பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 |
பொய்யர்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
பொய்யர்களுடன் இருக்கக்கூடாது:
﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ﴾ التوبة ١١٩
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)
இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், எதார்த்தமாகவோ பரிகாசமாகவோ பொய்யுரைப்பது ஆகுமானதல்ல என்று கூறிவிட்டு, மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தபரி, இப்னு கஸீர்)
தனக்கு உரிமை இல்லாததைப் பொய்யாக வாதிடுபவனுக்குச் சார்பாகப் பேசுவதும் குற்றமே:
﴿إِنَّاۤ أَنزَلۡنَاۤ إِلَیۡكَ ٱلۡكِتَـٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَیۡنَ ٱلنَّاسِ بِمَاۤ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَاۤىِٕنِینَ خَصِیمࣰا ١٠٥ وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورࣰا رَّحِیمࣰا ١٠٦ وَلَا تُجَـٰدِلۡ عَنِ ٱلَّذِینَ یَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا یُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِیمࣰا ١٠٧ یَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا یَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ یُبَیِّتُونَ مَا لَا یَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا یَعۡمَلُونَ مُحِیطًا ١٠٨ هَـٰۤأَنتُمۡ هَـٰۤؤُلَاۤءِ جَـٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِی ٱلۡحَیَوٰةِ ٱلدُّنۡیَا فَمَن یُجَـٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ یَوۡمَ ٱلۡقِیَـٰمَةِ أَم مَّن یَكُونُ عَلَیۡهِمۡ وَكِیلࣰا ١٠٩﴾ النساء ١٠٥-١٠٩
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே மோசடிக்காரர்கள் சார்பில் வாதாடுபவராக ஆகிவிட வேண்டாம். (4:105) (தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (4:106) (நபியே! பிறருக்கு தீமை செய்து அதனால்) எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான மோசடி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (4:107) இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான். (4:108) (முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்? (அல்குர்ஆன் 4:105-109).
4:105 ஆவது ஆயத்தில் மோசடிக்கார்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் யாரேனில்: தமக்கு உரிமையில்லாததை வாதிடுபவர்கள் அல்லது தம்மீது இருக்கும் கடமையை மறுப்பவர்கள். (பார்க்க: தஃப்ஸீருஸ் ஸஃதீ)
பொய்களைச் செவிமடுப்பதும் பாவமே. பொய்களை அதிகமாகச் செவிமடுப்பது முனாபிக்களின் பண்பு:
﴿سَمَّـٰعُونَ لِلۡكَذِبِ أَكَّـٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَاۤءُوكَ فَٱحۡكُم بَیۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن یَضُرُّوكَ شَیۡـࣰٔاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَیۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ یُحِبُّ ٱلۡمُقۡسِطِینَ﴾ المائدة 42
(முனாஃபிக்கள்) பொய்யையே அதிகமாக செவிமடுக்கின்றவர்கள்; – பாவமான (தடுக்கப்பட்ட)தையே அதிகமாக உண்பவர்கள், ஆகவே, அவர்கள் (தீர்ப்புத்தேடி) உம்மிடம் வந்தார்களானால், அவர்களுக்கிடையில், தீர்ப்பளிப்பீராக! அல்லது அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! நீர், அவர்களைப் புறக்கணித்துவிட்டாலும் அவர்கள் யாதொரு தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்ய முடியாது, இன்னும், நீர் தீர்ப்பளித்தால் நீதியைக்கொண்டு அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 5:42)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
-ஹுஸைன் இப்னு றபீக் மதனி
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:
1 thought on “பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 04 | ”