கேள்வி:
வீட்டில் ஜமாஅத்தாக தொழுகும்போது பெண்கள் ஆண்களோடு ஒரே ஸஃப்பில் நின்று தொழலாமா ?
பதில்:
🎙️ ஷைய்ஃக் இப்னு பாஸ் (ரஹி) கூறிகின்றார்கள்.
▪️ தனியாக தொழுவதாக இருந்தாலும் பலருடன் தொழுவதாக இருந்தாலும் பெண்கள் ஆண்களுடன் ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களுக்கு பின்னால் தான் நின்று தொழ வேண்டும்.
▪️ பெண்கள் ஆண்களுடன் ஒரே ஸஃப்பில் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ நிற்க கூடாது.
▪️ ஒரு பெண் தன் கணவனோடு தொழுவதாக இருந்தாலும், அவள் ஆண்களுடன் ஒரே ஸஃப்பில் தொழுகையில் நிற்க கூடாது.*
▪️ *ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களின் வீட்டில் தொழும்போது,அனஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வலது பக்கத்திலும், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி)அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதார்கள்.
▪️ அனஸ் (ரலி) அவர்களின் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களுடன் ஒரே ஸஃப்பில் நிற்கவில்லை.
(புகாரி: 727)
▪️ ஆனால் இரண்டு ஆண்கள் மட்டும் தொழுவதாக இருந்தால் மஃமூம் (இமாமை பின்பற்றி தொழுபவர்) இமாமின் வலது பக்கம் நிற்க வேண்டும்.
▪️ அதேபோன்று இரண்டோ அதற்கு மேற்பட்டோர் இருந்தால் அவர்கள் இமாமிற்கு பின்னால் நிற்க வேண்டும்.
📽️அரபி மூலம் :
https://bit.ly/3frC8U5
மொழிபெயர்ப்பு: கற்கைக்கூடம் Telegram Channel
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: