பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 01 |

பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 01 |

 

இஸ்லாம் நற்பண்புகளின் மார்க்கம். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நற்குணங்களால் உயர்வும் தீய குணங்களால் தாழ்வும் அடைகின்றான். இஸ்லாம் நாவொழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நாவும் மர்மஸ்தானமுமே அதிகமான மனிதர்கள் நரகத்தில் நுழைவதற்குக் காரணங்களாக இருக்கின்றன என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

– திர்மிதி 2004 | ஸஹிஹ்

நாவினால் வெளிப்படும் மிக மோசமான குணங்களில் ஒன்று தான் பொய் பேசுவது. குர்ஆனும் ஹதீஸும் இதனை மிக வன்மையாக் கண்டித்துள்ளன. பொய் பேசுவதால் இம்மையிலும் மறுமையிலும் பல்வேறு வகையான மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. முதலில் பொய் பற்றி மார்க்கம் போதிக்கும் சில உபதேசங்களைப் பார்ப்போம்:

 

பொய் சொல்பவனுக்கு கேடுதான்:

﴿وَیۡلࣱ لِّكُلِّ أَفَّاكٍ أَثِیمࣲ﴾ [الجاثية ٧]

அதிகம் பொய்கூறுகின்ற, அதிகம் பாவம் செய்கின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 45:7)

 

பொய் ஈமான் இல்லாதவர்களின் பண்பு;

﴿إِنَّمَا یَفۡتَرِی ٱلۡكَذِبَ ٱلَّذِینَ لَا یُؤۡمِنُونَ بِـَٔایَـٰتِ ٱللَّهِۖ وَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡكَـٰذِبُونَ﴾ [النحل ١٠٥]

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

 

பொய் முனாஃபிக்களின் பண்பு:

பார்க்க: அல்குர்ஆன் 9:107

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  آيَةُ المُنافِقِ ثَلاثٌ: إذا حَدَّثَ كَذَبَ، وإذا وعَدَ أخْلَفَ، وإذا اؤْتُمِنَ خانَ.

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’.

– ஸஹிஹுல் புஹாரி 33

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: أَرْبَعٌ مَن كُنَّ فيه كانَ مُنافِقًا خالِصًا، ومَن كانَتْ فيه خَصْلَةٌ منهنَّ كانَتْ فيه خَصْلَةٌ مِنَ النِّفاقِ حتّى يَدَعَها: إذا اؤْتُمِنَ خانَ، وإذا حَدَّثَ كَذَبَ، وإذا عاهَدَ غَدَرَ، وإذا خاصَمَ فَجَرَ.

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய் பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; வாக்குவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’.

– ஸஹிஹுல் புகாரி 34

 

பொய் நரகவாசிகளின் பண்பு:

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  إنَّ الصِّدْقَ يَهْدِي إلى البِرِّ، وإنَّ البِرَّ يَهْدِي إلى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حتّى يَكونَ صِدِّيقًا. وإنَّ الكَذِبَ يَهْدِي إلى الفُجُورِ، وإنَّ الفُجُورَ يَهْدِي إلى النّارِ، وإنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حتّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذّابًا.

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்குரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

– ஸஹிஹுல் புகாரி 6094

 

அதிகமாக பொய் பேசுவது ஷைத்தான்களுடன் தொடர்புள்ளவர்களான சூனியக்காரன், குறிசொல்லுபவன் போன்றவர்கள், மற்றும் ஈமானற்ற கவிஞர்கள் ஆகியோரின் பண்பாகும்:

பார்க்க: அல்குர்ஆன் 26:221-227

 

பொய் உள்ளத்தில் நெருடலாக இருக்கும்:

سنن الترمذي ‏2518: عن الحسن بن علي بن أبي طالب مرفوعا: دَع ما يَريبُك إلى ما لا يريبُك. فإنّ الصِّدقَ طُمَأنينةٌ وإنَ الكَذِبَ رِيبةٌ

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு (உள்ளத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதை விட்டு விட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாததின் பக்கம் சென்று விடு. ஏனென்றால், உண்மை (உள்ளத்தில் நெருடலற்ற) அமைதியாக இருக்கும்; பொய்யோ சந்தேகமாக இருக்கும். – திர்மிதி 2518 & நஸாஈ 5711

இந்த ஹதீஸை பல ஹதீஸ் துறை அறிஞர்கள் ஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர். உதாரணமாக பார்க்க:

‏المسند الصحيح للوادعي (218)

தொகுப்பு : ஹுஸைன் இப்னு றபீக் மதனி

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

1 thought on “பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 01 |”

  1. Pingback: பொய் ஒரு பெரும் பாவம் | தொடர் 02 | - IslamQ&A Tamil

Leave a Reply

%d