ஒருவன் விமானத்திலிருக்கும் போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்? தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில் வைத்துத் தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன் கடைசி நேரத்திற்குள் விமானம் நிலையத்தை அடைந்துவிடும் என்றிருந்தால் விமானம் நிலையத்தை அடையும் வரை காத்திருப்பது சிறந்ததா?
பதில்: விமானத்திலிருக்கும் ஒரு முஸ்லிமின் கடமை என்னவெனில் தொழுகை நேரம் வந்துவிட்டால் அவன் தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும். நின்று தொழ முடிந்தால்- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும் சுஜுதையும் நிறைவேற்ற முடிந்
தால் அவ்வாறு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நின்று தொழ முடியவில்லையெனில் உட்கார்ந்து தொழவேண்டும். அப்போது சைகை மூலம் ருகூவு, சுஜுத்செய்ய வேண்டும். நின்று தொழுதுவதற்கும் ருகூவு,சுஜுதை சைகை மூலம் அல்லாமல் முறையாகச் செய்வதற்கும் வசதியான ஓர் இடம் விமானத்தில் அவனுக்கு கிடைத்தால் அவ்வாறு செய்வது அவனுக்கு கடமையாகும். இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ
உங்களால இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
(அல்குர்ஆன் 64:16)
இம்ரான் இப்னு ஹாஸைன் (رضي الله عنه )அவர்கள் நோயுற்றிருந்த போது அவரிடம், “நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் ஒருக்கழித்துப் படுத்துத்துக் கொண்டு தொழு” என்று நபி(رضي الله عنه )அவர்கள் கூறினார்கள். (புகாரி1117)
நஸயீயின் ஸஹீஹான அறிவிப்புத் தொடரில்
“அதற்கும் இயலாவிட்டால் நிமிர்ந்து படுத்துத் கொண்டு தொழு” என்ற கூடுதலான செய்தியும் இடம் பெற்றுள்ளது.
தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுதுவிடுவதே அவனுக்குச் சிறந்தது. தரையில் இறங்கி தொழுவதற்காக அதன் கடைசி நேரம் வரை பிற்படுத்தினால் குற்றமில்லை. பொதுவான ஆதாரங்களே இதற்குச் சான்றாகும். கார், ரயில், கப்பல் ஆகியவற்றில் தொழுவதன் சட்டமும் விமானத்தில் தொழுவதன் சட்டத்தைப் பேன்றுதான்.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: