மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ?

கேள்வி:

மரணித்த எனது நண்பருக்காக நான் உம்ரா செய்யலாமா ?

 

பதில்:

🎙️ ஷைய்ஃக் ஸுலைமான் அர்-ருஹைலி (ஹபீதஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.

 

▪️ யாராவது முஸ்லிமாக மரணித்துவிட்டால், அவர்கள் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக உம்ரா செய்யலாம்.

 

▪️ ஆனால் இவ்வாறு உம்ரா செய்யவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது.

 

▪️ அந்த நிபந்தனை என்னவென்றால், அவர்களுக்காக உம்ரா செய்வதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ரா செய்திருக்க வேண்டும்.

 

▪️ மரணித்தவர்களுக்காக இவ்வாறு உம்ரா செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை.

 

▪️ மரணித்தவரின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்களிடத்தில் அனுமதி கேட்க தேவையில்லை.

 

▪️ அவர்களுக்காக உம்ரா செய்கிறோம் என்ற நிய்யத்தோடு உம்ரா செய்தால் போதுமானதாகும்.

 

▪️ உங்கள் குடும்பத்தார்களோ, நெருங்கிய உறவினரோ நண்பரோ மரணித்து இருந்தால், அதேபோன்று முஸ்லிமாக யார் மரணித்திருந்தாலும் நீங்கள் அவர்களுக்காக உம்ரா செய்யலாம்.

 

▪️ உதாரணமாக, பல நல்ல அமல்கள் செய்த ஒரு முஸ்லிம் மரணித்து விட்டார். உம்ராவின் மூலம் அவருக்கு நீங்கள் நன்மை செய்ய நினைத்தால், நீங்கள் அவருக்காக உம்ரா செய்யலாம்.

 

▪️ ஆனால் முன்பு கூறியது போல் உம்ராவை முதலில் உங்களுக்காக செய்திருக்க வேண்டும்.என்ற நிபந்தனை மட்டும் உள்ளது.

 

📽️அரபி மூலம் :

 

மொழிபெயர்ப்பு:கற்கைக்கூடம் Telegram Channel

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply