பணமாற்று வியாபாரத்தின் சட்டம்

கேள்வி:
பண மாற்றம் குறித்த சட்டம் என்ன? ஒரு நாட்டின் பணத்தை மற்றோர் நாட்டின் பணத்திற்கு விற்று ஈட்டும் லாபம் ஹலாலாகுமா? மேலும், உதாரணமாக, என்னிடம் 1000 ரியால்கள் இருந்து அதை நான் யூரோக்களாக மாற்றி, உடனே அதை டாலர்களுக்கு விற்று, மீண்டும் உடனே அந்த டாலர்களை ரியால்களாக மாற்றுகிறேன். சர்வதேச பண மதிப்பு ஏற்றத்தின் படி என்னிடம் 1010 ரியால்கள் கிடைத்துவிடுகிறது. இதன் சட்டம் என்ன?
பதில்:
எல்லாப்புகழும் இறைவனுக்கே.

நீங்கள் விவரித்தது போல பண மாற்று வியாபாரம் செய்வது ஹலாலாகும். ஒரே ஒரு நிபந்தனை உண்டு, ஒப்பந்தம் நடை பெற்ற அதே சமயத்தில்,  உடனுக்குடன் பணமாற்றம் முடிவடைந்திருக்க வேண்டும்.

ரியால்களை யூரோக்களுக்கு பகரமாக மாற்றலாம், ஒப்பந்தம் நடைபெற்ற அதே நிலையில் கைமாற்றம் நடக்கும் பட்சத்தில். மீண்டும் அந்த யூரோக்களை டாலர்களாக மாற்றலாம், அதே நிபந்தனையை பின்பற்றினால். இதில் கிடைக்கும் லாபம் அனுமதிக்கப்பட்டது. இதற்கு ஆதாரம் நபியின் صلى الله عليه وسلم சொல்:

 அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும், கோதுமையை கோதுமைக்கும், பார்லியை  பார்லிக்கும், பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், உப்பை உப்பிற்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். இந்த இனங்கள் மாறுபட்டிருக்கும்போது உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் நீங்கள் விரும்பியபடி விற்றுக்கொள்ளுங்கள்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்.

[ஸஹீஹ் முஸ்லிம் பாடம், நாணயமாற்று வியாபாரமும் வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கமாக விற்பதும். ].

மேலும் ஃபத்வாவிற்கான நிரந்தர அமைப்பின் அறிஞர்கள் கூறினார்கள்:

பண மாற்று வியாபாரம், பணத்தை கொடுத்து உடனுக்குடன் மாற்றப்பட்டால், அது அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியை உடனே கொடுத்துவிட்டு, இன்னொரு பகுதியை தாமதப்படுத்தி கொடுக்க ஒப்பந்தம் செய்தால், இது தடை செய்யப்பட்டது.

நபியிடம் இருந்து ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வருகிறது:

“இந்த இனங்கள் மாறுபட்டிருக்கும்போது உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் நீங்கள் விரும்பியபடி விற்றுக்கொள்ளுங்கள்.”

 فتاوى اللجنة الدائمة 13/458 – [அப்துல் அஸீஸ் இப்ன் அப்துல்லாஹ் இப்ன்  பாஸ், அப்துர்ரஸ்ஜாக் அல்-அஃபீஃபீ, அப்துல்லாஹ் இப்ன் குதய்யான் ]

-பார்க்க –

Question

What is the ruling on exchanging currency notes? Is the profit that results from selling one currency for another at the market price permissible?
Also, what is the ruling if, for example, I change one thousand riyals into euros, then I immediately change it into dollars, then I immediately change it into riyals, and I end up with one thousand and ten riyals, based on the global prices for currency exchange?.

Answer

Praise be to Allaah.Trading in currencies in the manner described is permissible, subject to the condition that the exchange be completed in the same sitting as the contract is made. It is permissible to sell riyals for euros, subject to the condition that the handover take place in the same sitting as the contract is made. It is also valid to exchange the euros for dollars after that, so long as the same condition is met. So the profit that is made from this transaction is permissible. The evidence for that is the words of the Prophet (peace and blessings of Allaah be upon him): “Gold for gold, silver for silver, wheat for wheat, barley for barley, dates for dates, salt for salt, like for like, hand to hand. If the types are different then sell however you like, so long as it is hand to hand.” Narrated by Muslim, 1587.

It says in Fataawa al-Lajnah al-Daa’imah (13/458)

In exchanges of currency it is essential that the exchange be completed in the same sitting as the contract is made. It is not permissible to hand over some straight away and delay some. It is proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “If the types are different then sell however you like, so long as it is hand to hand.” End quote.

السؤال

ما الحكم في الصرافة للأوراق النقدية ؟ هل الربح الناتج عن بيع عملة نقدية بعملة نقدية أخرى حسب سعر السوق جائز ؟
أيضا ما الحكم إذا قمت على سبيل المثال بتحويل ألف ريال إلى اليورو ، ثم مباشرة قمت بتحويلها إلى الدولار ، ثم مباشرة قمت بتحويلها إلى ريال ، وأصبح معي ألف وعشرة ريالات اعتمادا على السعر العالمي لصرف العملات ؟.

نص الجواب

الحمد لله

الاتجار في العملات على الصفة التي ذكرتها جائز ؛ بشرط أن يحصل التقابض في مجلس العقد ، فيجوز بيع الريال باليورو بشرط أن يتم الاستلام والتسليم في مجلس العقد ، ويصح أيضاً تحويل اليورو إلى الدولار بعد ذلك بالشرط السابق ، وبالتالي فالربح الذي ينتج من هذا البيع هو ربح جائز ، ودليل ذلك قوله صلى الله عليه وسلم : ( الذَّهَبُ بِالذَّهَبِ ، وَالْفِضَّةُ بِالْفِضَّةِ ، وَالْبُرُّ بِالْبُرِّ ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ ، وَالتَّمْرُ بِالتَّمْرِ ، وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلا بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ ، فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ ) رواه مسلم (1587) .

 

وجاء في “فتاوى اللجنة الدائمة” (13/458) :

” يشترط لصرف العملات بعضها ببعض التقابض في مجلس العقد ، ولا يجوز استلام بعضها وتأجيل البعض الآخر ، فقد ثبت أن النبي صلى الله عليه وسلم قال : ( فإذا اختلفت الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد ) ” انتهى .

 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply