு உதாரணம்:

குர்ஆனை அவமதிக்கும் பல உதாரணங்களை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதில் பின்வருவன அடங்கும்:

அதை தரையில் அல்லது அசுத்தமான இடங்களில் எறிதல், அல்லது மிதித்தல், அல்லது அதன் மீது துப்புதல், மேலும் அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவமரியாதையை உண்டாக்கும் பிற செயல்களை செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

முஷாஃப் இருக்கும் அறையில் உடலுறவு கொள்ளலாமா?:

ஒரு முஷாஃப்  இருக்கும் அறையில் ஒரு ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது வேறு அறைகள் உள்ளனவா இல்லையா என்பதை உள்ளடக்காது.

தற்போதைய காலத்தில் பெரும்பாலான முஸ்லீம்களின் வீடுகளில் முஷாஃப்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் முஷாஃப் இருக்கும் அறையில் ஒரு ஆண் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்று எந்த அறிஞர்களிடமிருந்தும் எவ்வித தீர்ப்புகளும் இல்லை. அவர்களின் புத்தகங்கள் எங்களிடம் உள்ளது. அவர்களின் பார்வையில்(கருத்து வேறுபாடு உள்ள) தெளிவுபடுத்தபட வேண்டிய கொள்கையாக இருந்தால், அவர்கள் மற்ற அறிவுப் பிரச்சினைகளை விளக்கியது போல அதைக் கூறி விளக்கியிருப்பார்கள். அத்தகைய வழக்கு அல்லது அதுபோன்ற வழக்குகளை அவர்கள் குறிப்பிடாததால், அடிப்படையில் இந்த கொள்கை நடைமுறையில் உள்ளது  (அதாவது அதில் தவறில்லை) என்பதை இது குறிக்கிறது.

அல்குரானை படுக்கையறையில் வைக்கலாமா?:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்

“நான் உடலுறவு கொள்ளும் படுக்கையில் முஷாபை வைக்கலாமா? என கேட்டார்

அதற்கு இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
“ஆம்(அதில் தவறில்லை) என கூறினார்கள்.

பார்க்க: முஸன்னப் அப்துர்-ரஸாக்  (2/171), இப்னு அபிதாவூத் அல்-மசாஹிப் (446) மற்றும் அப்துல்லாஹ் யூசுப் அல்-ஜுதாய் அவர்களின் அல்-முகாதிமத் அல்-அசாசியா ஃபி ‘உலூம் அல்-குரான் (562).

சவூதி அரேபியாவின் நிரந்தரக் குழுவின் அறிஞர்களிடம் இங்கே கேட்கப்பட்டதைப் போன்ற ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:

அல் குர்ஆனை படுக்கையறைக்குள் எடுத்துச் சென்று தூங்குவதற்கு முன் படுக்கையில் ஓதுவதற்கும், முஷாபை ஒரு உலோக பெட்டியில் வைப்பதற்கும், படுக்கையறையில் வைப்பதற்கும் அனுமதி உள்ளதா?

அதற்கு அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:

“ஒருவர் குளிப்பு (ஜுனூப்) கடமையானவராக இல்லை என்றால், படுக்கையறையிலும் படுக்கையிலும்  குர்ஆனை ஓதுவது அனுமதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அவருக்கு வுளு இருந்தால் முஷாஃபிலிருந்து ஓதலாம்”

பார்க்க:ஃபதாவா லஜ்னா தாயிமா (3/67)

பொதுவாக வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் நெருக்கம் ஏற்படும் இடமான படுக்கையறையில் முஷாஃப் வைப்பது ஹராம் என்றால், அறிஞர்கள் அதனை எங்களுக்கு விளக்கியிருப்பார்கள், அலட்சியம் செய்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் இது மீண்டும் மீண்டும் நடக்கும் ஒன்று மற்றும் மக்களுக்குத் தேவையான ஒன்று மற்றும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றும் கூட…

மேலும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

Source:IslamQ&A

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply